கடந்த சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. பெற்ற வெற்றிக்கு அ.தி.மு.க.தான் காரணம் என்று தெரிவித்த நடிகர் ராதாரவி, வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் என்றார்.

திருவண்ணாமலையை அடுத்த வேட்டவலம் பகுதியில் நடந்து வரும் ‘அண்ணனுக்கு ஜே’ என்ற படப்பிடிப்பில் நடிகர் ராதாரவி நடிக்கும் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக வந்திருந்த ராதாரவி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், " எங்கு சென்றாலும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நல்ல வரவேற்பு உள்ளதை காணமுடிகிறது. சட்டமன்ற தேர்தலிலும் அவர்தான் வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சர் ஆவார்.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு நான் ஆசைப்படவில்லை. பணமும் கட்டவில்லை. அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன். தமிழ்நாட்டை பொறுத்தவரை அ.தி.மு.க.தான் பெரிய கட்சியாக உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. பெற்ற வெற்றிக்கு அ.தி.மு.க.தான் காரணம். சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. மழையால் பாதிக்கப்பட்ட அனவருக்கும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
நடிகர் சங்க பிரச்னையில் அனைத்து கணக்குகளையும் கொடுத்துவிட்டோம். தற்போது தவறான புகாரை கொடுத்துள்ளார்கள். எதையும் சட்டரீதியாக சந்திப்போம். வருகிற 20-ம் தேதி நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. அப்போது யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்பதற்காக இந்த புகாரை கொடுத்துள்ளனர்" என்று கூறினார்.

No comments:
Post a Comment