Monetize Your Website or Blog

Friday, 1 April 2016

நான் நல்லா ஓடுறேனா? அடுத்த உலகக் கோப்பைல ஆடுவேனா? நிருபரை கலாய்த்த தோனி!

உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்தவுடன் நிருபர்களை சந்தித்தார் தோனி. முதல் கேள்வியே நீங்கள் எப்போது ஓய்வு பெறுவீர்கள் என்ற கேள்வியாக தான் வந்தது. சட்டென்று நிருபரை அழைத்த தோனி "வாங்க வாங்க வாங்க.. இங்க வந்து உட்காருங்க.." தன் அருகில் இருக்கிற நாற்காலியை இழுத்து அந்த நிருபரை அமர சொன்னார்.
அவரது தோளில் கை போட்டு நான் இந்திய ஊடகத்திலிருந்து ஒருவர் இந்தக் கேள்வியைக் கேட்டிருப்பார் என்று நினைத்தேன். ஏனென்றால் அவர் சகோதரனோ, உறவினரோ இந்தியாவுக்காக விளையாட ரெடியாக இருப்பாங்க அதனால் தான் இந்த கேள்வியை கேட்டிருப்பார் என நினைத்தேன் என் ஆரம்பித்தார் கேப்டன் கூல்.

பின்பு கேள்வி கேட்க வந்த நிருபரை தோனி கேள்வி கேட்க துவங்கினார்.

தோனி: நான் வேகமாக ஓடுகிறேனா? 

நிருபர்: ''ரியலி பாஸ்ட்'' வேகமாக தான் ஓடுகிறீர்கள்

தோனி: 2019 உலகக் கோப்பைல ஆடுவேன்னு நினைக்குறீங்களா?

நிருபர்: நிச்சயமா ஆடுவீங்க...

சிரித்தபடியே நிருபரை தோளில் தட்டுக் கொடுத்து உங்கள் கேள்விக்கு பதிலை நீங்களே கூறிவிட்டீர்கள். நன்றி என கூறி தன்னை கேப்டன் கூல் என நிருபித்தார் தோனி!
 



கேப்டன் கூல் என தோனியை அனைவரும் ஏன் கூறுகிறார்கள் என்பதற்கு இது மேலும் ஒரு உதாரணம்.


No comments:

Post a Comment