
File Photo
'அ.தி.மு.க கூட்டணிதான் ஒரே சாய்ஸ்' என்று நம்பிக் கொண்டிருந்த வாசன், தற்போது மக்கள் நலக் கூட்டணியில் ஐக்கியமாகிவிட்டார். இன்று விஜயகாந்தை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
'அ.தி.மு.க அணியில் ஏழு சீட்டுகள் மட்டுமே கொடுப்போம். அதுவும் இரட்டை இலை சின்னம்தான்' என ஜெயலலிதா உறுதியாகக் கூறியதால், ரொம்பவே நொந்து போனார் ஜி.கே.வாசன். கட்சி நிர்வாகிகளிடம் அவர் பேசும்போது, " நீங்கள் எல்லாம் மகிழ்ச்சியடையும் வகையில் கூட்டணி அமைய வேண்டும் என்றுதான் விரும்பினேன். அ.தி.மு.கவின் முடிவுக்கு நாம் கட்டுப்பட்டால், பதினைந்து மாதம் பாடுபட்டு வளர்த்த கட்சியை நாமே அடகு வைத்ததுபோல ஆகிவிடும்.
நமகென்று ஒரு கௌரவம் இருக்கிறது. உண்மையான காங்கிரஸ் தொண்டர்களும் நம் பக்கம் இருக்கிறார்கள். பா.ம.கவுடன் சேர்ந்தால் டெபாசிட்தான் இழப்போம். எனவே, மக்கள் நலக் கூட்டணிதான் நம் கண்முன் பிரகாசமாக இருக்கிறது. அ.தி.மு.க அணிக்கு சரியான போட்டியும் மக்கள் நலக் கூட்டணிதான். தி.மு.க, காங்கிரஸை மக்கள் ஒருபொருட்டாகவே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். கேப்டனோடு சேர்ந்தால் கௌரவமான வெற்றியும் கிடைக்கும்" என்று சொல்லி உற்சாகப்படுத்தினார். 'அ.தி.மு.க அணியில் ஏழு சீட்டுகள் மட்டுமே கொடுப்போம். அதுவும் இரட்டை இலை சின்னம்தான்' என ஜெயலலிதா உறுதியாகக் கூறியதால், ரொம்பவே நொந்து போனார் ஜி.கே.வாசன். கட்சி நிர்வாகிகளிடம் அவர் பேசும்போது, " நீங்கள் எல்லாம் மகிழ்ச்சியடையும் வகையில் கூட்டணி அமைய வேண்டும் என்றுதான் விரும்பினேன். அ.தி.மு.கவின் முடிவுக்கு நாம் கட்டுப்பட்டால், பதினைந்து மாதம் பாடுபட்டு வளர்த்த கட்சியை நாமே அடகு வைத்ததுபோல ஆகிவிடும்.
இதனை, கட்சியின் சீனியர்களான ஞானதேசிகன், பீட்டல் அல்போன்ஸ், ஞானசேகரன் உள்ளிட்டவர்கள் ஏற்றுக் கொண்டனர். இதில், ஒருசிலர் தி.மு.க கூட்டணிக்குக் கடைசிவரையில் முயற்சி செய்தார்கள். சோனியாவின் கண்டிப்பான உத்தரவால், தி.மு.க அணியில் வாசன் இணைய முடியவில்லை. 'இதுவும் ஒருவகையில் நல்லதுதான்' என நினைத்த வாசன், ஒருவழியாக மக்கள் நலக் கூட்டணியை டிக் அடித்துவிட்டார். இன்று மதியம் 3 மணிக்கு தேனாம்பேட்டையில் உள்ள தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் வருகிறார்கள். அவர்களிடம் பேசிவிட்டு, சரியாக நான்கு மணியளவில் கோயம்பேட்டில் உள்ள தே.மு.திக. அலுவலகத்தில் விஜயகாந்த்தை சந்திக்கிறார் வாசன். எத்தனை தொகுதிகள், எந்தெந்த இடங்கள் என்பதைப் பற்றியும் இன்றே இறுதி செய்கிறார்கள்.
இதுபற்றி நம்மிடம் பேசிய மக்கள் நலக் கூட்டணியின் நிர்வாகி ஒருவர், " மக்கள் நலக் கூட்டணிக்கு விஜயகாந்த் வரும்போதே, முக்கியமான ஒரு கண்டிஷனையும் முன்வைத்தோம். புதிதாக வேறு எந்தப் பெரிய கட்சி வந்தாலும், அவர்களுக்கு தே.மு.தி.கவுக்கு ஒதுக்கிய இடங்களில் இருந்துதான் சீட் ஒதுக்க வேண்டும் என்று சொன்னோம். கேப்டனும் ஏற்றுக் கொண்டார்.
மக்கள் நலக் கூட்டணியின் தோப்புக்குள் தென்னையும் இடம் பெற்றுவிட்டது. தேர்தல் முடிவில் எத்தனை தேங்காய்கள் காய்க்கும் என்பதும் தெரிந்துவிடும்.

No comments:
Post a Comment