கிரானைட் முறைகேடு வழக்கு தொடர்பாக மேலூர் நீதிபதி மகேந்திர பூபதியிடம் 2 நீதிபதிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமை நீதிபதி உத்தரவுப்படி உயர் நீதிமன்ற மதுரை கிளையின் 2 நீதிபதிகள் இந்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
கிரானைட் முறைகேடு வழக்கில் பி.ஆர்.பழனிச்சாமியை விடுவித்து நீதிபதி மகேந்திர பூபதி உத்தரவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இவர் மீது விசாரணை நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவை விடுவித்து உத்தரவிட்டு சர்ச்சையில் சிக்கிய நீதிபதி குமாரசாமிக்கு பின்னர், அதேபோன்றதொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் நீதிபதி மகேந்திரபூபதி.
"தமிழகத்தையே மிரளவைத்த கிரானைட் முறைகேடு வழக்கு விசாரணையில் உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டு வருகிறார் மேலூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி. அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு அல்லது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி பி.என்.பிரகாஷ் கூறிய பரபரப்பே இன்னும் முடியாத நிலையில், அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பி.ஆர்.பழனிச்சாமியை விடுவித்து பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நீதிபதி மகேந்திரபூபதி.
பல்லாயிரம் கோடி மோசடி நடந்ததாகக் கூறப்படும் கிரானைட் குவாரி வழக்கில், குவாரி அதிபர்களுக்கு ஆதரவாக நீதித்துறையினரே செயல்பட்டு வருவதாக சந்தேகம் எழுந்த நிலையில், அதை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது பி.ஆர்.பழனிச்சாமி விடுதலை.

இந்நிலையில், இன்று கிரானைட் முறைகேடு வழக்கு தொடர்பாக மேலூர் நீதிபதி மகேந்திர பூபதியிடம் 2 நீதிபதிகள் விசாரணையை துவக்கியுள்ளனர். தலைமை நீதிபதி உத்தரவுப்படி உயர் நீதிமன்ற மதுரை கிளையின் 2 நீதிபதிகள் இந்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழகத்தை உலுக்கிய கிரானைட் மோசடிகள் முழுக்க முழுக்க மதுரை மாவட்டம், மேலூரில் தான் அதிகம் நடக்கிறது. இது தொடர்பான 98 வழக்குகள் கீழவளவு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கு மேலூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் 3 வழக்குகளை மட்டுமே மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். ஆரம்பத்தில் இருந்தே விசாரணையில் பி.ஆர்.பி. நிறுவனத்துக்கு சார்பாகவே இவர் செயல்பட்டு வந்தார். இதன் உச்சமாகத்தான் பி.ஆர்.பழனிச்சாமி விடுவிக்கப்பட்டது. ஒரு கலெக்டர் போட்ட வழக்கை மற்றொரு கலெக்டர் நடத்துவது என்பது நடைமுறை. ஆனால் அதை காரணம் காட்டி இந்த வழக்கில் இருந்து பி.ஆர்.பழனிச்சாமியை விடுவித்துள்ளார் நீதிபதி. இது இல்லாமல் மேலும் சில புகார்களும் மகேந்திர பூபதி மீது உள்ளது. அது தொடர்பாகவும் இப்போது விசாரனை நடந்து வருகிறது," என்கின்றன நீதித்துறை வட்டாரங்கள்.
மகேந்திர பூபதி மீது என்ன புகார்?
கிரானைட் விவகாரத்தில் மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி மீது பல புகார்கள் சொல்லப்படுகிறது. முதலாவது 98 வழக்குகள் பதிவான நிலையில், அதில் 3 வழக்குகளை மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொண்டு 95 வழக்குகளை கிடப்பில் போட்டது.

இரண்டாவது எடுத்துக்கொள்ளப்பட்ட 3 வழக்குகளிலும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளான பொதுச்சொத்துக்களைச் சேதம் விளைவிப்பதைத் தடுத்தல், வெடிபொருள் சட்டம் போன்ற குற்றச்சாட்டுக்கள் விசாரணையின் போது எடுத்துக்கொள்ளப்படாதது.
மூன்றாவது, போலீஸ் சமர்ப்பித்திருக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு போதிய முகாந்திரம் உள்ளது. அதனால், அனைத்து குற்றச்சாட்டுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றமே உத்தரவிட்ட பின்னரும் அதை கண்டுகொள்ளாமல் செயல்பட்டது.

நான்காவது, இத்தனையையும் மீறி வழக்கு தொடுத்த அதிகாரிகளை குற்றம்சாட்டி, குற்றம்சாட்டப்பட்டவர்களை சர்வசாதாரணமாக விடுவித்தது என மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதியை ஏராளமான சர்ச்சைகள் சூழ்ந்துள்ளது.
என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:
Post a Comment