இதை எழுதி கொண்டிருக்கும் போது... எங்கோ ஒரு விவசாயி கடன் பிரச்னையால் தற்கொலை செய்திருப்பார்.... எங்கோ ஒரு விவசாயி கடன் கேட்டு கூட்டுறவு வங்கி வாசலிலோ அல்லது வட்டிகடைக்காரன் வீட்டு வாசலிலோ காத்திருப்பார்... எங்கோ ஒரு விவசாயி உரம் வாங்க தன் மனைவி வளையல்களுடன் வட்டிக்கடையில் நின்று கொண்டிருப்பார்... எங்கோ ஒரு விவசாயி விவசாயத்தை கைவிட்டு நகரத்தை நோக்கி இடம் பெயர்ந்து கொண்டிருப்பார்...

'விவசாயத்திற்கு மத்திய பட்ஜெட்டில் ஏறத்தாழ ரூ. 35,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு ஒதுக்க 0.5 சதவீத செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது, கடன் வரம்பு ரூ.9 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது மற்றும் இயற்கை ஆர்வலர்களை புத்துணர்வூட்டும் விதமாக 5 லட்சம் ஏக்கர் நிலத்தை இயற்கை வேளாண்மையின் கீழ் கொண்டுவர கவனம் செலுத்தப்படும்' என்றும் பட்ஜெட் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரவேற்கதக்கத்துதானே... இதற்கு ஏன் இப்படி ஒரு எதிர்மறையான முன்னுரை என்கிறீர்களா...? நிச்சயம் வரவேற்கதக்கதுதான். இதன் பயன்கள் முழுவதும் நேரடியாக விவசாயியை சேரும் பட்சத்தில், இது நிச்சயம் வரவேற்க தகுந்ததுதான். ஆனால், நாம் கடந்த காலத்துடன் ஒப்பிட்டு பார்த்தால், விவசாயி உடன் உரையாடி பார்த்தால் வரும் தகவல்கள் எதுவும் மகிழ்வானதாக இல்லை.
பட்ஜெட்டின் பலன்கள் நேரடியாக விவசாயியை சென்று சேருகிறதா....?
இல்லை. நிச்சயம் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கிறது. குறிப்பாக விவசாயத்திற்கு வழங்கப்படும் மானியங்கள் எதுவும் நிறுவனங்களுக்கு பலனளிக்கும் அளவிற்கு விவசாயத்திற்கு பலனளிப்பது இல்லை. அதாவது பைப்பிற்கோ, இல்லை விவசாய மோட்டாருக்கோ மானியம் என்றால், மானியத்தை பெறும் விவசாயி, தன் சொந்த விருப்பத்தில் தரமான பொருட்களை வாங்க முடியாது. விவசாய துறை சொல்லும் தரும் பட்டியல்களிலிருந்து தான் நிறுவனத்தை தேர்ந்தெடுத்து பொருட்களை வாங்க வேண்டும். அப்போது தான் மானியம் கிடைக்கும்.
எனக்கு ஒரு மத்திய தர வர்க்கத்தை சேர்ந்த நண்பன் இருக்கிறான். அவன் அரசாங்கம், விவசாயிகளுக்கு கடன் தரும் போதும், கடன் தள்ளுபடி செய்யும் போதும் கோபித்துக் கொள்வான். “இவர்களுக்கு சுலபமாக கடனை தள்ளுபடி செய்து விடுகிறார்கள். ஆனால், அந்த சுமையெல்லாம் நம் மீதுதான் விழுகிறது...” என்று அலுத்துகொள்வான். ஆனால், உண்மை அத்தகையானதாக இல்லை. உண்மையில் கஷ்டத்தில், தேவையில் இருக்கும் விவசாயிக்கு மானியங்களும், கடன்களும் கிடைப்பதை விட, விவசாயத்துறையில் இருக்கும் பெரு நிறுவங்களுக்குதான், இதன் பலன்கள் போய் சேருகிறது.

“பல ஆயிரம் கோடி கடன் வாங்கிய விவசாய துறையில் இருக்கும் நிறுவனங்கள் எல்லாம், விவசாய கடன் பட்டியலில் இருக்கிறது” என்கிறார் தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகர் கி.வெங்கட்ராமன்.
“முன்பே, விவசாயம் என்பதில் விவசாயம் சார்ந்த தொழிற் நிறுவனங்களையும் முந்தைய அரசு சேர்த்துவிட்டது. அதாவது, விவசாயத்திற்கான உபகரணங்கள், உரங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் விவசாய துறையை சேர்ந்ததுதான். பல ஆயிரம் ஏக்கர் நிலத்தை வளைத்துப்போட்டு கம்பெனியாக பதிவு செய்து கொண்டவர்களும் விவசாயிதான். உர உற்பத்தி தொழிலில் இருக்கும் அம்பானியும் விவசாயிதான். இவரும், இவர் நிறுவனமும் விவசாய கடன்களை, மானியங்களை பெற முடியும். இப்போது நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள், விவசாயத்திற்கு ஒதுக்கப்படும் நிதி, விவசாயியை சேருமா இல்லை நிறுவனங்களை சேருமா....?”
இன்னும் எளிமையாக கூற வேண்டுமென்றால், ஒரு பெரிய உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனமும் விவசாயம் சார்ந்த தொழிற் நிறுவனம் பட்டியலில்தான் வரும். இவர்களும் மானியங்கள், விவசாய கடன்கள் பெறுவதற்கு தகுதியானவர்கள் ஆகிறார்கள். பெரும்பாலும், இவர்கள்தான் பட்ஜெட்டின் பலன்களை சுவைக்கிறார்கள்' என்கிறார் வெங்கட்ராமன்.
நீங்கள் ஏன் அனைத்தையும் குற்ற கண்ணோடு பார்க்கிறீர்கள்...? இந்த அரசை குற்றம் சொல்வது மட்டும் தான் உங்கள் நோக்கமாக இருக்கிறது என்கிறீர்களா...? நிச்சயம் அதுபோன்ற எதிர்மறை எண்ணம் எதுவும் இல்லை. இது பி.ஜே.பி அரசின் செயல்பாடு மட்டுமல்ல, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு போட்டு தந்த பாதையில்தான் அது பயணிக்கிறது.
செஸ் வரி நன்மை செய்யுமா...?

சரி. வேளாண் துறை சார்ந்த திட்டங்களின் நிதித் தேவைக்காக, வரிக்குட்பட்ட அனைத்து சேவைகளின் மீதும் 0.5 சதவீத கிஸான் கல்யாண் வரி (செஸ்) , வரும் ஜூன் முதல் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு நல்லது தானே...? என்பதுதான் உங்கள் கேள்வியாக இருந்தால், எனது பதில், கல்விக்காக வசூலிக்கப்பட்ட செஸ் வரி, உண்மையில் கல்வி துறையை வளர்த்ததா...? என்பதுதான். காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் ஆண்டுக்கு 20,000 கோடி, கல்விக்கான செஸ் வரியாக பயன்படுத்தப்பட்டது. உண்மையில், இந்த நிதி கல்விக்கான உள் கட்டமைப்பை ஏற்படுத்த பயன்பட்டதா என்றால்... இல்லை என்பது தான் கல்வியாளர்களின் பதிலாக இருக்கிறது.
இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்போம்...
இன்னும் மூன்று ஆண்டுகளில் ஐந்து லட்சம் ஏக்கர் வேளாண் நிலத்தை, இயற்கை வேளாண்மைக்கு மாற்ற இந்த அரசு கவனம் செலுத்தும் என்ற வாக்கியம் பட்ஜெட் உரையில் உள்ளது. உண்மையில் இயற்கை வேளாண்மை என்றால் என்ன? என்று புரிந்து கொண்டு, அதன் முழு அர்த்தத்தில், நிதியமைச்சர் இதை குறிப்பிட்டு இருப்பாரானால், இது வரவேற்கதக்க ஒன்று.
அதாவது, இயற்கை வேளாண்மை என்றால் இயற்கை உரங்களை போட்டு பயிர் வளர்ப்பதல்ல. அது ஒரு வாழ்வு முறை. இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கிறோம் என்ற பெயரில், இயற்கை உரங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மானியம், கடன் தருவதை இவ்வரசு செய்தால், அதுவும் ஒரு ஏமாற்று வேலையே...
இயற்கை வேளாண்மை என்பது, தன் வேளாண் நிலத்தில் சந்தையிலிருந்து வரும் எந்த பொருளையும் அனுமதிக்காமல் இருப்பது. அதாவது, உரம், பூச்சிவிரட்டி எல்லாம் தன் நிலத்திலேயே தயாரித்து கொள்வது. அதுதான் இயற்கை அல்லது வளங்குன்றா வேளாண்மை. தனிப்பட்ட மனிதர்களின் முயற்சியில் ஏற்கெனவே தமிழ்நாடு, ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் இயற்கை வேளாண்மையை தழுவி உள்ளது.
இதை மத்திய அரசு புரிந்து கொண்டு, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் பட்சத்தில் மட்டுமே இது பாராட்டப்பட வேண்டிய அறிவிப்பாக இருக்க முடியும்!
இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்போம்...
இன்னும் மூன்று ஆண்டுகளில் ஐந்து லட்சம் ஏக்கர் வேளாண் நிலத்தை, இயற்கை வேளாண்மைக்கு மாற்ற இந்த அரசு கவனம் செலுத்தும் என்ற வாக்கியம் பட்ஜெட் உரையில் உள்ளது. உண்மையில் இயற்கை வேளாண்மை என்றால் என்ன? என்று புரிந்து கொண்டு, அதன் முழு அர்த்தத்தில், நிதியமைச்சர் இதை குறிப்பிட்டு இருப்பாரானால், இது வரவேற்கதக்க ஒன்று. அதாவது, இயற்கை வேளாண்மை என்றால் இயற்கை உரங்களை போட்டு பயிர் வளர்ப்பதல்ல. அது ஒரு வாழ்வு முறை. இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கிறோம் என்ற பெயரில், இயற்கை உரங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மானியம், கடன் தருவதை இவ்வரசு செய்தால், அதுவும் ஒரு ஏமாற்று வேலையே...
இயற்கை வேளாண்மை என்பது, தன் வேளாண் நிலத்தில் சந்தையிலிருந்து வரும் எந்த பொருளையும் அனுமதிக்காமல் இருப்பது. அதாவது, உரம், பூச்சிவிரட்டி எல்லாம் தன் நிலத்திலேயே தயாரித்து கொள்வது. அதுதான் இயற்கை அல்லது வளங்குன்றா வேளாண்மை. தனிப்பட்ட மனிதர்களின் முயற்சியில் ஏற்கெனவே தமிழ்நாடு, ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் இயற்கை வேளாண்மையை தழுவி உள்ளது.
இதை மத்திய அரசு புரிந்து கொண்டு, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் பட்சத்தில் மட்டுமே இது பாராட்டப்பட வேண்டிய அறிவிப்பாக இருக்க முடியும்!

No comments:
Post a Comment