Monetize Your Website or Blog

Friday, 8 April 2016

நெய்வேலி காட்டாமணக்கு இருக்க, டி.ஏ.பி. எதற்கு?

அந்த அரங்குக்குள் ஒவ்வொருவராக நுழைந்தபோதுபெரும்பாலானவர்களின் முகங்களில் கவலைரேகை... 'ஏதோ சொன்னாங்க வந்திருக்கோம்... என்னத்த சொல்லப்போறாங்களோ... இவங்க சொல்றதுநம்மளோட கவலையைப் போக் கிடுமா...' என்று ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு விதமானஎண்ண ஓட்டங்கள்.

ஆனால்நான்கு மணி நேரத்துக்குப் பிறகு அரங்கை விட்டு அவர்கள் வெளியேறியபோது...ஒவ்வொருவரின் முகத்திலும் உற்சாக வெள்ளம்நிச்சயமாக சாதிப்போம் என்றபடியே பலரும் வீரநடைபோட்டது ஆச்சர்யப்பட வைப்பதாக இருந்தது.



'உலுக்கி எடுக்கும் உரத் தட்டுப்பாடு... சமாளிப்பது எப்படி... வழிகாட்டுகிறார் நம்மாழ்வார்என்றதலைப்பில் ஜூன் 17-ம் தேதியன்று திருவாரூரில் பயனுள்ள பயிற்சிக் கூட்டம் நடைபெற்றதுபசுமைவிகடன் மற்றும் திருவாரூர்-விஜயபுரம் வர்த்தகர் சங்கம் இணைந்து நடத்திய இக்கூட்டம்பைபாஸ்சாலையில் உள்ள வர்த்தகர் சங்க கட்டடத்தில் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரைநடைபெற்றதுதிரளாக வந்திருந்த விவசாயிகள் அரங்கை நிறையச் செய்யஅமைதியாகஆரம்பமானது பயிற்சிக் கூட்டம்வர்த்தகர் சங்கத் தலைவர் வி.கே.எஸ்அருள் தலைமை ஏற்கஅதைத்தொடர்ந்து பேசத் தொடங்கினார் நம்மாழ்வார்.


"மேட்டூர் அணை எப்ப திறப்பாங்கனு தினமும் செய்தித்தாள்களை பார்த்துக் கொண்டிருந்தனர்விவசாயி கள்.. ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப் பட்டுவிட்டதுஎன்றாலும் விவசாயிகள்சந்தோஷமாக இல்லைகாரணம்உரத் தட்டுப்பாடுஇதையே ஒரு நல்ல சந்தர்ப்பமாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ரசாயன உரங்களைப் போடப்போட மண்ணின் வளம் குறைந்துகொண்டே போகிறது. 15 ஆண்டுகளுக்குமுன் ஜக்கிய நாடுகள் சபையைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்துசோதனை செய்துவிட்டு, 'தஞ்சை மாவட்டநிலங்களில் நுண்ணுயிரிகளே இல்லைஎன்றனர்அந்தளவுக்கு ரசாயன உரங்கள் மண்ணின்வளத்தையே அழித்துவிட்டனமகசூலும் படிப்படியாக குறைந்துவிட்டது.

விவசாயிகள் கணக்கு பார்த்தால் செலவே அதிகம்அதனால்தான் விவசாயி ஏழையாகவேஇருக்கிறான்டி..பி விற்பவன் கோடீஸ்வரன்யூரியா விற்பவன் கோடீஸ் வரன்சூப்பர் பாஸ்பேட்விற்பவன் கோடீஸ் வரன்ஆனால்விவசாயி கடனாளி.

விவசாயிகளிடமிருந்து நெல்லை வாங்கு பவன் கோடீஸ்வரன்தவிட்டில் இருந்து எண்ணெய்எடுப்பவன் கோடீஸ்வரன்மாட்டுத் தோலில் இருந்து செருப்பு தயாரிப் பவன் கோடீஸ்வரன்... ஆனால்,விவசாயி கடனாளிஇந்த இழிநிலை மாற வேண்டும்'' என்றெல்லாம் சொன்ன நம்மாழ்வார்ஏகப்பட்டதொழில்நுட்பங்களையும் எடுத்து வைத்துப் பேசஎல்லாவற்றையும் குறிப் பெடுத்துக் கொண்டனர்விவசாயிகள்.

அடுத்துஅனுபவ விவசாயிகளின் அணிவகுப்பு....

பள்ளத்தூர் முருகையன் "நாலு ஏக்கர்ல 300 தென்னை மரம் வெச்சிருக்கேன்நாலு வருஷத்துக்குமுன்னாடி வரைக்கும் யூரியாசூப்பர் பாஸ்பேட்பூச்சிக்கொல்லினு பணத் துக்கு கேடா செலவழிச்சேன்.உரம் வைக்கபூச்சி மருந்து அடிக்ககூலி ஆளுக்குஉரம்பூச்சிக்கொல்லி வாங்கனு எதுக்கெடுத்தாலும்செலவுதான்ஆனாகாய் ரொம்ப சின்ன தாவே இருக்கும்ஆறாயிரத்துல இருந்து ஏழாயிரம் காய்தான்காய்க்கும்ஒரு கட்டத்துல... பஞ்சகவ்யாஅமுதக் கரைசல்மூலிகை பூச்சிவிரட்டி இதையெல் லாம்பயன்படுத்தத் தொடங்கினதுமே ஏகப்பட்ட பணம் மிச்சமாக ஆரம்பிச்சிருச்சிஆள் செலவுகுறைஞ்சதோட... நோய் தாக்குதலும் காணாம போச்சிஅதேசமயம்விளைச்சலும் கூடிப் போச்சி.
இதைத் தொடர்ந்து மாஎலுமிச்சைகடலைகம்புனு எல்லாத்தையுமே இயற்கை யில செய்யதொடங்கிட்டேன்என்று அவர் அடுக்கிக் கொண்டே போக... அத்தனை விவசாயிகளும் ஆச்சர்யம்விலகாமல் அவரை பார்த்தனர்.

கட்டிமேடு ஜெயராமன் "ரசாயன விவசாயம் செஞ்சப்ப ஒரு ஏக்கருக்கு 24 மூட்டைதான் நெல்கிடைச்சுதுஇப்போ இயற்கையிலஅதுவும் ஒற்றை நாற்று நெல் சாகுபடி செய்றேன்ஏக்கருக்குகிட்டதட்ட 45 மூட்டை நெல் கிடைக்குதுரசாயன முறையில ஏக்கருக்கு ஒன்பதாயிரம் செலவாகும்.இப்போ வெறும் 4,800 ரூபாய்தான் செலவுஎன்று சொல்லி தன் பங்குக்கு ஆச்சர்யம் கூட்டினார்.

முருகமங்கலம் 'லயன்ஸ்சம்பந்தம் பிள்ளை "அடியுரம் போட டி..பிகிடைக்கலையேனு நீங்கள்லாம்தவிக்கி றீங்கஆனாஅதுக்கு டி..பிதேவையே இல்லங்கறதுதான் உண்மைஉங்க ஆறுகுளம்,வாய்க்காவரப்புனு தன் பாட்டுக்கு விளைஞ்சி கிடக்கற நெய்வேலி காட்டாமணக்கு மட்டுமே போதும்.நான் இதை மட்டுந்தான் அடியுரமா பயன்படுத் துறேன்விளைச்சலும் அமோகமா இருக்கு.

நாத்தாங்காலுக்கு ரெண்டு சால் உழவு ஒட்டிநெய்வேலி காட்டாமணக்கை பரப்பி விட்டுட்டுட்டுபிறகு,ரெண்டு சால் உழவு ஓட்டிஒரு வாரம் கழிச்சி விதைத் தெளிக் கணும். 15 நாள்லயே ஒரு சாண்உயரத்துக்கு நாத்து வளர்ந்துடும்

சாகுபடி நிலத்துலயும் இதே மாதிரி உழவு ஓட்டிநெய்வேலி காட்டாமணக்க பரப்பிமறுபடியும் ரெண்டுசால் உழவு ஓட்டிபிறகு 10 நாள் கழிச்சி நாத்து நட்டா... இலை பசுமையா இருக்கும்பூச்சிநோய்,களையே இருக்காதுதழைச்சத்தும் நிறைய கிடைக்கும்ஏக்கருக்கு சுமாரா 2,000 கிலோ நெல் மகசூலாகிடைக்குதுஏழு வருஷமா இதைத்தான் செய்துகிட்டிருக்கேன்.

இப்படிப்பட்ட நெய்வேலி காட்டாமணக்கை 'விஷச்செடி'னு சொல்றது அறியாமைஇது ஒருஅருமையான உரச்செடி.. இதை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்தணும்என சொன்னதும்விவசாயிகளின் முகங்களில் ஏக மலர்ச்சி.

கீவளூர் தனபாலன் ''போன வருஷம் 40% ரசாயன உரங்களைக் குறைத்தேன்இந்தாண்டு 50%குறைத்திருக் கிறேன்படிப்படியாக இயற்கை விவசாயத்துக்கு மாறப் போகிறேன்என்று ஆரம்பித்து,தன்னுடைய அனு பவத்தை எடுத்து வைக்க... அதைத் தொடர்ந்து மேடை யிலேயே... பஞ்சகவ்யா,அமுதக் கரைசல்மூலிகை பூச்சிவிரட்டி ஆகியவை நேரடியாக தயாரித்துக் காண் பிக்கப்பட்டனபிறகு,அனுபவ விவசாயிகள் தயாரித் துக் கொண்டு வந்திருந்த பஞ்சகவ்யாமூலிகை பூச்சிவிரட்டி ஆகியவைகுறைந்த விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.



கவலையோடு வந்திருந்த விவசாயிகள்புறப்படும்போது மிகவும் கலகலப்பாகி, 'அருமையானபயிற்சிக் கூட்டம்... பசுமை விகடனுக்கு நிச்சயமா நன்றி சொல்லணும்என்று பசுமைக் குழுவினரின்கைகளைப் பற்றிக் கொண்டது நெகிழ வைப்பதாக இருந்தது.



No comments:

Post a Comment