தந்தி தொலைக்காட்சியில் நேற்று இரவு 9 மணியளவில் ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் ‘விஜயகாந்துக்கு மவுசு- வாக்கு வங்கியா? காலச்சூழலா?’ என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. இதில் பேராசிரியர் அருணன்(மக்கள் நலக் கூட்டணி), வானதி ஸ்ரீனிவாசன்(பாஜக), சரவணன்(திமுக), சீமான்(நாம் தமிழர் கட்சி) ஆகியோர் பங்கேற்று பேசினர்.
விவாதத்தின் போது “மக்கள் நலக் கூட்டணியை விட அதிக வாக்குகளை நாங்கள் பெறுவோம். குறைவாகப் பெற்றால் நாம் தமிழர் கட்சியைக் கலைத்துவிட்டு, கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துவிடுகிறேன்” என்று சீமான் கூற அப்போது அருணணுக்கும் சீமானுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சீமான், “ஏய், சும்மா லூசு மாதிரி பேசிக்கிட்டு இருக்காதய்யா” என அநாகரிகமான முறையில் பேசினார். தொலைக்காட்சி விவாதங்கள் இப்போதைக்கு லூசு என்ற வார்த்தையில் முடிந்திருக்கிறது.

***************************
மேடை நாகரீகம் அப்படீன்னா....
அரசியல் என்றால் என்னவென்று ஆயிரமாயிரம் பேர் விளக்கம் சொல்லியிருந்தாலும் சுருக்கமாக இப்படி சொல்லலாம்; ஒன்றை மற்றொன்று எதிர்ப்பதுதான் அரசியல். அது இரண்டு தனிமனிதர்களுக்கிடை யிலேயோ அல்லது இரு கொள்கைகளுக்கிடையிலே யோ இருக்கலாம். அது எதுவாக இருந்தாலும் அதற்கான நாகரீக எல்லை வகுக்கப்பட்டிருக்கிறது.

அந்த நாகரீகத்தின் மீது எழுப்பப்பட்ட அஸ்திவாரத்தின் மீதுதான் இன்றும் அரசியல் ஆரோக்கியம் கட்டப்பட்டிருக்கிறது. ஆனால் இன்று அரசியல் நாகரீகம் மருவிப்போய் விட்டது. மேடை நாகரீகம் என்பது இன்றைய தலைவர்களுக்கு மறந்துபோய்விட்டது.
தனியார் தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சி ஒன்றில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் சிபிஎம் கட்சியைசேர்ந்த பேராசிரியர் அருணனும் ஒருமையில் பேசி மோதிக்கொண்ட காட்சிகள் அரசியல்நோக்கர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
தமிழக தேர்தலின் இன்றைய சூழல் குறித்த கட்சிகளின் நிலைப்பாடு தொடர்பான இந்நிகழ்ச்சி அது. விவாதத்தில் நாம் தமிழர் சீமான், பாஜக வானதி சீனிவாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி அருணன் ஆகியோர் பங்கேற்றனர். இதில் சீமான் விவாதம் நடந்த ஸ்டூடியோவில் அல்லாமல் வேறு இடத்திலிருந்து விவாதத்தில் பங்கேற்றார். இந்த விவாதத்தின்போது அதிமுக திமுகவை தோற்கடிப்பது தொடர்பாக நாம் தமிழர் சீமானுக்கும், அருணனுக்கும் வாக்குவாதம் தொடர்ந்தது.
அப்போது கம்யூனிஸ்ட் கட்சியை விட தான் ஒரு வாக்கு குறைந்து எடுத்தாலும் தான் அந்தக்கட்சியில் சேர்ந்துவிடுகிறேன் என்று குறிப்பிட்ட சீமான், தொடர்ந்து கம்யூனிஸ்ட்கட்சியில் கொள்கை இல்லை என்று குறிப்பிட்டார். அதற்கு பதிலடியாக பேசிய அருணன் ' மார்க்ஸியம் பேசிவிட்டு இனவெறிக்கருத்து பேசினீர்கள். நேற்றுவரை பெரியாரை கும்பிட்டுவிட்டு இன்று பெரியாரையே வசைபாடுகிறீர்கள். உங்களிடம் என்ன கொள்கை இருக்கிறது' என சீமானை குறிப்பிட்டார். இந்த விவாதம் முற்றியநிலையில் திடீரென ஆவேசமான சீமான், 'ஏய் என்னய்யா லுசு மாதிரி பேசுற' என நேரலையிலேயே சத்தம்போட பதிலுக்கு 'நீதான்டா லுசு, யாரைப்பார்த்து லுசு ங்கிற' என பதிலுக்கு அருணன் எகிற நேரலையில் பங்கேற்ற மற்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதன்பிறகு அவர்கள் இருவரையும் அவர்கள் சமாதானம் செய்தபின் நிகழ்ச்சி தொடர்ந்தது. லட்சக்கணக் கான பேர் பார்த்துக்கொண்டிருக்கிற ஒருநிகழ்ச்சியில், தன்னிலை மறந்து பேசுவதுதான் சீமான் போன்ற தலைவர்களுக்கு அழகா எனவும், சமூக வலைத்தளங்கள் வளர்ச்சிபெற்றிருக்கிற இன்றைய காலகட்டத்தில் தன் நடத்தை எத்தகைய எதிர்வினையை ஏற்படுத்தும் என்பது தெரியாதா என கேள்வி எழுப்புகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இனிவருங்காலங்களில் நினைக்கும்போதெல்லாம் பார்க்க வாய்ப்பு பெருகியுள்ள இந்நாளில் ஒரு நேரலைநிகழ்ச்சியில் சீமானின் இந்த பேச்சு நேயர்களை முகம்சுளிப்புள்ளாக்கியுள்ளது. எதிர்பார்த்ததுபோலவே சீமானுக்கு எதிரான கண்டனங்கள் வாத பிரதிவாதங்களுடன் சமூக வலைத்தளங்களில் பதிவேற ஆரம்பித்துவிட்டது.
60களில் காங்கிரசுக்கு டஃப் கொடுத்த திமுகவின் பேச்சுக்களாலும் செயலாலும் டென்ஷனான நேரு, சென்னை விமானநிலையத்தின் வாசலில் நின்று 'நான்சென்ஸ்' என்றார் எரிச்சலாக. ஒரு பெரிய கட்சியின் தலைவரான மக்கள் அபிமானம் பெற்ற நேருவின் இந்த வார்த்தை திமுகவை எரிச்சலுக்குள்ளாக்கினாலும் அதற்கு அவர்கள் காட்டிய எதிர்ப்பு சென்னை வந்த நேருவுக்கு கருப்பு கொடி காட்டுவது என்பதே. தேர்தலில் அரசியல் கண்ணியத்தை பேணிய தலைவர்கள் வாழ்ந்த காலம் அது.
.jpg)
காங்கிரசை எதிர்த்து 1962 ல் தேர்தல் களம் கண்ட திமுக, காங்கிரஸின் செயல்பாடுகளை மேடைதோறும் கடைபரப்பி காங்கிரசுக்கு எதிரான ஓட்டுக்களை சாதுர்யமா பொறுக்கியது. அந்த எரிச்சலில் தென் தமிழகத்தில் நடந்த ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் அண்ணாவை கடும்வார்த்தையை போட்டு வறுத்தெடுத்தார் மேடைப்பேச்சாளர் ஒருவர். மேடையின் நடுநாயகமாக இருந்த காமராஜர் பொங்கிஎழுந்தார். 'ஏய் என்ன பேசுற நீ...விஷயத்தை மட்டும் பேசு...சும்மா இப்படி பேசுனீன்னா மேடையை விட்டு எறங்கு' என்றார் நீளமான தன் கையை நீட்டியபடி. விக்கித்து அமர்ந்தார் அந்த பேச்சாளர்.
மேடைநாகரிகம் என்ற வார்த்தைக்கு மதிப்பளித்த மனிதர்கள் வாழ்ந்த காலம் அது. ஆனாலும் அப்படிப்பட்ட காமராசரையே பறவை ஒன்றொடு ஒப்பிட்டு அவமதித்தார்கள் அண்ணாவுக்குப்பின் வந்த தலைவர்கள். ஆரோக்கியமான அரசியலுக்கு உடலநலக்குறைவு ஏற்பட்ட காலம் அதுதான்.
திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர் பிரிந்தபோது எம்.ஜி.ஆர்-கருணாநிதி இருவருக்குமிடையே நடந்த கருத்துமோதல்களும் அதற்கு அவர்கள் எதிர்வினையாற்றியதும் தெரிந்தவிஷயம். அதிமுக துவங்கி சில ஆண்டுகள் கழிந்தபின் நடந்த சம்பவம் அது.
கருணாநிதி-எம்.ஜி.ஆர் மோதல் உச்சத்திலிருந்த நேரம். ஒரு மேடையில் கருணாநிதியை கடும் வார்த்தைகளால் அர்ச்சித்துவிட்டு எம்.ஜி.ஆரை வந்து சந்தித்தார் அந்த இரண்டாம் கட்டத்தலைவர். இருவரும் காரில் சென்றுகொண்டிருந்தனர். இரண்டாம் கட்டத்தலைவர், தான் கருணாநிதியை மேடையில் வறுத்தெடுத்ததை எம்.ஜி.ஆரிடம் பெருமிதமாக கூறினார். தலைவர் நம்மை பாராட்டுவார் என்பது அவரது எண்ணம். ஆனால் அந்த தலைவர் கதையை சொல்லி முடித்த அடுத்த வினாடி எம்.ஜி.ஆர் டிரைவரிடம் வண்டியை நிறுத்தச்சொன்னார்.
சம்பந்தப்பட்ட இரண்டாம் கட்டத்தலைவரை காரை விட்டு இறங்கச்சொன்னவர், “ கருணாநிதியை மேடையில் கண்டபடி பேசியதோடு இல்லாமல் அதை என்னிடமே வந்துசொல்கிறாயா...கருணாநிதியை பெயர் சொல்லிப்பேச உனக்கு என்ன் அருகதை இருக்கிறது. எனக்கும் அவருக்கும் ஆயிரம் கருத்துவேறுபாடு இருக்கலாம். ஆனாலும் ஒருகாலத்தில் எனக்கு தலைவராக இருந்தவர். அப்படிப்பட்டவரை நேற்று அரசியலுக்கு வந்த நீ எப்படி இப்படி பேசுவாய்...நான் உனக்கு தலைவர்...உன் தலைவரான எனக்கே அவர் தலைவராக இருந்தவர் என்றால் அவருக்கு என்ன மரியாதை தரவேண்டும்...அரசியல் வெளிச்சத்தில் இன்று நீ வந்துவிட்டாய் என்பதாற்காக பழசை மறக்கக்கூடாது. இனிமேலாவது மரியாதையாக பேசு” என சீறினார். பின்பு கிளம்பியது கார். சீறிச்சென்ற காரை பார்த்தபடி அதிர்ச்சியில் உறைந்துநின்றார் அந்த தலைவர். இப்படி அரசியலில் தங்கள் கண்ணியத்தை பேணிய தலைவர்கள் வாழ்ந்த காலம் அது.
மேடைநாகரிகம் என்ற வார்த்தைக்கு மதிப்பளித்த மனிதர்கள் வாழ்ந்த காலம் அது. ஆனாலும் அப்படிப்பட்ட காமராசரையே பறவை ஒன்றொடு ஒப்பிட்டு அவமதித்தார்கள் அண்ணாவுக்குப்பின் வந்த தலைவர்கள். ஆரோக்கியமான அரசியலுக்கு உடலநலக்குறைவு ஏற்பட்ட காலம் அதுதான்.
திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர் பிரிந்தபோது எம்.ஜி.ஆர்-கருணாநிதி இருவருக்குமிடையே நடந்த கருத்துமோதல்களும் அதற்கு அவர்கள் எதிர்வினையாற்றியதும் தெரிந்தவிஷயம். அதிமுக துவங்கி சில ஆண்டுகள் கழிந்தபின் நடந்த சம்பவம் அது. கருணாநிதி-எம்.ஜி.ஆர் மோதல் உச்சத்திலிருந்த நேரம். ஒரு மேடையில் கருணாநிதியை கடும் வார்த்தைகளால் அர்ச்சித்துவிட்டு எம்.ஜி.ஆரை வந்து சந்தித்தார் அந்த இரண்டாம் கட்டத்தலைவர். இருவரும் காரில் சென்றுகொண்டிருந்தனர். இரண்டாம் கட்டத்தலைவர், தான் கருணாநிதியை மேடையில் வறுத்தெடுத்ததை எம்.ஜி.ஆரிடம் பெருமிதமாக கூறினார். தலைவர் நம்மை பாராட்டுவார் என்பது அவரது எண்ணம். ஆனால் அந்த தலைவர் கதையை சொல்லி முடித்த அடுத்த வினாடி எம்.ஜி.ஆர் டிரைவரிடம் வண்டியை நிறுத்தச்சொன்னார்.
சம்பந்தப்பட்ட இரண்டாம் கட்டத்தலைவரை காரை விட்டு இறங்கச்சொன்னவர், “ கருணாநிதியை மேடையில் கண்டபடி பேசியதோடு இல்லாமல் அதை என்னிடமே வந்துசொல்கிறாயா...கருணாநிதியை பெயர் சொல்லிப்பேச உனக்கு என்ன் அருகதை இருக்கிறது. எனக்கும் அவருக்கும் ஆயிரம் கருத்துவேறுபாடு இருக்கலாம். ஆனாலும் ஒருகாலத்தில் எனக்கு தலைவராக இருந்தவர். அப்படிப்பட்டவரை நேற்று அரசியலுக்கு வந்த நீ எப்படி இப்படி பேசுவாய்...நான் உனக்கு தலைவர்...உன் தலைவரான எனக்கே அவர் தலைவராக இருந்தவர் என்றால் அவருக்கு என்ன மரியாதை தரவேண்டும்...அரசியல் வெளிச்சத்தில் இன்று நீ வந்துவிட்டாய் என்பதாற்காக பழசை மறக்கக்கூடாது. இனிமேலாவது மரியாதையாக பேசு” என சீறினார். பின்பு கிளம்பியது கார். சீறிச்சென்ற காரை பார்த்தபடி அதிர்ச்சியில் உறைந்துநின்றார் அந்த தலைவர். இப்படி அரசியலில் தங்கள் கண்ணியத்தை பேணிய தலைவர்கள் வாழ்ந்த காலம் அது.
ஆனால் இன்று அரசியலின் ஆரோக்கியம் ஐசியுவிற்கு சென்றுவிட்ட காலம். கட்சிகளின் பெயரை தேர்தல் கமிஷனில் பதிவுசெய்த கையோடு தங்களை சுற்றி தாங்களே வெளிச்சம் பாய்ச்சிக்கொள்கிறார்கள். யாரிடம் பேசுகிறோம் என்ன பேசுகிறோம் என்பதைப்பற்றிய கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்வதில்லை. தங்களின் செயல்கள் மக்களால் கவனிக்கப்படுகிறது என்பது பற்றிய எண்ணமும் அவர்களிடம் இருப்பதில்லை.

எல்லா சாலைகளும் ரோம் நகரைநோக்கியே என்பதைப்போல் எத்தனை மேடைகளைப்பொட்டு வெளிச்சம்பாய்ச்சி மாநாடுகள் நடத்தினாலும் உங்களை அதிகாரவீதிக்கு அனுப்பப்போகிறவர்கள் உங்கள் தொண்டர்கள் அல்ல; பெரும்பான்மை மக்கள். அந்த மக்களை வாக்கு கேட்டு நீங்கள் சந்திக்கப்போகிறபோது உங்களது கட்சி சின்னம் அவர்களுக்கு கவனம் இருக்காது. உங்களது கண்ணியமான செயல்கள்தான் நினைவுக்கு வரும். அந்த கண்ணியமும் கட்டுப்பாடுகளும்தான் இன்னும் பல ஆண்டுகளுக்கு உங்கள் கட்சியை உயிரோட்டமாக வைத்திருக்கும்.
கட்சித்தலைவர்களே உங்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பது அரசியல்தலைவர்களுக்குரிய அடக்கத்தை அல்ல; சாதாரண மனிதனுக்குரிய நாகரிகத்தை. அந்த நாகரீகத்தை மறந்துவிட்டு எங்கள் வீதிக்கு நீங்கள் ஓட்டுகேட்டு வருவீர்களானால் நமுட்டுச்சிரிப்புடன் ஒரு கைகுலுக்கலைத்தவிர உங்களுக்கு தர எங்களிடம் ஒன்றும் இருக்காது. புரிந்துகொள்ளுங்கள்!

No comments:
Post a Comment