ஒரே நாளில் நீங்கள் கோடீஸ்வரர், எப்படி?’ என்று தெரிந்துகொள்ள நீங்கள் ஆவலாக இருப்பீர்கள். இன்று ஏப்ரல் 1-ஆம் தேதி. அகில உலக முட்டாள்கள் தினம். இந்த தினத்தில் உங்களிடம் நீங்கள் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகலாம் என்று சொல்லி, உங்கள் மனதில் ஆசை விதையை தூவக்கூடும். ஃபாரக்ஸ் டிரேடிங், ஈமு கோழி வளர்த்தல் என்பது போன்ற ஏதாவது திட்டங்களை சொல்லக்கூடும். அந்த வழிகளில் எல்லாம் கோடீஸ்வரர் ஆகிவிட முடியாது.
ஆனால், நீங்களும் நிச்சயம் கோடீஸ்வரர் ஆகமுடியும். இதற்கு தொடர்ந்து முறையாக சிறிய தொகையை முதலீடு செய்து வந்தாலே போதும். உதாரணத்துக்கு, ஒருவர் தனது 20 வயதில் மாதம் ரூ.850 முதலீடு செய்தால், அவரின் 60-வது வயதில் அவர் கோடீஸ்வரர்தான். இந்த 850 ரூபாய் கூடவா உங்களால் முதலீடு செய்ய முடியாது?
நீங்களும் கோடீஸ்வரர் ஆக முடியும்!
நம்மில் பலருக்கு லட்சாதிபதியாகவும் கோடீஸ்வரராகவும் ஆக வேண்டும் என்பது நீண்ட கால கனவாக இருக்கிறது. ஆனால், நம்மில் ஒரு சிலர்தான் இந்த இலக்கை அடைகிறார்கள். அவர்களது முதலீட்டுத் தன்மையை மற்றவர்கள் பின்பற்றினால் வருங்காலத்தில் அனைவரும் லட்சாதிபதியாகவும் கோடீஸ்வரராகவும் ஆக முடியும். எப்படி?
இந்தியாவில் அதிகம் இளைஞர்கள் உள்ளனர். இன்று 70 சதவிகித இளைஞர்கள் கடனில் வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள். காரணம், கிரெடிட் கார்ட் (கடன் அட்டை), தனிநபர் கடன், கல்விக் கடன் என்று முதல் சம்பளமே கடனுக்குத்தான் செல்கிறது.
சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை வருங்காலத்துக்கு சேமிக்க வேண்டும் என்பதற்கு பதில், ஆரம்பமே கடனில் ஆரம்பிப்பதால் வாழ்க்கை முழுக்க அனைத்தையும் கடன் பெற்றுதான் எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதில், மாறுபட்டு இளம் வயதினிலே சேமிப்பில் (முதலீடு) தொடங்குபவர்களே மிகப் பெரிய செல்வந்தராக முடிகிறது.
இளைஞர்களே, உங்களுடைய வருமானத்திலோ, தாய், தந்தையர் கொடுக்கும் பணத்திலோ, நீங்கள் என்னென்ன செலவுகள் செய்கிறீர்கள் என்பதனை பட்டியலிடுங்கள். இன்றைய இளைஞர்களின் குறிப்பான சில செலவுகளைப் பார்ப்போம்.
(1) வாரம் ஒரு முறை தனியாகவோ அல்லது நண்பர்களுடன் சேர்ந்தோ சினிமா பார்ப்பது.
(2) செல்போனுக்கு அடிக்கடி ரீ-சார்ஜ் செய்தல்
(3) தனிப்பட்ட சந்தோஷத்துக்காக அதிக செலவு செய்தல்
(4) இரு சக்கர வாகனத்தில் ஊர் சுற்றுவது.
(5) தனியாகவோ அல்லது நண்பர்களுடன் ஓட்டல்களில் அடிக்கடி சாப்பிடுவது
இவ்வாறு நீங்கள் செய்யும் செலவுகளை குறைத்துகொண்டு, உங்களால் மாதம் ரூ.100 சேமிக்க முடியுமானால், நீங்கள் ஒவ்வொருவரும் லட்சாதிபதியாகலாம். இதுவே உங்களால் மாதம் ரூ.1,000 சேமிக்க முடியுமானால் நீங்கள் கோடீஸ்வரராகலாம்.
எப்படி, எப்படி?
இது எவ்வாறு சாத்தியம் என்பதனை விளக்கமாக பார்ப்போம்.
இன்றைய சூழ்நிலையில் “செலவு செய்வதற்கு பல ஆயிரம் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், முதலீடு செய்ய சில அரிய வாய்ப்புகள் மட்டுமே உள்ளன”.
பெற்றோர்களோ வருமானம் ஈட்டுவதற்கு மிகவும் கடினமாகவே உழைக்க வேண்டி உள்ளது. ஆனால், அவ்வாறு ஈட்டும் வருமானத்தை பிள்ளைகள் செலவு செய்வதற்கு ஒரு நிமிடம்கூட ஆவதில்லை. காரணம், நம் மனதில் நமது நண்பனான முதலீட்டின் வலிமையைவிட, செலவு என்னும் வில்லனே மிகவும் வலிமையுடன் இருக்கிறான்.
எந்தச் செலவை செய்தாலும் பார்த்து பார்த்து கவனத்துடன் செய்து, அதனை பின்னுக்கு தள்ளி முதலீட்டுக்கு முதல் மரியாதை கொடுக்க பழகிக் கொள்ள வேண்டும். நம் முன்னோர்கள் “இன்றைய சிக்கனம், நாளைக்கு வளமான வாழ்கையைத் தரும்“ என்கிற விதத்தில் சேமித்து வந்தார்கள்.
ஆனால், நீங்களும் நிச்சயம் கோடீஸ்வரர் ஆகமுடியும். இதற்கு தொடர்ந்து முறையாக சிறிய தொகையை முதலீடு செய்து வந்தாலே போதும். உதாரணத்துக்கு, ஒருவர் தனது 20 வயதில் மாதம் ரூ.850 முதலீடு செய்தால், அவரின் 60-வது வயதில் அவர் கோடீஸ்வரர்தான். இந்த 850 ரூபாய் கூடவா உங்களால் முதலீடு செய்ய முடியாது?
நீங்களும் கோடீஸ்வரர் ஆக முடியும்!
நம்மில் பலருக்கு லட்சாதிபதியாகவும் கோடீஸ்வரராகவும் ஆக வேண்டும் என்பது நீண்ட கால கனவாக இருக்கிறது. ஆனால், நம்மில் ஒரு சிலர்தான் இந்த இலக்கை அடைகிறார்கள். அவர்களது முதலீட்டுத் தன்மையை மற்றவர்கள் பின்பற்றினால் வருங்காலத்தில் அனைவரும் லட்சாதிபதியாகவும் கோடீஸ்வரராகவும் ஆக முடியும். எப்படி?இந்தியாவில் அதிகம் இளைஞர்கள் உள்ளனர். இன்று 70 சதவிகித இளைஞர்கள் கடனில் வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள். காரணம், கிரெடிட் கார்ட் (கடன் அட்டை), தனிநபர் கடன், கல்விக் கடன் என்று முதல் சம்பளமே கடனுக்குத்தான் செல்கிறது.
சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை வருங்காலத்துக்கு சேமிக்க வேண்டும் என்பதற்கு பதில், ஆரம்பமே கடனில் ஆரம்பிப்பதால் வாழ்க்கை முழுக்க அனைத்தையும் கடன் பெற்றுதான் எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதில், மாறுபட்டு இளம் வயதினிலே சேமிப்பில் (முதலீடு) தொடங்குபவர்களே மிகப் பெரிய செல்வந்தராக முடிகிறது.
இளைஞர்களே, உங்களுடைய வருமானத்திலோ, தாய், தந்தையர் கொடுக்கும் பணத்திலோ, நீங்கள் என்னென்ன செலவுகள் செய்கிறீர்கள் என்பதனை பட்டியலிடுங்கள். இன்றைய இளைஞர்களின் குறிப்பான சில செலவுகளைப் பார்ப்போம்.
(1) வாரம் ஒரு முறை தனியாகவோ அல்லது நண்பர்களுடன் சேர்ந்தோ சினிமா பார்ப்பது.
(2) செல்போனுக்கு அடிக்கடி ரீ-சார்ஜ் செய்தல்
(3) தனிப்பட்ட சந்தோஷத்துக்காக அதிக செலவு செய்தல்
(4) இரு சக்கர வாகனத்தில் ஊர் சுற்றுவது.
(5) தனியாகவோ அல்லது நண்பர்களுடன் ஓட்டல்களில் அடிக்கடி சாப்பிடுவது
இவ்வாறு நீங்கள் செய்யும் செலவுகளை குறைத்துகொண்டு, உங்களால் மாதம் ரூ.100 சேமிக்க முடியுமானால், நீங்கள் ஒவ்வொருவரும் லட்சாதிபதியாகலாம். இதுவே உங்களால் மாதம் ரூ.1,000 சேமிக்க முடியுமானால் நீங்கள் கோடீஸ்வரராகலாம்.
எப்படி, எப்படி?
இது எவ்வாறு சாத்தியம் என்பதனை விளக்கமாக பார்ப்போம்.
இன்றைய சூழ்நிலையில் “செலவு செய்வதற்கு பல ஆயிரம் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், முதலீடு செய்ய சில அரிய வாய்ப்புகள் மட்டுமே உள்ளன”.
பெற்றோர்களோ வருமானம் ஈட்டுவதற்கு மிகவும் கடினமாகவே உழைக்க வேண்டி உள்ளது. ஆனால், அவ்வாறு ஈட்டும் வருமானத்தை பிள்ளைகள் செலவு செய்வதற்கு ஒரு நிமிடம்கூட ஆவதில்லை. காரணம், நம் மனதில் நமது நண்பனான முதலீட்டின் வலிமையைவிட, செலவு என்னும் வில்லனே மிகவும் வலிமையுடன் இருக்கிறான்.
எந்தச் செலவை செய்தாலும் பார்த்து பார்த்து கவனத்துடன் செய்து, அதனை பின்னுக்கு தள்ளி முதலீட்டுக்கு முதல் மரியாதை கொடுக்க பழகிக் கொள்ள வேண்டும். நம் முன்னோர்கள் “இன்றைய சிக்கனம், நாளைக்கு வளமான வாழ்கையைத் தரும்“ என்கிற விதத்தில் சேமித்து வந்தார்கள்.

அதற்கு மாறாக இன்றைய இளைஞர்கள், ‘‘இன்றைய சந்தோஷம் போதும். வருங்காலம் வரும்போது பார்த்துக் கொள்வோம்” என்கிற ரீதியில் செயல்படுகிறார்கள். இத்தகைய மாறுபாட்டின் காரணமாகவே, நம் முன்னோர்கள், தங்களையும் உயர்த்தி கொண்டு, சந்ததியினருக்கும் செல்வத்தை சேர்த்து வைத்தனர். ஆனால் இன்றைக்கு இளைஞர்கள் வளமாக, ஆடம்பரமாக, வாழ்ந்து கொண்டு வாரிசுகளுக்கு ஒன்றுமே சேர்த்து வைப்பதில்லை. இன்றைய தலைமுறையினர் கீழ்க்கண்ட பண விதியைப் பின்பற்றினால், வளமாக வாழ்ந்துக் கொண்டு கோடீஸ்வரராகவும் ஆக முடியும்.
அவர்கள் செலவு போக மீதமுள்ளதை சேமிப்பதற்குப் பதில், முதலில் சேமிப்புக்கான தொகையை தனியாக எடுத்து வைத்துவிட்டு, மீதியை பட்ஜெட் போட்டு செலவு செய்தால் கூடிய விரைவிலேயே செல்வந்தர் ஆக முடியும்.
எட்டாவது அதிசயம்!
பணக்காரர்களைப் பார்த்து, நாம் அவர்களைப் போல ஆகவேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆனால், அது நிஜம் ஆகாமல் இருப்பதற்கு முக்கிய காரணம், ஒன்றே ஒன்றுதான். அதாவது, எட்டாவது அதிசயசத்தை பயன்படுத்தாததே காரணம். உலகில் முதலீடு மூலம் பணக்காரர்கள் ஆன அனைவரும் இந்த எட்டாவது அதிசயத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள். அது என்ன எட்டாவது அதிசயம் என்கிறீர்களா? கூட்டு வளர்ச்சி என்கிற பவர் ஆஃப் காம்பவுண்டிங்தான் அது. இந்த எட்டாவது அதிசயத்தின் பலன்களை ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம்.
பொதுவாக, பணத் தேவையை அடைய இரு வழிகள் உள்ளன. அதாவது, இன்றிலிருந்து 30 வருடம் கழித்து, ரூ.1 லட்சம் அல்லது ரூ.1 கோடி ரூபாய் தேவை என்றால், அதனை அடைய இரண்டு வழிகள் உள்ளன.
லட்சாதிபதிக்கான இலக்கு..!
(1) 30 வருடங்கள் (30x12 = 360 மாதங்கள்), இதனை மாதா மாதம் வீட்டிலேயே உண்டியலில் சேமித்து வைக்கலாம். மாதம் ரூ.278 சேமித்தால், ரூ.1 லட்சம் சேர்ந்துவிடும்.
(2) ஆனால், ஏதாவது ஒரு நல்ல மியூச்சுவல் ஃபண்டில் மாதம் ரூ.29-யை 30 வருடங்களுக்கு முதலீடு செய்தாலே லட்சாதிபதியாகி விடலாம். அதாவது, முதலீடு செய்த வெறும் ரூ.10,440, ஆண்டுக்கு 12% வளர்ச்சி கண்டால், 30-வது வருடத்தில் ரூ.1,04,400 கிடைக்கும். அதாவது, இளைஞர் ஒருவர் அவரின் 20 வயதில் மாதம் ரூ.29 முதலீடு செய்ய ஆரம்பித்தால், அவரின் 50-வது வயதில் லட்சாதிபதி ஆகிவிடுவார். இதுவே மாதம் ரூ.100 முதலீடு செய்தால், அவருடைய 50-வது வயதில் ரூ.3.5 லட்சம் கிடைக்கும். இந்த 100 ரூபாய் முதலீட்டை 60 வயது வரை தொடர்ந்தால், அது ஆண்டுக்கு 12% வருமான பெருக்கில் ரூ.11 லட்சமாக பெருகி இருக்கும். இப்போது சொல்லுங்கள், லட்சாதிபதியாவது பெரிய காரியமா என்ன?
கோடீஸ்வரருக்கான இலக்கு..!
(1) முதல் வழி - 20 வயது உடைய நபர் ஒருவருக்கு 60-வது வயதில் ரூ.1 கோடி தேவை என்று வைத்துக் கொள்வோம். அவர் 60 வயதை அடைய (40 x 12) = 480 மாதங்கள் இருக்கின்றன.
இவர் மாதம் மாதம் உண்டியலில் ரூ.20,833 சேர்த்தால், அவர் அடைய நினைக்கும் 1 கோடி ரூபாய் கிடைக்கும்.
(2) இரண்டாவது வழி, ரூ.1 கோடி தேவை எனில், 12%, கூட்டு வட்டியில் வளர்ச்சி அடையக்கூடிய மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை தேர்ந்தெடுத்து, மாதம் ரூ.849 முதலீடு செய்து வந்தாலே போதும். 480 மாதங்கள் செய்யும் மொத்த முதலீடு ரூ.4,07,520. ஆனால், 60 வயதில் கிடைக்கும் தொகையோ ரூ.1 கோடி. இதுவே ரூ.1,000 மாதம் முதலீடு செய்தால், ரூ.1.17 கோடி கிடைக்கும்.
ஆக நீண்ட கால கூட்டு வளர்ச்சியின் மூலமாக கிடைக்கக்கூடிய முதலீட்டை தேர்ந்தெடுத்தால் தங்களது இலக்கை புத்திசாலித்தனமாக சுலபமாக அடைய முடியும். இந்த உத்தியைத்தான் உலகப் பணக்காரர்களும், செல்வந்தர்களும், கோடீஸ்வரர்களும் பயன்படுத்துகின்றனர்.
எவர் ஒருவர் பணத்தை நீண்ட காலத்துக்கு உழைக்க வைக்கிறாரோ, அவரே, லட்சாதிபதியாகவும், கோடீஸ்வரராகவும் மாறுகிறார். இன்றைக்குப் பிறந்திருக்கும் இந்த புதிய நிதியாண்டு (2016-17) முதல் இது போன்ற முதலீடுகளைத் தொடங்கி வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள்.

No comments:
Post a Comment