Monetize Your Website or Blog

Wednesday, 9 March 2016

கொத்தடிமைகள் மீட்பு: தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

திருவள்ளூரில் மீட்கப்பட்ட 550 கொத்தடிமைகளுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் குறித்து விளக்கம் அளிக்குபடி, தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் போந்தவாக்கம் பகுதியில் தனியார் செங்கல் சூளையில் வடமாநிலத்தை சேர்ந்த 500–க்கும் மேற்பட்டோர் கொத்தடிமைகளாக இருப்பதாக பொன்னேரி வருவாய் கோட்டாட்சியருக்கு கிடைத்த தகவலின் பெயரில் சோதனை நடத்தப்பட்டது. போலீஸ் துணையுடன் நடத்திய சோதனையில் 550 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஒடிசா, சத்தீஷ்கார், உத்தரபிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.


இந்நிலையில் நேற்று தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், ''கடந்த 3–ம் தேதி அன்று ‘திருவள்ளூரில் 550 கொத்தடிமைகள் மீட்பு’ என்ற செய்தி நாளிதழ்களில் வெளியாகி உள்ளது. அதில் கடந்த 2–ம் தேதியன்று நடத்தப்பட்ட சோதனையில் ஒடிசா, சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் இருந்து பெண்கள் உள்பட சுமார் 550 கொத்தடிமைகள் செங்கல் சூளை ஒன்றில் இருந்து மீட்கப்பட்டதாக கூறப்பட்டு இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகா, போந்தவாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் செங்கல் சூளை ஒன்றில் 180 குடும்பங்களை சேர்ந்த தொழிலாளிகள் மிகவும் கொடூரமான முறையில் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு வந்தநிலையில் அவர்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இவர்கள் அனைவரும் காலை 3 மணியில் இருந்து வேலை செய்ய கட்டாயப் படுத்தப்பட்டதாகவும் மிக குறைந்த கூலி அளிக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. நாளிதழ்களில் வந்த, இந்த செய்தி உண்மையென்றால், பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளர்களுக்கு எதிராக மிகவும் கடுமையான முறையில் மனித உரிமை மீறப்பட்டதாக கருதப்படுகிறது.

எனவே, இந்த விஷயம் குறித்து தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறையின் செயலாளர், தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு இரு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கையில் மீட்கப்பட்ட கொத்தடிமைகளுக்கு வழங்கப்பட்ட நிவாரண உதவிகள் குறித்தும் அவர்களை விடுவித்தபோது வழங்கப்பட்ட நிவாரணத் தொகை பற்றியும் விரிவாக குறிப்பிட வேண்டும்" என்று கூறப்பட்டு உள்ளது.



No comments:

Post a Comment