சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு காரணம் நமக்கெல்லாம் பரவலாக தெரிந்தது செல்போன் கோபுரங்களும், அதிலிருந்து வரும் கதிர் வீச்சுக்களும்தான் என்பதுதான். ஆனால், அதுமட்டுமே காரணமில்லை. நம்முடைய பாரம்பர்ய சிறுதானிய பயிர்களை இழந்ததும் ஒரு காரணம்.
ஆம்...
நான் 12-ம் வகுப்பு பயிலும் வரை எங்கள் தோட்டத்தில் சாமை, தினை, கம்பு, குதிரைவாலி, கேழ்வரகு, வரகு, சோளம் என அனைத்து வகையான சிறுதானியங்களையும் பயிர் செய்தோம். இந்த சிறுதானியங்கள்தான் சிட்டுக்குருவிகளின் முக்கிய உணவாக இருந்தது. ஏனென்றால், குருவிகளின் வாய் மற்றும் தொண்டை மிகவும் சிறியது.

அதனால், அவைகள் சிறுதானியங்களைதான், எளிதாக உண்ண முடிந்தது. வேலையாட்கள் பற்றாக்குறை, போதிய விலையின்மை, நகரமயமாதல், நவீனமயமாதல், ஒரு பயிர் முறை போன்ற காரணங்களால் சிறுதானிய பயிர்களை பயிர் செய்யும் வழக்கம் குறைந்தே விட்டது. சொல்லப்போனால் அழிந்தே விட்டது.
விருதுநகர் மாவட்டம் முழுவதும், எங்கு பார்த்தாலும் பருத்தி, மக்காச்சோளம்தான் பயிர் செய்யப்படுகிறது. எங்கள் தோட்டம் முழுவதும் மக்காச்சோளம்தான் அதிகம் பயிர் செய்யப்படுகிறது.
அதிக வேலையாட்கள், பராமரிப்பு தேவைப்படாத ஒரு எளிமையான பயிர் மக்காச்சோளம். அதனால் விவசாயிகள் மக்காச்சோளத்துக்கு விரைவாக மாறினார்கள். இந்த மக்காச்சோளத்தை மயில்கள் உண்ணும். ஆனால் குருவி, மைனாக்கள் போன்ற சிறிய பறவைகளால் உண்ண முடியவில்லை.
சிட்டுக்குருவி போன்ற சிறிய வகையான பறவைகளால் இந்த பெரிய தானியங்களை சாப்பிட முடியவில்லை. அதனால்தான் இந்த சிட்டுக்குருவி இனமெல்லாம் இரை கிடைக்காமல் இறந்தேவிட்டது. இந்த உண்மையை நாம் உணர்ந்தாக வேண்டும்.
சென்ற முறை ஊருக்கு போயிருந்தபோது, அப்பாகிட்ட 'அடுத்த பட்டம் மக்காச்சோளம் போடும்போது, ஒரு 5 பாத்தியில் கம்பும், தினையும் போடுங்க'ன்னு சொல்லிட்டு வந்தேன்.
நவீன மயமாதல் என்ற பெயரில் உணவு சங்கிலியில் சில உயிரினங்களையே அழித்துவிட்டோம். அவற்றில் சிட்டுக்குருவிகளும் ஒன்று.
கடைசியாக உங்களில் எத்தனை பேர் தூக்கணாங்குருவி கூட்டை பார்த்திருக்கிறீர்கள்?
சொல்லுங்கள்...
கடலின் நடுவில் கட்டடம் கட்ட தெரிந்த மனிதனுக்கு, ஒரு தூக்கணாங்குருவி கூட்டை கட்ட தெரியவில்லை. முயன்று தோற்றது விஞ்ஞானம்! சிட்டுக் குருவிகளுக்கு அடுத்து வேகமாக அழிந்து வரும் உயிரினம் தேனீ...
தேனீக்கள் அழிந்தால் அடுத்த 4 வருடங்களில் மகரந்த சேர்க்கை நடைபெறாமல், உணவு உற்பத்தி இன்றி நாம் அனைவரும் பசியில் இறப்போம் என்று எத்தனை பேருக்கு தெரியும்!
நகரமயமாதலும், நவீனமயமாதலும் அவசியம்தான். ஆனால் பண்பாட்டையும், பழமையையும் அழித்து அதை உருவாக்குவதில் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை.

No comments:
Post a Comment