Monetize Your Website or Blog

Tuesday, 1 March 2016

சரத்குமாருக்குப் பதிலாக விஷாலா? கிளம்பும் புது சர்ச்சை

மிஷ்கின்  இயக்கத்தில் 2014 இல் வெளியான படம் பிசாசு. அதற்கடுத்து அவர்  தயாரித்து, நடித்துக்கொண்டிருக்கும் படம் 'சவரக்கத்தி'.  படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருக்கிறதாம். அப்படத்தை முடித்துவிட்டு மிஷ்கின், விஷால் படத்தை இயக்குவார் எனச் சொல்லப்படுகிறது. 
 இதற்கு முன்பாக கடந்த ஆண்டில், மிஷ்கின் இயக்கத்தில்,. சரத்குமார் நாயகனாக நடிக்க இருக்கிறார். அவரோடு நடிக்க இருப்பவர்கள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்" என்று சொல்லப்பட்டது. ஆனால் அது இப்போது வரை நடக்கவில்லை, நடப்பதற்கான அறிகுறியும் இல்லை. 

இந்நிலையில், திடீரென விஷாலை அவர் இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. விஷால் இப்போது மருது படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அது முடிந்ததும் லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி 2 படத்தில் நடிக்கும் திட்டத்தில் இருந்தாராம். லிங்குசாமி தெலுங்குப் படத்துக்குப் போவதால் சண்டக்கோழி 2 கைவிடப்பட்டது.
அதனால் அந்தத் தேதிகளில் படப்பிடிப்பு நடத்த மிஷ்கின் தயாராக இருப்பதால் அவர் படத்தில் நடிக்க விஷால் தயாராகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. 
 
ஏற்கெனவே சரத்குமாருக்கு எழுதிய கதையை அப்படியே விஷாலை வைத்துப் படமாக்கப்போகிறார் என்கிற பேச்சுகள் இப்போது வரத்தொடங்கியிருக்கின்றன. நடிகர் சங்கத் தேர்தலுக்குப் பிறகு இப்படி நடப்பதால் இது பரபரப்பான பேச்சாகிறதாம்.


No comments:

Post a Comment