Monetize Your Website or Blog

Wednesday, 16 March 2016

உயர்தர நாட்டு பசுக்கள்

தார்பார்க்கர் பசு: 

இப்பசுவின் பூர்வீகம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தார் பாலைவனம் ஆகும்.பாகிஸ்தானை ஒட்டிய எல்லையோர கிராமங்களில் இவை பரவலாக காணப்படும்.வெள்ளை மற்றும் கருப்பு கலந்த வண்ணத்தில் இவை இருக்கும்இப்பசுக்களின் எடை சுமார்295-325 கிலோ இருக்கும்நாளொன்றுக்கு 10-15 லிட்டர் பால் கறக்கும்இதன் கொம்புகள்சிறியதாக பின்நோக்கியும் மேல் நோக்கியும் இருக்கும்காதுகள் பெரியதாக முன்னோக்கிதொங்கிக் கொண்டிருக்கும்.




இதர குறிப்புகள்:


முதல் ஈத்துக்கு தயாராகும் நாட்கள்-1250. ஈத்து இடைவெளி - 435 நாட்கள்நன்மைசெய்யக்கூடிய கொழுப்பு சத்து - 4.9%.


கிர் பசு: 

இதன் பூர்வீகம் குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் காடுகள் ஆகும்இதன் தோல் செவ்வலைநிறத்தில் மிருதுவாக இருக்கும்சில வகை கிர் பசுக்களுக்கு வெள்ளை புள்ளிகள் இருக்கும்.சாந்த குணம் கொண்டதுசிறியவர் கூட பால் கறக்கலாம்இதன் தலை பெரியதாகவும்,நெற்றி விரிவடைந்ததாகவும்கண்கள் அரை தூக்கத்தில் இருப்பது போல் தோற்றம்அளிக்கும்காதுகள் நீண்டு சுருண்டு இருக்கும்.

இதர குறிப்புகள்:
எடை : 310-335 கிலோமுதல் ஈத்துக்கு தயாராகும் நாட்கள் - 1550. ஈத்து இடைவெளி - 520நாட்கள்நாளொன்றுக்கு பால் கறக்கும் திறன் : 10-18 லிட்டர்நன்மை செய்யக்கூடியகொழுப்புச்சத்து-4.4%

காங்ரெஜ் பசு:

 இதுவும் குஜராத் மாநிலத்தை தாயகமாக கொண்டதுமிகவும் வலிமை வாய்ந்ததுஉழவுத்தொழிலுக்கும் இப்பசுக்களை பயன்படுத்தலாம்வெள்ளை மற்றும் கறுப்பு கலந்த வெள்ளைநிறத்தில் இப்பசுக்கள் இருக்கும்நெற்றி அகன்று இருக்கும்கொம்புகள் பெரியதாக அகன்றுவிரிந்து இருக்கும்மிகவும் சுறுசுறுப்பாக காணப்படும்.


இதர குறிப்புகள்:

இதன் எடை: 360-385 கிலோமுதல் ஈத்துக்கு தயாராகும் நாட்கள் - 1440. ஈத்து இடைவெளி: 490 நாட்கள்நாள் ஒன்றுக்கு பால் கறக்கும் திறன்: 10-15 லிட்டர்நன்மை செய்யக்கூடியகொழுப்புச்சத்து: 4.8%.

இப்பசுக்களின் சிறப்பம்சங்கள்: 

வெயில் மற்றும் மழை போன்ற எந்த சீதோஷ்ணத்திற்கும் கட்டுப்பட்டு வாழும்.இப்பசுக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்தேவையற்ற ரசாயன ஊசிகள் இதற்குதேவையில்லைமருத்துவ செலவுகள் வைக்காதுநோய் எதிர்ப்புசக்தி அதிகம் கொண்டஇப்பசுக்களின் பால் மற்றும் நெய் மனிதனுக்கு பலவகைகளில் நன்மை செய்யக்கூடியவை.

இதன் சாணம் மற்றும் கோமியம் அதிக சக்தி வாய்ந்த தொழு உரம் உற்பத்தி செய்யஉதவுகிறதுஇயற்கை விவசாயத்திற்கு இது பெருமளவில் உதவிபுரியும்வறட்சிக்காலங்களிலும் இப்பசுக்கள் பால் கொடுக்கும் வல்லமை பெற்றதுஇவைகளுக்குதேவையான விந்தூசி இப்பொழுது தமிழகத்தில் பரவலாக கிடைக்கிறது.


எஸ்.ராஜேந்திரன், 92620 41231.



No comments:

Post a Comment