Monetize Your Website or Blog

Monday, 14 March 2016

என்னா ஒரு வில்லத்தனம் : பவாண்டோ போலவே வெளிவரும் கோக்கின் ஃபேன்டா!

ன்னாட்டு நிறுவனங்களின் குளிர்பானங்கள் தரும் போட்டிக்கு மத்தியிலும் தமிழகத்தை சேர்ந்த காளிமார்க் நிறுவனம் 100 ஆண்டுகளை கடந்து வெற்றி நடை போட்டுக்கு கொண்டுதான் இருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களின் குளிர் பானங்களுக்கு இடையே திண்டுக்கல்லை சேர்ந்த இந்த நிறுவனம் சாதித்திருப்பது தமிழகத்துக்கே பெருமைதான்.

இந்தியாவிலேயே வேறு எந்த நிறுவனமும் சந்திக்காத சவால்களை எதிர்கொண்டு காளிமார்க் நிறுவனம் போட்டிகளை சமாளித்து சந்தையில் பெருமளவு மார்க்கெட்டை பிடித்துள்ளது.  அண்மையில்தான் இந்த நிறுவனம் தன் நூற்றாண்டை கொண்டாடியது. இந்த தருணத்தில்  ரூ.150 கோடி மதிப்பீட்டில், ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டியில், 11 ஏக்கர் பரப்பளவில் தனது புதிய ஆலையை நிறுவ காளிமார்க் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

கர்நாடக, ஆந்திர சந்தையை மையமாக கொண்டு  வைத்து இந்த ஆலையை காளிமார்க் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆலை 2017 ஏப்ரல் மாதத்தில் உற்பத்தியை தொடங்கவுள்ளது. அது மட்டுமல்லாமல் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக, ’வைப்ரோ’ என்னும் புது பிராண்டை அறிமுகப்படுத்த காளிமார்க் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.தமிழக நிறுவனம், ஒன்று இவ்வளவு அழுத்தங்களுக்கு மத்தியிலும், தன் சுயத்தை இழக்காமல், நூறாண்டுகளாக சந்தையில் இருப்பது நமக்கு பெருமைமிக்க விஷயம்தான். காளிமார்க் நிறுவனத்தின் முக்கிய பிராண்ட் பவோண்டா குளிர்பானம். சொல்லப் போனால், இந்த நிறுவனத்தின் ஆணிவேர் இந்த பிராண்ட் குளிர்பானம்தான்.

தற்போது காளிமார்க் நிறுவனத்தின் அசூர வளர்ச்சி பன்னாட்டு நிறுவனங்களை கண்களை மீண்டும் உறுத்தத் தொடங்கியுள்ளது போலும். அதனால் பவாண்டோவின் விற்பனையை சரிவை சந்திக்க வைக்க வேண்டுமென்ற நோக்கத்தில்  கோக்  நிறுவனம் களத்தில் இறங்கியிள்ளதாகத் தெரிகிறது. அதனால் பார்த்தால் பவாண்டோ பாட்டில் போலவே தெரியும் வகையில் புதிய ஃபேன்டா ரக குளிர்பானத்தை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.  ஃபேன்டா போர்டல்லோ என்ற பெயரில் சந்தைக்கு வந்திருக்கும் இந்த குளிர்பான பாட்டில் முதல் அத்தனையும் பவாண்டோ போலவே இருக்கிறது. 

வழக்கமாக வெளிநாட்டுக்காரனை பார்த்து காப்பியடிச்சுருக்காம்பானு சொல்றது நம்ம வழக்கம். இப்போ தமிழ்நாட்டுக்காரன பார்த்து வெளிநாட்டுக்காரன் காப்பியடிக்கிறானு காலர தாராளமா தூக்கி விட்டுக்கலாம்!

No comments:

Post a Comment