Monetize Your Website or Blog

Wednesday, 16 March 2016

ஜப்பானியக் காடை வளர்ப்பு:

ஜப்பானியக் காடை வளர்ப்புஜப்பானியக் காடை வளர்ப்பு தமிழகத்தில் பிரபலமாகிவரும்முக்கிய தொழில்களில் ஒன்றாகும்காடைகள் பொதுவாக முட்டைக்காகவும்இறைச்சிக்காகவும் வளர்க்கப் படுகின்றனஇருப்பினும் காடைகள் இறைச்சிக்காகவேஅதிகம் வளர்க்கப்படுகின்றதுடெல்லிசென்னைபெங்களூருதிருச்சிமதுரை மற்றும்கோவை போன்ற மாநகரங்களிலும் தமிழகத்தின் ஏனைய நகரங்களிலும் காடை வளர்ப்புதொழிலானது பெரிய பண்ணைத் தொழிலாகவே வளர்ந்துள்ளது.




இறைச்சிக்காடை வளர்ப்புஜப்பானியக் காடைகளை பொறுத்தவரையில் அவற்றைமிகக்குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் வளர்க்கலாம்கோழி வளர்ப்பினைப்போன்று அதிக அளவில் முதலீடு தேவையில்லைஇத்தொழிலில் குறைந்தமூலதனத்துடன் சிறிது பயிற்சி பெற்ற யாரேனும் ஈடுபடலாம்ஜப்பானியக் காடைகளுக்குநோய் எதிர்ப்புத்திறன் அதிகம்இதனால் எந்த ஒரு தட்பவெப்ப நிலையிலும் நன்றாகவளரும்கோழிகளைப் போல் பல தடுப்பூசிகள் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஜப்பானியக் காடைகள் முதல் ஆறு வாரத்திற்குள் விற்பனைக்குத் தயாராகிவிடுகின்றன.இதனால் முதலீடு செய்த குறைந்த நாட்களிலேயே லாபத்தைப் பெற முடியும்.ஜப்பானியக்காடை ஆறுவார காலத்தில் அதிகபட்சமாக 500 கிராம் அளவே தீவனம்உட்கொள்வதால் தீவனச்செலவு அதிகமின்றி குறைந்த முதலீட்டில் காடை வளர்ப்பைமேற்கொள்ள முடிகிறதுஇறைச்சிக்காக வளர்க்கும்பொழுதுகாடைகளைத் தரையிலோ(ஆழ்கூளக் குப்பை முறைஅல்லது கூண்டு முறையிலோ வளர்க்கலாம்.


ஆழ்கூள முறைஇறைச்சிக்காக ஜப்பானியக் காடையை ஆழ்கூள முறையில்வளர்க்கும்பொழுது ஒரு சதுர அடிக்கு 6 காடைகள் வரை வளர்க்கலாம்காடைகளை முதல்இரண்டு வாரம் வரை ஆழ்கூள முறையில் வளர்த்து பின்னர் கூண்டுகளுக்கு மாற்றி ஆறுவாரம் வரை வளர்க்கலாம்ஆழ்கூள முறையில் இரண்டு வாரத்திற்கு மேம்பட்டுகாடைகளை வளர்த்தால் அவை அதிகம் அலைந்து திரிந்துஉட்கொண்ட தீனியின்எரிசக்தியை வீணாக்கிகுறைந்த எடையுடன் அதிகத் தீனிச்செலவும் ஏற்படுத்தும்எனவே,காடைகளை ஆழ்கூள முறையில் இருவாரங்களுக்கு வளர்த்துபிறகு கூண்டுகளுக்குள்மாற்றி வளர்ப்பதே சிறந்த பராமரிப்பு முறையாகும்.

கூண்டுமுறை வளர்ப்புஇறைச்சிக்காகக் காடைகளை வளர்க்கும்பொழுது முதல் இரண்டுவாரம் வரை 3 அடி நீளம்இரண்டரை அடி அகலம் உள்ள கூண்டுகளில் கூண்டு ஒன்றுக்கு100 காடைக்குஞ்சுகள் வரை வளர்க்கலாம்அவற்றை 3 முதல் 6 வாரம் வரை 4 அடி நீளம்,இரண்டரை அடி அகலம், 18 அங்குல உயரம் உள்ள கூண்டுகளில் கூண்டு ஒன்றுக்கு 50காடைகள் வரை வளர்க்கலாம்.


                       


தீவனம் அளித்தல்ஜப்பானியக் காடைகளுக்கும்கோழித் தீவனத்தில் பயன்படுத்தப்படும்மூலப் பொருட்களே உபயோகப்படுத்தலாம்காடைகளுக்கு குஞ்சு பருவத்தில் அளிக்கும்தீவனம் 26 முதல் 28 சதவீதம் புரதமும், 270 கி.கலோரி எரிசக்தியும் கொண்டதாக இருக்கவேண்டும்இவ்வகைத் தீவனத்தை முதல் 6 வாரம் வரை உபயோகிக்கலாம்ஆனால் இந்தவயதிற்குள் இருவகைத் தீனிகளை மாற்றிப் பயன்படுத்த திட்டமிடும்பொழுது முதல் மூன்றுவாரங்கள் வரை 24 சதவீத புரதமும், 2800 கி.கலோரி எரிசக்தியும் உள்ள தீனியைஉபயோகிக்கலாம்.


ஜப்பானியக் காடை வளர்ச்சிசுத்தம் செய்யப்பட்ட காடை இறைச்சியின் எடை உயிருள்ளகாடையின் எடையில் சுமார் 65 முதல் 70 சதவீதம் வரை இருக்கும்சுமார் 140 கிராம்எடையுள்ள காடையை சுத்தம் செய்தால் 100 கிராம் எடையுள்ள இறைச்சி கிடைக்கும்.காடை இறைச்சி மிகவும் சுவையாக இருப்பதால் நல்ல விற்பனை விலை கிடைக்கிறது.காடை இறைச்சியில் அதிக புரதமும் (20.5 சதவீதம்), குறைந்த அளவு கொழுப்பும் (5 சதவீதம்)இருப்பதால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்ற உணவாக கருதப்படுகிறது

(தகவல்ரா.தங்கத்துரைபிஎச்.டி., வெ.பழனிச்சாமிபிஎச்.டி., வீ.தவசியப்பன்எம்.வி.எஸ்சி.,வேளாண் அறிவியல் நிலையம்குன்றக்குடி-630 206. 04577-264 288) 


No comments:

Post a Comment