Monetize Your Website or Blog

Wednesday, 2 March 2016

இந்திய அணி இலங்கையை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி

ஆசிய கோப்பை டி20 லீக் போட்டியில் இலங்கை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து 3 போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.


முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது இந்தியா. பவர்ப்ளே ஓவர்களில் அடித்து ஆட முற்பட்டு இலங்கை அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அவுட் ஆகினர். ஹர்திக் பாண்ட்யா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி பந்துவீச்சை பலப்படுத்தினார். 

இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை குவித்தது. அந்த அணியின் கப்பு கெதரா 30 ரன்களும், சிரிவர்த்தனா 22 ரன்களும் குவித்தனர். இந்திய அணி தரப்பில் பாண்ட்யா ,அஸ்வின், பூம்ரா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இலங்கை வீரர்கள் இரண்டு பேர் வைடு பந்தில் ஸ்டம்பிங்கும், நோ பால் பந்தில் ஃப்ரீ ஹிட்டை வேஸ்ட் செய்தது மட்டுமின்றி அவுட் ஆகியும்  சொதப்பினர்.
இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக அஸ்வின், பூம்ரா, பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்
139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. தொடக்க ஆட்டகாரர்களாக ஷிகர் தவான்-ரோஹித் சர்மா களமிறங்கினர். தொடக்க வீரர்கள் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்நிலையில் விராட் கோலி - யுவராஜ் ஜோடி அதிரடியாக விளையாடி வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர். 



இதனால் ஆட்டத்தின் இறுதியில் இந்திய அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக கோலி 56 எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார், யுவராஜ் 35, ரெய்னா 25 ரன்கள் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  


No comments:

Post a Comment