இலவச சோலார் மின்சார உற்பத்தி...விளைபொருள் விலை நிர்ணய ஆணையம்...விவசாயத்துக்கு தனி பட்ஜெட்...
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவரும் நேரம் விவசாயிகள் கோரிக்கைகள்வைப்பது வழக்கமான நிகழ்வு. “சுதந்திரம் பெற்று ஆண்டுகள் பல ஆகியும், எங்களின் நிறைவேறாத கோரிக்கைகள் வண்டி வண்டியாக உள்ளன. வரும் தேர்தலிலாவது அவை நிறைவேறுமா?” என்று கேள்வி எழுப்புகின்றனர் விவசாயிகள். அவர்களின் கோரிக்கைகள்தான் என்ன?
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர், பேராசிரியர் தர்மபுரி சின்னசாமி:
“பொது பட்ஜெட், ரயில்வே பட்ஜெட் போடுவதுபோல விவசாயத்துக்கும் தனியாக பட்ஜெட் போடவேண்டும். இயற்கைச் சீற்றங்கள், வறட்சி, நோய் தாக்குதல் போன்ற காரணிகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உதவும்விதமாக இயற்கைப் பேரிடர் நிதியம் தொடங்க வேண்டும். விவசாய பம்ப்செட்களுக்கு விண்ணப்பம் கொடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள ஆறுகள், ஏரிகள் இணைப்புத் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். இதன்மூலம் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள உபரி நீரை வறட்சிப் பகுதிகளுக்குக் கொண்டு செல்ல முடியும்.
பள்ளிகளில் அனைத்து வகுப்புகளிலும் வேளாண் பாடத்தைக் கற்றுத்தர வேண்டும். அதற்காக வேளாண்மை பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். விவசாயப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ‘விளைபொருள் விலை நிர்ணய ஆணையம்’ ஒன்றை மாநில அரசு உருவாக்க வேண்டும். கிராமப்புறங்களில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பிகள் துருப்பிடித்த நிலையில் உள்ளதால், சீரான மின் விநியோகம் கிடைப்பது இல்லை. இதனால், பம்ப்செட் மோட்டார்கள் அடிக்கடி பழுதாகிவிடுகின்றன. எனவே, கிராமப்புறங்களில் புதிய மின்கம்பிகளை அமைக்கவேண்டும்.”

கோயமுத்தூர் மாவட்ட விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பொன்.கந்தசாமி:
“வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் சட்டத்தை, மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும். வறட்சி, இடு பொருட்கள் செலவு, ஆள் பற்றாக்குறை, நோய் தாக்குதல், விலை வீழ்ச்சி போன்ற காரணங்களால் விவசாயம் நலிந்து வருகிறது. அதை மனதில்கொண்டு விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யவேண்டும். வேளாண்மை அலுவலகங்களை நவீனமயமாக்க வேண்டும். வானிலை விவரம், விளைபொருள்களின் விலை நிலவரம், தொழில் நுட்ப ஆலோசனைகளைக் குறுஞ்செய்தி, வாட்ஸ்அப் வழியாக விவசாயி களுக்குத் தெரிவிக்க வேண்டும். வேளாண் அதிகாரிகள் வாரம் ஒரு முறையாவது வயல்வெளிக் கூட்டங்களைக் கிராமங்கள்தோறும் நடத்த வேண்டும்.
வனவிலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். கர்நாடக மாநிலத்தில் இருப்பதுபோல ஆறு, குளம், ஏரிகளில் இருந்து நீரேற்று முறையில் குழாய்கள் மூலம் பாசனநீரைக் கொண்டுசெல்லும் திட்டத்தை நொய்யல், பவானி ஆகிய நதிகளில் செயல்படுத்த வேண்டும். தக்காளி பதப்படுத்தும் தொழிற்சாலைகளை அமைத்தால், தக்காளிக்கு நிரந்தர விலை கிடைக்கும். அதேபோல், திராட்சை அதிகம் விளைகிற பகுதிகளில் ஒயின் தொழிற்சாலை அமைப்பதன் மூலம் திராட்சை விலை வீழ்ச்சியைத் தடுக்க முடியும்.”

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத் தலைவர் திருச்செங்கோடு நடேசன்:
“ஒரு தனியார் சர்க்கரை ஆலையின் எல்லைக்குள் இருக்கும் கரும்பு விவசாயிகள், இன்னொரு பகுதியில் உள்ள சர்க்கரை ஆலைக்கு கரும்புகளைக் கொண்டு செல்லக் கூடாது என்கிற சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். சொந்தமாக ஆலைவைத்து வெல்லம், சர்க்கரை உற்பத்தி செய்வதற்கு உணவுத் துறை சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அதை நீக்க வேண்டும். அறுவடை முடிந்த 14 நாட்களுக்குள் கரும்புக்கான விற்பனைத் தொகை, விவசாயிகள் கைக்குக் கிடைப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும். உழவர் சந்தைகளுக்கு காய்கறிகள் கொண்டு செல்லும் விவசாயிகள், தங்களின் தாலுக்கா உழவர் சந்தையில் மட்டுமே விற்பனைசெய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அதை மாற்றி, உழவர் அடையாள அட்டை வைத்திருக்கும் விவசாயிகள், எந்த ஒரு உழவர் சந்தைகளிலும் காய்கறிகள் விற்பனை செய்ய அனுமதிக்கவேண்டும். உழவர் சந்தைகளில், இயற்கை விளைபொருட்கள் விற்பனைக்கு என்று சில கடைகள் ஒதுக்க வேண்டும்.
பல விவசாயிகள் தங்கள் பாசனக் கிணற்றின் பம்ப்செட்களுக்கு தனியாரிடம் இருந்து சோலார் பேனல்களை வாங்கிப் பொருத்தி வருகிறார்கள். இதை மாற்றி மின்சார வாரியமே 100 சதவிகிதம் மானிய விலையில் விவசாயிகளுக்குப் பொருத்தித் தரவேண்டும்.”
விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறட்டும்!

No comments:
Post a Comment