இந்தியாவின் நம்பர் ஒன் ஆன்லைன் நிறுவனம் ஆகியே தீருவது என்பதில் உறுதியாக இருக்கிறது அமெரிக்காவின் அமேசான் நிறுவனம். இதன் போட்டி நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டும், ஸ்நாப்டீலும் அதிக தள்ளுபடி தந்து, அமேசானுக்கு நெருக்கடியைத் தந்துகொண்டிருக்கிறது. ஆனால், அமேசானோ தள்ளுபடி கொஞ்சம் குறைத்துத் தந்தாலும் தரமான சேவை என்பதில் பெயரை தட்டிக் கொண்டு செல்ல முயற்சித்து வருகிறது.

ஆன்லைன் சேவையை சரியாக செய்ய வேண்டுமெனில் வேர்ஹவுஸ் எனப்படும் பொருட்களை வைத்துப் பாதுக்காக்கும் கிடங்குகள் கட்டாயம் இருக்க வேண்டும். இதன் தேவையை உணர்ந்த அமேசான் நிறுவனம் தெலங்கானாவின் தலைநகர் ஹைதராபாத்தில் மிகப் பெரிய வேர்ஹவுஸை அமைக்க முடிவு செய்திருக்கிறது. அமெரிக்காவுக்கு வெளியே அமேசான் நிறுவனம் அமைக்கும் மிகப் பெரிய வேர்ஹவுஸ் இதுதான். ஏறக்குறைய 29 லட்சம் சதுரை அடி கொண்ட இந்த ஹேர்ஹவுஸில் கிட்டத்தட்ட 14,000 பேர் வேலை பார்க்கலாமாம்!
ஹைதராபாத்தில் கச்சிபொவ்லி பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் இந்த வேர்ஹவுஸ் உருவாக்க முடிவு செய்திருக்கிறது அமேசான். வருகிற 2018-ஆம் ஆண்டுக்குள் இந்த வேர்ஹவுஸை தயார் செய்துவிட முடிவெடுத்து, அதற்கான வேலைகளை ஜரூராக செய்ய தொடங்கி இருக்கிறது அமேசான். இதற்காக அமேசான் சுமார் 1,000 கோடி ரூபாய் செலவிடப் போகிறதாம்.!

No comments:
Post a Comment