திமுக தலைவர் கருணாநிதியை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தரக்குறைவாக விமர்சித்து விட்டார் என்று கொந்தளிப்பில் இருக்கிறது தமிழக அரசியல் வட்டாரம். அவ்வாறு பேசியதை வாழ்நாள் குற்றமாகக் கருதுகிறேன் என்று குறிப்பிட்டு, வைகோவும் மன்னிப்பும் கேட்டுள்ளார்.
இந்த விவகாரம் 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலின் முக்கிய விசயமாக மாறியுள்ளது. தனி நபர்கள் மீது ஒழுக்கம் சார்ந்தும், சாதி சார்ந்தும், இனம் சார்ந்தும், மொழி சார்ந்தும் திராவிட இயக்க தலைவர்கள் பேசுவது என்பது இன்று மட்டும் நடக்கும் விவகாரமா என்ன? இல்லை காங்கிரஸ், பாமக, விசிக உள்ளிட்ட மற்றக்
கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் பேசாமலா இருந்தார்கள்? தமிழக அரசியலில் இதுபோன்று வார்த்தையாடல்கள் மேடைகளின் அலங்காரங்கள் என்றுதான் அவரவர் கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள். அரசியல் போக்கை அறிந்தவர்கள், தலைவர்களின் தரம் குறைந்த பேச்சுக்களை மறந்துவிட மாட்டார்கள்.
இந்த பேச்சுக் கலாச்சாரத்தை வளர்ப்பதும் திராவிட கட்சியினரே. அதைக் கண்டிப்பதும் அவர்களே. இதுதான் அரசியல் விந்தை. என்ன ஒன்று, ஒரு கட்சியில் இருந்துகொண்டு இன்னொரு கட்சித் தலைவரை தரம் குறைந்து விமர்சிக்கும் தலைவர், பின்னர் தன்னால் கடுமையாக சமயத்தில் ஆபாசமாகக் கூட விமர்சிக்கப்பட்டவரின் தலைமையை ஏற்றுக்கொண்டு அவரின் கட்சியில் இணைந்துகொள்வார்.
இந்த விவகாரம் 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலின் முக்கிய விசயமாக மாறியுள்ளது. தனி நபர்கள் மீது ஒழுக்கம் சார்ந்தும், சாதி சார்ந்தும், இனம் சார்ந்தும், மொழி சார்ந்தும் திராவிட இயக்க தலைவர்கள் பேசுவது என்பது இன்று மட்டும் நடக்கும் விவகாரமா என்ன? இல்லை காங்கிரஸ், பாமக, விசிக உள்ளிட்ட மற்றக்
கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் பேசாமலா இருந்தார்கள்? தமிழக அரசியலில் இதுபோன்று வார்த்தையாடல்கள் மேடைகளின் அலங்காரங்கள் என்றுதான் அவரவர் கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள். அரசியல் போக்கை அறிந்தவர்கள், தலைவர்களின் தரம் குறைந்த பேச்சுக்களை மறந்துவிட மாட்டார்கள்.இந்த பேச்சுக் கலாச்சாரத்தை வளர்ப்பதும் திராவிட கட்சியினரே. அதைக் கண்டிப்பதும் அவர்களே. இதுதான் அரசியல் விந்தை. என்ன ஒன்று, ஒரு கட்சியில் இருந்துகொண்டு இன்னொரு கட்சித் தலைவரை தரம் குறைந்து விமர்சிக்கும் தலைவர், பின்னர் தன்னால் கடுமையாக சமயத்தில் ஆபாசமாகக் கூட விமர்சிக்கப்பட்டவரின் தலைமையை ஏற்றுக்கொண்டு அவரின் கட்சியில் இணைந்துகொள்வார்.
அதற்கு மிக நேரடி உதாரணம் நாஞ்சில் சம்பத். இவர் மதிமுகவில் இருந்த போது திமுக தலைவர், அதிமுக பொதுச் செயலாளர் என்று பேதம் பார்க்காமல் பேசியவை கொஞ்சமா நஞ்சமா? ஆனால் இவரே அதிமுகவில இணைந்துகொண்டு இப்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை என்ன என்ன கூறி விமர்சிக்கிறார் என்பதை நாடறியும்.
அதே போல திமுகவின் வெற்றிகொண்டான். இந்தப் பேச்சாளரின் பேச்சுக்கள் இன்றும் ஒலி வடிவில் உலாவந்து கொண்டுதான் இருக்கின்றன. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, வைகோ, முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் என்று வெற்றிகொண்டான் நாவில் 'அர்ச்சனை ' பெறாதவர்கள் இல்லை. அதிலும் பெண் தலைவர்களை அவர் பேசியிருப்பது ஆபாசத்தின் உச்சம்.
தீப்பொறி ஆறுமுகம், அமைச்சர் வளர்மதி என்று இப்படி பொதுமேடைகளில் தரம் குறைந்து பேசுவது என்ற நிலையில் இருக்கும் திராவிட இயக்கத் தலைவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகும். மேடைகளில் மட்டும் இல்லை. பொது இடங்களில், ஏன் சட்டமன்றத்தில் கூட திராவிட இயக்கத் தலைவர்கள் இப்படித்தான் நடந்துகொள்வார்கள். திமுக ஆட்சியின் போது,அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் சேலையைப் பிடித்து இழுத்து தரம் குறைந்து நடந்துகொண்ட நிகழ்வை யாரால்தான் மறக்க முடியும்?
எம்.ஜி.ஆர்.மீது கருணாநிதி வீசாத விமர்சனங்களா? அதற்கு எம்.ஜி.ஆர். அளிக்காத பதில்களா?
வழக்கு ஒன்று தொடர்பாக, நீதிமன்றம் வந்த சுப்பிரமணியன் சுவாமி முன்பு, அதிமுகவின் மகளிர் அணியினர் நடந்துகொண்ட அருவருக்கத் தக்க நிகழ்வை யார்தான் மறந்திருப்பார். அதே போல தேர்தல் நேரத்தில் திமுக, அதிமுக, மதிமுக என்று வித்தியாசமில்லாமல், பிரசாரக் கூட்டங்களில் ஒருத்தர் மாறி ஒருத்தரை வசைபாடிக் கொண்டதும், விமர்சிப்பதும் பொதுமக்கள் மறக்க கூடிய விசயங்களா?
இதற்கெல்லாம் காரணம், 'அரசியல் சக்தியைப் பயன்படுத்தி அதிகாரத்தைச் சுவைக்கவேண்டும்.நாட்டின் பணக்ககாரர்கள் பட்டியலில் தானும் இணைய வேண்டும்' என்ற வெறியே. இதற்கு எந்தத் திராவிட இயக்கத் தலைவர்களும், பிரமுகர்களும் விதிவிலக்கல்ல. அதனால் அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள்.அது அவர்களின் பொதுப் புத்தி.
ஆனபோதிலும்,பொது இடங்களில், மேடைகளில் தரம் தாழாமல் பேசுவது நாகரிகம் என்பதால் அதனை அனைத்துத் திராவிட இயக்கத் தலைவர்களும் பின்பற்ற வேண்டும். இல்லையெனில் மீண்டும் மீண்டும் மக்கள் புறக்கணிப்புக்குத்தான் ஆளாக நேரிடும்.
திராவிட இயக்கத் தலைவர்கள் தங்களின் பொதுப் புத்தியை மாற்றிக்கொள்ள வேண்டும்.

No comments:
Post a Comment