வீரனின் பெயரை வைத்துக்கொண்டு இப்படியா கோழைத்தனமாக, கேவலமாக நடந்து கொள்வது என மு.க.ஸ்டாலினை வறுத்தெடுக்க துவங்கியுள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.

தேமுதிகவில் கட்சி பொறுப்புகள் எதுவும் இல்லாவிட்டாலும், கட்சியில் எல்லாமே பிரேமலதா தான். 'எனக்கு எந்த பதவிக்கும் வர வேண்டும் என்ற எண்ணம் இல்லை. எனக்கு அண்ணியார் என்ற பதவியே போதும்' என சொல்லி வந்தாலும், கட்சியின் போக்கை முழுமையாக தீர்மானிப்பவராகவே இருந்து வருகிறார். இதன் உச்சமாக தான் விஜயகாந்த் இல்லாமலேயே தனித்து தேர்தல் அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டத்தை தமிழகம் முழுக்க நடத்தி வருகிறார். விஜயகாந்த்தை விட பிரேமலதாவிடம் முகம் காட்டிக்கொள்ளவே கட்சியினர் விரும்புகிறார்கள். கிட்டத்தட்ட தலைவர் போல செயல்பட துவங்கி விட்ட பிரேமலதாவின் கருத்து தான், தேமுதிகவின் கருத்தாக பார்க்கப்படுகிறது. அரசியல் தலைவர்களால், பொதுமக்களால் பிரேமலதாவின் பேச்சு உற்று கவனிக்கப்பட்டு வருகிறது.
திமுக, அதிமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் பிரேமலதா, திமுகவில் தனிநபர் தாக்குதலை முன்வைக்கவில்லை. திமுக என்றால் தில்லு முல்லு கட்சி, ஊழல் கட்சி என பொதுவான விமர்சனங்களையே முன்வைத்து வந்தார். இந்நிலையில், அண்மையில் வட சென்னை மாவட்ட தே.மு.தி.க. செயலர் யுவராஜ் மற்றும் சேலம் மாவட்ட நிர்வாகிகள் பலர், தே.மு.தி.க.வில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தனர். இது பிரேமலதாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்த, ஸ்டாலின் மீது கோபத்தை கொட்டி தீர்க்க துவங்கியுள்ளார் பிரேமலதா.
கோவையில் தேர்தல் விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரேமலதா ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார். "ஸ்டாலின் மாய வலையை விரித்து காத்திருக்கிறார். ஒரு வீரனின் பெயரை வைத்துள்ள ஸ்டாலின், வீரனாக தேர்தல் களத்திற்கு கட்சியை கொண்டு வராமல், முதுகுக்கு பின்னால் இருந்து கோழை போல் குத்துகிறார். கோழைத்தனமாக, கேவலமாக நடந்து கொள்கிறார் ஸ்டாலின். இனியும் கோழைத்தனமாக மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்களை இழுக்க வேண்டாம்," என ஸ்டாலினை விமர்சித்து எச்சரிக்கவும் செய்தார். ஸ்டாலினின் இந்த மாயவலையில் தேமுதிகவினர் யாரும் சிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் அவர் பேசுகையில், "திமுக, அதிமுகவுக்கு மாற்றாக உருவாக்கப்பட்டது தான் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி. இந்த கூட்டணி 2016ல் ஆட்சியை பிடித்து சரித்திரம் படைக்கும். திமுக, அதிமுக வேண்டாம் என அனைத்து தரப்பு மக்களும் ஒரே மனநிலையில் உள்ளனர். திமுக, அதிமுகவின் குறைகளை கூறி, ஓட்டு வாங்க வேண்டும் என்ற நிலை தேமுதிகவுக்கு இல்லை. கடந்த கால ஆட்சியில் காமராஜர் ஆட்சி மட்டும் தான் பொற்கால ஆட்சி. அதன்பின், எம்.ஜி.ஆர்., ஆட்சியில், எம்.ஜி.ஆர்., கொஞ்சம் மனிதாபிமானத்தோடு நடந்து கொண்டார். சிறுதாவூர் பங்களாவில் பல லட்சம் கோடி கன்டெய்னரில் பதுக்கப்பட்டு, கடத்தப்படுவதை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது. கருத்து கணிப்புக்கு தடை விதிக்கும் தேர்தல் ஆணையம் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும். ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் ஆணையத்தை தேமுதிக கடுமையாக கண்டிக்கிறது" என்றார் பிரேமலதா.

No comments:
Post a Comment