Monetize Your Website or Blog

Monday, 14 March 2016

விஜந்தரை வீழ்த்த பாம்பு ரத்தம் குடித்தவர் நாக் அவுட்டில் வீழ்ந்தார்!

ங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நேற்று நடந்த போட்டியில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த 20 வயது, அலெக்சாண்டர் ஹோர்வத் என்ற வீரருடன் இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் களமிறங்கினார்.

முதல் இரு ரவுண்டுகளிலும் பொறுமையாகவே ஹோர்வாத்தை விஜயேந்தர் எதிர்கொண்டார். விஜேயேந்தரை வீழ்த்த ஹோவார்த் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. மிக விரைவாகவே அவர் சோர்வடைய அதனை விஜேயேந்தர் தனக்கு சாதகமாக்கிக் கொண்டார். 

மூன்றாவது ரவுண்டில் நேரடியாக ஹோவார்த்தின் முகத்தை குறி வைத்து விஜயேந்தர் இரு குத்துக்களை இறக்கினார். தொடர்ந்து தனது பாணியிலான குறுக்கு குத்துகள் மூலமாக தொடர் தாக்குதல் மூலம்  அலெக்சாண்டரை நாக் அவுட் முறையில் வீழ்த்தினார். 

விஜயேந்தரை வீழ்த்த பாம்பு ரத்தம் குடித்து பயிற்சி எடுத்து வந்ததாகவும் நிச்சயம் வீழ்த்தி விடுவேன் என்று முன்னதாக ஹோர்வத் சவால் விடுத்திருந்தார். ஆனால் அவரை நாக்அவுட்டிலேயே வீழ்த்திய விஜேந்தர் தனது வெற்றியை பதன்கோட் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு சமர்பிப்பித்துள்ளார்.  

தொழில்முறை குத்துச்சண்டை போட்டிக்கு மாறியுள்ள விஜேந்தர், தான்மோதிய 4 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளார்.



No comments:

Post a Comment