Monetize Your Website or Blog

Saturday, 5 March 2016

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு... இனி இப்படித்தான் நடக்கும்!

கடந்த 5 ஆண்டுகளாக பொதுமக்களின் கோரிக்கையை புறக்கணித்த தமிழக அரசு, தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் புதுக்கோட்டை மாவட்ட மக்களின் கோரிக்கையை  நிறைவேற்றி உள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம், 9 ஏ நத்தம்பண்ணை ஊராட்சியை சேர்ந்த பாலன் நகர் பகுதியில்,  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தார் சாலை தற்போது போடப்படுகிறது.

கடந்த 5 ஆண்டுகளாக இந்த சாலையை போடுமாறு பொதுமக்கள் பலமுறை கூறியும்,  எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில் தார் சாலை அமைக்கும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதை 5 ஆண்டுகளுக்கு முன்னர் போட்டிருந்தால் இத்தனை வருடங்கள் அனுபவித்த கஷ்டங்கள் இருந்திருக்காது. இப்பொழுது அவர்களுக்கு ஓட்டு வேண்டும் என்பதற்கு சாலை போடுகின்றனர் என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.




No comments:

Post a Comment