இந்தியாவின் மிகப்பெரிய இன்ஷூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி முதலீடுகளிலும் ஈடுபட்டு வருவது எல்லோரும் அறிந்ததே. அதில் ஒன்றுதான் எல்ஐசி நோமுரா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம். மார்ச் 4-ம் தேதி இந்த நிறுவனம் எல்ஐசி நோமுரா மியூச்சுவல் ஃபண்ட் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்-நிஃப்டி 100 என்ற புதிய ஃபண்டை அறிமுகம் செய்துள்ளது.

இது ஒரு ஒபன் என்டட் ஃபண்ட் ஆகும். ராஜீவ் காந்தி பங்கு சேமிப்பு திட்டத்தின் ஒப்புதல் பெற்ற இந்த ஃபண்ட் நிஃப்டி 100 இண்டெக்ஸில் இடம் பெற்றிருக்கிறது. ஓரளவு ரிஸ்க் எடுப்பர்களுக்கு ஏற்ற ஃபண்டாக இது குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் குறைந்தபட்ச விண்ணப்ப தொகை ரூ. 5000.
மார்ச் 4-ம் தேதி முதல் மார்ச் 11-ம் தேதி வரை இந்தப் புதிய ஃபண்டில் முதலீடு செய்யலாம்.

No comments:
Post a Comment