Monetize Your Website or Blog

Monday, 29 February 2016

“வெட்கப்பட கஷ்டப்பட்டேன்!”

``படம் பார்த்தீங்களா... பிடிச்சிருக்கா?” - குண்டுக் கண்கள் மின்ன சிரிக்கிறார் ரித்திகா சிங். `இறுதிச்சுற்று’ படத்தில் மீன்காரி மதியாக ஈர்த்த ரித்திகா, பக்கா பாம்பே பொண்ணு; நாக்அவுட் பன்ச் கொடுக்கும் நிஜமான பாக்ஸிங் பொண்ணு! 

“பாக்ஸர்... எப்படி நடிக்க வந்தீங்க?”

“அதுதாங்க சர்ப்ரைஸ். ஐ.பி.எல் மாதிரி, பாக்ஸர்களுக்காக ‘எஸ்.எஃப்.எல் சேலஞ்சர்ஸ்’ (Super Fight League) போட்டி  மும்பை, டெல்லில நடக்குது. அதில் நான் கலந்துக்கிட்டேன். ஒரு டி.வி ஷோவில் அதைப் பார்த்த டைரக்டர்  சுதா மேடம் என்னை நம்பிக்கையோடு நடிக்கக் கூப்பிட்டாங்க. ஷூட்டிங்ல அவங்க சொன்னதுபோல செஞ்சேன். நான் பாக்ஸர்ங்கிறதால ஈஸியாத்தான் இருந்தது. வெட்கப்படத்தான் ரொம்பக் கஷ்டப்பட்டேன். மேடம் என்மேல வெச்ச நம்பிக்கையைக் காப்பாத்திட்டேன்னுதான் நினைக்கிறேன்.” 

“நடிப்பதற்கு ஏதாவது ஸ்பெஷல் ட்ரெய்னிங் எடுத்தீங்களா?”

“ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி ரெண்டு நாட்கள் ட்ரெய்னிங் கொடுத்தாங்க. நான் மார்ஷியல் ஆர்ட், கராத்தே எல்லாம் பழகியிருந்ததால், உடம்பு விறைப்பா இருக்கும். `அந்த பாடிலாங்வேஜ் வேண்டாம். கொஞ்சம் ஜாலியா இருக்கணும்’னு உடம்பை லூஸாக்கச் சொன்னாங்க. கொஞ்சம் சிரமப்பட்டாலும் உடனே அவங்க சொன்னதைப் பிடிச்சுட்டேன். ஷூட்டிங் ஸ்பாட்ல மாதவன்கிட்ட இருந்து நிறையக் கத்துக்கிட்டேன். என்கிட்ட இருந்து அவர் பாக்ஸிங் கத்துக்கிட்டார்னு நினைக்கிறேன்” - சிரிக்கிறார்.
“மீன் விற்கிற சீன்ல பிரமாதமா நடிச்சிருந்தீங்க... எப்படி?”

“படத்துல ஷூட் பண்ண முதல் சீன் அதுதான். நான் மீன் கடையில வியாபாரம் பண்ணணும். அதுவும் ஜாலியா போற வர்றவங்களை வம்பு இழுத்துக்கிட்டே தமிழ்ல பேசணும். எனக்கு தமிழ் தெரியாது. ஆனாலும் சமாளிச்சேன். ‘வாங்கண்ணா... வாங்கக்கா... மீன் வாங்கலயோ மீன்’னு சவுண்டுவிட்டு மாதவன் சாரையே கலாய்க்கிற மாதிரி சீன். பயத்தை வெளியில காமிக்காம நடிச்சேன். அந்த முதல் சீன்லயே எல்லாருக்கும் என்னைப் பிடிச்சுருச்சு. ஐ’ம் லக்கி.”

“அடுத்து என்ன?”

“இன்னும் நிறையப் படங்கள் பண்ணணும். மொழி வேறுபாடு இல்லாம படங்கள் நடிக்கணும். விதவிதமான கேரக்டர்கள் செய்யணும்னு ஆசை. எல்லாம் நடக்கும்னு நம்புறேன் பிரதர்.”


2016-17ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்!

2016-17ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜெட்லி மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். அதன் சிறப்பு அம்சங்கள் வருமாறு:
 
* 5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக்கும் வகையில் கொள்கை உருவாக்கப்படும்.

* 2018 மே மாதத்திற்குள் இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

* 3 ஆண்டுகளில் 5 லட்சம் ஏக்கர் நிலம் இயற்கை விவசாயத்தின் கீழ் கொண்டு வரப்படும்.

* சரியானவர்களுக்கு மானியம் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்வதற்காக ஆதார் அடையாள அட்டை வழங்கும் திட்டம் தொடரும்.

* சிறுநீரகம் செயலிழப்பு ஏற்பட்டவர்களுக்கு டயாலிசிஸ் வசதியை ஊரகப் பகுதிகளுக்கும் வழங்க புதிய திட்டம்.

* உள்ளாட்சித்துறைக்கு ரூ.87,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* 14வது நிதிக்குழுவின் பரிந்துரையின் படி கிராம பஞ்சாயத்துகளுக்கு 2.87 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

* ரூ.38,500 கோடி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ஒதுக்கீடு.

* கிராமங்களை இணைக்கும் வகையில் 2.25 லட்சம் கிலோ மீட்டருக்கு சாலைகள் அமைக்கப்படும்.

* விவசாய திட்டங்களுக்கு கடந்த நிதியாண்டில் 8.5 லட்சம் கோடி, நடப்பு நிதியாண்டில் ரூ.9 லட்சம் கோடி ஒதுக்கீடு.

* ஏழை குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவதற்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* மத்திய நிதிநிலை அறிக்கையில் விவசாயத்துறைக்கு ரூ.35,984 கோடி நிதி ஒதுக்கீடு. 

* நீர் பாசனத்தை மேம்படுத்த நபார்டு வங்கி மூலம் ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

* பாசன வசதிகளை மேம்படுத்தும் வகையில் அடிப்படை கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.

* பரம்பரகட் கிரிசி விகாஷ் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் 5 லட்சம் ஏக்கர் நிலங்களில் இயற்கை வேளாண்மை உருவாக்கப்படும்.

* இந்தியாவில் உள்ள அனைவரும் பலன் அடையும் வகையில் மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும்.

* பிரதம மந்திரி பயீர்க்காப்பீட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த ரூ.5,500 கோடி ஒதுக்கீடு.

* 5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக்கும் வகையில் கொள்கை உருவாக்கப்படும்.

* 3 ஆண்டுகளில் 5 லட்சம் ஏக்கர் நிலம் இயற்கை விவசாயத்தின் கீழ் கொண்டு வரப்படும்.

* பிரதம மந்திரி ஊரக சாலைகள் திட்டத்திற்கு 19 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக உள்ளதாக உலக பொருளாதார அமைப்புகள் பாராட்டி உள்ளன.

* நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவிகிதமாக உள்ளது.

* அந்நிய செலவாணி கையிருப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு 350 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

* கிராமப்புற மற்றும் சமூக நலத்திட்டங்களுக்கு அதிக செலவிட அரசு முன்னுரிமை.

* வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கத் திட்டம்

* விவசாயிகளின் வருமானம் 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கப்படும்

* மத்திய பட்ஜெட்டில் விவசாயத்துக்கு ரூ.35,984 கோடி ஒதுக்கீடு

* 28.5 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு பாசனத்தின் கீழ் கொண்டு வரப்படும்

* வேளாண் மற்றும் விவசாயிகள் நலன், ஊரக வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்துகிறது.

* விவசாயிகளுக்கு வருமான வரி உத்தரவாதத்தையும் வழங்க வேண்டும்.

* இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.

* ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை கொண்டு வர மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.


அதுக்கு ஆர்வம் காட்டாத இளசுகள்: ஜப்பானில் குறையுது மக்கள் தொகை!

ஜப்பானின் மக்கள் தொகை, முதல்முறையாக குறைந்துள்ளதாக அந்நாட்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஜப்பானில் மக்கள் தொகை கணக்கெடுப்பு சமீபத்தில் நடத்தப்பட்டது. அதில், கடந்த 5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 10 லட்சம் மக்கள் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. மக்கள் தொகை குறைவிற்கு காரணம் ஜப்பானில் வீழ்ந்து வரும் பிறப்பு வீதமும் அந்நாட்டுக்குள் குடியேறுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளமையும் இதற்கு காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

2050-ம் ஆண்டில், ஜப்பானிய பிரஜைகளில் கிட்டத்தட்ட 40 வீதமானவர்கள் 65 வயதை தாண்டியிருப்பார்கள் அல்லது அதனைவிட வயது முதிர்ந்தவர்களாக இருப்பார்கள் என்றும், இதன் காரணமாக முதியோர்களை பராமரிக்கும் தொகை பெருமளவில் அதிகரிக்கும் என்றும் அந்நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
ஜப்பானில் முதன் முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பு 1920-ம் ஆண்டு எடுக்கப்பட்டது. அதன்பின் முதல்முறையாக தற்போது ஜப்பானில் மக்கள் தொகை வெகுவாக குறைந்துள்ளதாக அந்த ஆய்வு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது. தற்போதைய ஜப்பானின் மக்கள் தொகை 127,110,047 என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதற்கு காரணம், 16 முதல் 19 வயதுள்ள ஆண்களும், பெண்களும் குழந்தை பெற்றுக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டவில்லை என்ற அதிர்ச்சி தகவல், இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


வீட்டிலேயே தயாரிக்கலாம் நச்சில்லாத பேபி பவுடர்!

மார்கெட்டில் விற்கப்படும் கெமிக்கல் நிறைந்த டால்கம் பவுடர்களால் பெரியவர்களே பாதிக்கப்படும்பொழுது, குழந்தைகளின் மிருதுவான சருமத்தை பாதிப்பிலிருந்து காப்பது மிக அவசியம்.
இதற்கு மாற்றாக வீட்டிலேயே 'இயற்கை முறை டால்கம் பவுடர்' தயாரிக்கும் முறை பற்றி சொல்கிறார் அழகுக்கலை நிபுணர் ராஜம்முரளி...

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக் கூடிய உலர்ந்த செண்பகப் பூ, மகிழம் பூ, பன்னீர் ரோஜா இதழ்கள், மரிக்கொழுந்து, சிகப்பு சந்தனம் (Red Sandal) அனைத்தையும், சம அளவில் எடுத்து ஒன்றாக அரைத்து பவுடராக்கிக் கொள்ளவும்.
அதிக அளவு தேவையெனில் மாவு மெஷினிலும், குறைந்த அளவை வீட்டில் மிக்ஸியிலேயே பொடி செய்துகொள்ளலாம்.

தரையில் ஒரு நியூஸ் பேப்பரை விரித்து, அதன் மேல் மாவு சலிக்கும் சல்லடையில் ஒரு மஸ்லின் துணியை விரித்துக்கொண்டு, அதில் அரைத்து வைத்த பொடியை போட்டு ஒரு கரண்டியால் தட்டி தட்டி சலிக்கவும். கீழே உள்ள நியூஸ் பேப்பரில் விழக்கூடிய மிருதுவான பொடியை காற்றுபுகாத டப்பாவில் போட்டு பத்திரப்படுத்தவும்.
இதுதான் இயற்கை முறை டால்கம் பவுடர். இதை குழந்தையிலிருந்தே உபயோகிக்கும்போது, வளர்ந்த பிறகும் சருமம் மிருதுவாகவும், சரும நோய்கள் வராமலும் இருக்கும்.

வாசனை பவுடர்...


ரோஜா இதழ்கள் போட்டு கொதிக்கவைத்து வடிகட்டப்பட்ட தண்ணீரை, சிறிதளவு எடுத்து, அரைத்து வைத்துள்ள பவுடரில் தெளித்து நிழலில் உலர்த்தி எடுத்தால் வாசனைமிகுந்த டால்கம் பவுடர் தயார். ரோஜாவிற்கு பதில் மல்லிகை பூக்களையும் உபயோகிக்கலாம்.

இதை பெரியவர்கள் குறிப்பாக டீன் ஏஜ் பெண்கள் முகத்திற்கு உபயோகிக்கலாம். இது முகத்தின் மீது மேக்கப்போட்டது போன்ற தோற்றம் இல்லாமல், சரும நிறத்திலேயே இருக்கும். அதே சமயம் முகத்திற்கு 'பளிச்' பொலிவைத் தரும்.


சிறந்த நடிகருக்கான விருதை டிகாப்ரியோ வென்றார்: ஆஸ்கர் அப்டேட்ஸ்

சிறந்த நடிகருக்கான விருதை, "தி ரெவனண்ட்" திரைப்படத்தில் நடித்த, லியோனார்டோ டி காப்ரியோ பெற்றார். இதுவரை, சிறந்த நடிகர் விருதுக்கு நான்கு முறை நாமினேட் ஆன டி காப்ரியோ, ஐந்தாவது முறை இவ்விருதை பெற்றுள்ளார். மேட் டேமன், ப்ரையன் க்ரான்ஸ்டன், மைக்கெல் ஃபாஸ்ட்பெண்டர் போன்றோரும் நாமினேஷன் லிஸ்டில் இருந்தனர்.

88வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில், சிறந்த நடிகைக்கான விருதை, "ரூம்" திரைப்படத்தில் நடித்த, ப்ரீ லார்சன் பெற்றார். கேட் ப்ளான்செட், 69 வயதான ஷார்லெட் ரேம்ப்லிங் போன்ற நடிகைகளும் இந்த விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

சிறந்த திரைப்படத்திற்கான விருதை, டாம் மெக்கார்த்தி இயக்கிய "ஸ்பாட்லைட்" திரைப்படம் வென்றது. 
மிக நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சிறந்த நடிகருக்கான விருதை Revenant படத்துக்காக ஆஸ்கர் விருதை வென்றார் டிகாப்ரியோ

2016 ஆம் ஆண்டின் ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில், சிறந்த குறும்படத்திற்கான விருதை, "ஷட்டரர்" எனும் குறும்படம் வென்றது. சிறந்த பிறமொழித் திரைப்படத்திற்கான விருதை ஹங்கேரி நாட்டுத் திரைப்படமான, "சன் ஆஃப் சௌல்" தட்டிச் சென்றது.

 
சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை "ஹேட்ஃபுல் எயிட்" திரைப்படத்திற்காக, என்னியோ மோரிகோனி பெற்றார். இவருக்கு வயது 87. சிறந்த பாடலுக்கான விருதை, "ஸ்பெக்டர்" படத்தில் இடம்பெற்ற "ரைட்டிங்க்ஸ் ஆன் தி வால்" பாடல் வென்றது. இவ்விருதினை, ஜிம்மி நேம்ஸ் மற்றும் சாம் ஸ்மித் பெற்றனர். 

சிறந்த இயக்குனருக்கான விருதை, "தி ரெவனண்ட்" திரைப்படத்தை இயக்கிய அலெஹான்ரோ கொன்சாலஸ் இன்யாரிட்டோ பெற்றார். சென்ற ஆண்டும், இவரே, "பேர்ட்மேன்" திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனர் விருதைப் பெற்றிருந்தார்.   
சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான விருதை, "பியர் ஸ்டோரி" எனும் குறும்படம் வென்றது. இந்த விருதை "மினியன்ஸ்" எனப்படும் அனிமேஷன் கதாப்பாத்திரங்கள் அறிவித்தன.


சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை, "இன்சைட் அவுட்" திரைப்படம் வென்றது. இந்த விருதை "டாய் ஸ்டோரி" எனப்படும் அனிமேஷன் திரைப்படத்தின், ஷெரிஃப் ஹுட்டி மற்றும் பஸ் லைட் யியர் கதாப்பாத்திரங்கள் அறிவித்தன. 

சிறந்த துணை நடிகருக்கான விருதை, "ப்ரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ்" திரைப்படத்தில் நடித்த மார்க் ரைலான்ஸ் பெற்றார். க்ரிஸ்டியன் பேல், சில்வெஸ்டர் ஸ்டால்லோன் போன்ற நடிகர்களும் இந்த விருதுக்காக நாமினேட் செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான விருதை, "ஏ கேர்ள் இன் தி ரிவர்: தி ப்ரைஸ் ஆஃப் ஃப்ர்கிவ்னஸ்" அவணக் குறும்படம் வென்றது. சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை "ஏமி" எனும் ஆவணப்படம் பெற்றது. 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 88வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான 88-வது ஆஸ்கார் விருது போட்டியில்,சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை மற்றும் சிறந்த டைரக்டர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக ஏராளமான நடிகர், நடிகைகள் குவிந்துள்ளனர்.
இதில், சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கார் விருதை 'ஸ்பாட் லைட்' திரைப்படம் வென்றுள்ளது.
சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை 'தி பிக் ஷார்ட்' திரைப்படம் வென்றுள்ளது. எழத்தாளர்கள் சார்லஸ் மற்றும் ஆடம் ஆகியோர் இதற்கான விருதை பெற்றனர்.
இதேபோல், சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கார் விருதை அலிக்கா விக்கேண்டர்வென்றார்.  சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதை ஜெனி பேவன் வென்றுள்ளார்.
சிறந்த ஒப்பனைக்கான ஆஸ்கார் விருதை 'மேட் மேக்ஸ்' திரைப்படம் வென்றது. சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கார் விருதை 'தி ரெவனன்ட்' திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது. இதற்கான விருதை ஒளிப்பதிவாளர் இம்மானுவேல் ருபேஸ்க்கி பெற்றுக் கொண்டார்.
இதேபோல், சிறந்த படத்தொக்குப்புக்கான ஆஸ்கார் விருதை 'மேட் மேக்ஸ் ப்யூரி ரோட்' படம் தட்டிச் சென்றுள்ளது.



'அன்புமணி ஆகிய நான் ' ஒரு வேளை வியப்பை ஏற்படுத்துகிறாரோ?

சென்னை வண்டலூரில் நடைபெற்ற பாமக மாநாட்டில், அன்பு மணி 'ஹைடெக்' மணியாக காணப்பட்டார். வழக்கமாக போடியத்தில் உள்ள மைக் முன்னாள் நின்றுதான் அரசியல்வாதிகள் பேசுவார்கள். ஆனால் அன்பு மணியோ காதில் 'ஜாக் 'மைக் பொருத்திக் கொண்டு ஒரு கால்பந்து நடுவர் போல நடமாடிக் கொண்டே பேசினார்.
அவரது பேச்சின் சராம்சம் இங்கே: '' தமிழ்நாட்டில் எந்த கட்சி மாநாட்டுக்கும் இவ்வளவு கூட்டம் வந்தது இல்லை. இந்த கூட்டம் பாசத்தால் மட்டுமே வந்த கூட்டம். அத்தனையும் இளைஞர்கள் நிரம்பிய கூட்டம். மேடையில்தான் சிலர் வெள்ளை முடியுடன் இருக்கிறார்கள். ஆனால் கூட்டத்தில் அப்படிய வெள்ளை முடியுடன் யாரும் இல்லை. மாற்றத்தை தேடி வந்த கூட்டம் இது. தமிழத்தில் மாற்றம் வேண்டும். புதுமை வேண்டுமென்ற எண்ணத்தின் என்னை முதல்வராக தேர்வு செய்ய லட்சக்கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர். 

கடந்த 50 ஆண்டுகள் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் வாய்ப்பளித்துள்ளீர்கள். அந்த வாய்ப்பை இந்த முறை எனக்கு கொடுங்கள். 50 ஆண்டுகளில் திராவிட கட்சிகள் செய்யாததை அன்புமணி ஆகிய நான் 5 ஆண்டுகளில் செய்து முடிப்பேன்.அது மட்டுமல்ல நமது அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து இன்னொரு 50 ஆண்டுகளுக்கும் சேர்த்து என்னால் திட்டமிட முடியும். இது எங்களால் மட்டும்தான் செய்ய முடியும். இது ஆணவமான பேச்சு அல்ல. நம்பிக்கைமிகுந்த பேச்சு 

இந்த இடத்தில் நான் மகாத்மா காந்தியின் வாசகங்களை நினைவுப்படுத்த விரும்புகிறேன். முதலில் அவர்கள் உங்களை புறக்கணிப்பார்கள். அடுத்து ஏளனம் செய்வார்கள். அடுத்து உங்களை கடுமையாக எதிர்ப்பார்கள், கடைசியில் உங்ககளை ஏற்றுக் கொள்வார்கள்.  

கடந்த ஆண்டு சேலத்தில் நடந்த கூட்டத்தில் என்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்த போது ஏளனம் செய்தார்கள். இவர் முதல் அமைச்சரா? இவரால் முடியுமா? என்று கிண்டலடித்தார்கள். ஆனால் 32 மாவட்டங்களுக்கும் சென்று அனைத்து மக்களையும் மனம் தளராமல் சந்தித்தேன். எட்டு திசைகளிலும் 8 மண்டல மாநாடுகளை நடத்தி லட்சக்கணக்கான இளைஞர்களை பெண்களை கவர்ந்து இழுத்திருக்கிறோம்.

நாம் கடந்து வந்த பாதை சாதாரண பாதை கிடையாது. ராமதாஸ் அவர்களின் 34 ஆண்டு கால உழைப்பு. தொண்டர்களின் உழைப்பு இதற்கு பின்னால் இருக்கிறது.  இப்போது அவர்களுக்கு நம்மை கண்டு பயம் வந்து விட்டது. காந்தி சொன்ன வார்த்தை இப்போது நிறைவடையப் போகிறது. ஆம் அடுத்த இரண்டே மாதத்தில் நாம் வெற்றி பெறப் போகிறோம். 

தமிழகத்தில் 50 ஆண்டு காலத்திற்கு பிறகு ஒரு மாற்றம் நிகழப் போகிறது. ஒரு பக்கம் சாத்தான். இன்னொரு பக்கம் கடல். இருவருக்கும் மத்தியில் டாக்டர் என்ற வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது. 35 வயதிலேயே பதவியை நான் பார்த்து விட்டேன். எனக்கு பதவி ஆசையெல்லாம் கிடையாது. 

தற்போதைய நிலையில் தேர்தல் களத்தில் வீர நடை போடும் ஒரே கட்சி பா.ம.கதான். திமுக அதிமுகவைத் தவிர வேறு யார் வேண்டுமானாலும் எங்களுடன் கூட்டணிக்கு வரலாம் என ராமதாஸ் கூறியிருக்கிறார். வந்தால் மகிழ்ச்சி... வராவிட்டால் மிக்க மகிழ்ச்சி. நாங்கள் மக்களை நம்பி களம் இறங்குகிறோம். மது விலக்கு வேண்டுமென்று கதறும் பெண்களை நம்பி இந்த முடிவை எடுத்திருக்கிறோம். 

இந்த தேர்தலில் 66 வயது நிரம்பிய திமுக தனித்து நிற்கத் தயங்குகிறது. 44 வயது அதிமுக தனித்து போட்டியிட பயந்து நிற்கிறது. யாராவாது வருவார்களா? என்று கருணாநிதி பார்த்துக் கொண்டிருக்கிறார். எதிரிகளே இல்லையென்று சொன்ன ஜெயலலிதாவை சுற்றி எதிரிகளாகத்தான் இருக்கிறார்கள். 

மதுவை விலக்குதான் முதல் கையெழுத்து 


தமிழகத்தின் முக்கிய பிரச்சினை மது. தமிழகத்தில் உள்ள  1 கோடியே 97 லட்சம் குடும்பங்களில் இந்த மதுவால் பாதிக்கப்படாத குடும்பமே இல்லை. தாத்தாவில் இருந்து பேரன் வரை அல்லது குடும்ப உறுப்பினர்கள் என யாராவது ஒருவர் நிச்சயமாக பாதிக்கப்பட்டிருப்பார். அதிக மது விற்பனை, கணவனை இழந்த பெண்கள் அதிகமான இருப்பது, குடி பழக்கத்தால் சாலை விபத்துக்கள், தற்கொலைகள் அதிகமாக நடப்பது என தமிழகம் எதிர்மறையான விஷயங்களில்தான் முதலிடத்தில் உள்ளது.
பல ஆண்டு காலமாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ராமதாஸ் மதுவை ஒழிக்கப் போராடி வருகிறார். பெண்கள், மாணவர்கள் மது குடிக்கத் தொடங்கினால் அடுத்த தலைமுறையே அழிந்து விடும். மதுவை ஒழிக்க வேண்டும் என்று போராடி வரும் ஒரே கட்சி பா.ம.கதான்.திமுகவின் முன்னோடிகள் பெரியார், அண்ணா ஆகியோர் மதுவை எதிர்த்தார்கள். ஆனால் இன்று தமிழகத்திற்கு மதுவை கொடுத்த கட்சியாக திமுக இருக்கிறது. 

நான் முதல்வரானால் போடும் முதல் கையெழுத்தே மது விலக்கு கையொப்பமாகத்தான் இருக்கும். அதே வேளையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு கவுரவமான மற்றொரு வேலை வழங்கப்படும். மது அடிமைகளை மீட்க மறு வாழ்வு மையம் அமைக்கப்படும். சாதாரண மக்களின் பங்களிப்புடன் தமிழகத்தில் கள்ளச்சாரயம் ஒழிக்கப்படும். 

இன்னும் இரண்டு மாதங்கள் மட்டும் பொறுங்கள். மது விலக்கு கையெழுத்து போட்டு விட்டுதான் அடுத்த வேலையை பார்ப்போன். மது சமூகத்தின் ஒழுக்கக் கேடுகளுக்கு நமது முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கும் ஒரு பிரச்னை. அதனால்தான் அதற்கு முதலில் முடிவு கட்ட வேண்டியது உள்ளது. 

தமிழகத்தின் வருமானத்தை பெருக்க அன்பு மணியின் திட்டங்கள்


தமிழகத்தில்  ஆற்றில் ஒரு யூனிட் மணல் எடுக்க ரூ.674 வசூலிக்கப்படுகிறது. வெளியே ஒரு யூனிட் மணலை ரூ. 7 ஆயிரத்துக்கு விற்கிறார்கள். 5 ஆயிரம் யூனிட் மணல் அள்ளினால் ஆயிரம் யூனிட்டுக்குதான் கணக்கு தருவார்கள். இதன் முலம் அரசுக்கு 20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது. இதனை வருவாயாக மாற்றினால் தமிழகத்தின் பொருளாதார நிலை உயரும்.  

அடுத்து தாதுமணல் கொள்ளை. இதனை முறையாக செய்தால்  50,000 கோடி வருமானம் வரும். கிரானைட் கொள்ளையை தடுத்தால் 30,000 கோடி வருமானம் வரும். இவற்றையெல்லாம் முறைப்படுத்தினாலே ஒரு லட்சம் கோடி வருவாய் ஈட்ட முடியும். 

கள்ளச்சாராயத்தை ஒழிக்கத் தனியாக  டோல் ஃப்ரீ நம்பர் தருவோம்.  தமிழகத்தில் எந்த பகுதியில்  கள்ளச் சாரயம் விற்றாலும்  அந்த எண்ணில் புகார் அளிக்கலாம். புகார் உண்மையாக இருந்தால்ரூ.ரூ. 10 ஆயிரம் பரிசளிக்கப்படும். ரகசியம் பாதுகாக்கப்படும். அதே வேளையில் அந்த கிராம நிர்வாக அதிகாரி, போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கத்துக்குள்ளாவார்கள். 

டாஸ்மாக்கில்  82 பொறியியல் பட்டதாரிகள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு கவுரவமிக்க மாற்று வேலைக்கு ஏற்பாடு செய்யப்படும்.  

தமிழகத்தில் 12 மது ஆலைகளில் திமுகவுக்கு 6 அதிமுகவுக்கு 3 சொந்தம். காங்கிரஸ் கட்சிக்கு 2 மது ஆலைகள் இருக்கிறது. மது விற்பனை மூலம் திமுகவுக்கு ஆண்டுதோறும் ரூ.16ஆயிரத் கோடி கிடைக்கிறது. மதுவை ஒழிப்பதாக சொல்லும் ஸ்டாலின்  மக்கள் மேல் உண்மையான அக்கறை இருந்தால் 6 மது ஆலைகளை மூட வைக்க முடியுமா? 

அன்புமணி பிடிவாதக்காரன். சொன்னால் செய்வான். நான் மதுவை ஒழிப்பேன். என்னால் மட்டும்தான் மதுவை ஒழிக்க முடியும் என்று ஆணவத்தில் சொல்லவில்லை. தைரியத்தோடு நம்பிக்கையோடு சொல்கிறேன்.


ஊழலை ஒழிக்க தீர்வு 


கடந்த 10 ஆண்டுகளில் நடந்த ஊழலின் மதிப்பு ரூ.70 லட்சம் கோடி. இதற்கு ஒரே தீர்வு. ஊழல் பெருச்சாளிகளான அதிமுக, திமுக வேண்டாம். ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா கொண்டு வரப்படும். சுயாட்சி அந்தஸ்த்துடன் அது செயல்படும். ஆண்டு தோறும் முதல்வர், அமைச்சர்கள் சொத்து மதிப்பு வெளியிடப்படும். ஊழல் செய்தவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். முதல் கூட்டத் தொடரிலேயே லோக் ஆயுக்தா கொண்டு வரப்படும். இதனால் முதல்வர் தவறு செய்தால் கூட தப்பிக்க முடியாது. லஞ்சம் கேட்டால் டோல்ப்ரீ எண்ணில் புகார் தரலாம். இதுவெல்லாம் நேரடியாக முதல்வரின் கட்டுப்பாட்டில் இயங்கும். 

கடந்த 50 ஆண்டுகளில் சீர்குலைந்து போய் கிடக்கும் நிர்வாகத்தை சுண்ணாம்பு அடித்து புதிய நிர்வாகமாக மாற்றுவேன். சுகாதரத்துறை அமைச்சராக இருந்த போது 40 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை வைத்து பணியாற்றியுள்ளேன். தமிழகத்தில் உள்ள நேர்மையான அதிகாரிகள் மண்டபத்தில் தண்டனை காலம் போல பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் ஆட்சியில் இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் நடக்காது. 

சட்டப்பேரவையில் என்ன நடக்கிறது? அம்மாவில் ஆரம்பித்து அம்மாவில் முடிகிறது. பாமக ஆட்சிக்கு வந்தால் ஜனநாயக முறைகள் கடைபிடிப்போம். எதிர்கட்சிகளுக்கு எங்களை விட அதிகமாக பேச வாய்ப்பு அளிப்போம். ஆட்டுக்குட்டி, மிக்ஸி தரமாட்டோம். கல்வி, வேலைவாய்ப்பு அளிப்பேன். தமிழக மக்களை தன்மானத்துடன் வாழ வைப்பேன்.
 
தமிழகத்துக்கு  திராவிடக் கட்சிகளால் எந்த நன்மையும் இல்லை. அதிமுக, திமுகவை ஒழியுங்கள் போதும். தமிழகத்தை முன்னேற்றபாதைக்கு அழைத்து செல்ல வேண்டுமென்ற ஆதங்கம் எனக்குள் இருக்கிறது'' என்று பேசினார்


அமைச்சர்கள் முன்னிலையிலேயே கதறி அழுத சிறுமிக்கு பச்சை குத்திய கொடுமை! (வீடியோ)

முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி சென்னையில் சிறுமி ஒருவருக்கு கையில் பச்சை குத்தப்பட்டது. வேதனையை தாங்க முடியாமல் சிறுமி கதறி அழுத சம்பவம் அமைச்சர்கள் முன்னிலையிலேயே நடந்துள்ளது மனித உரிமை ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
 
அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவின பிறந்தநாளையொட்டி அதிமுகவினர் நலத் திட்ட உதவிகள், திருமணங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 23-ம் தேதி முதல்வரின் பிறந்தநாளையொட்டி,  வேளச்சேரி முருகன் திருமண மண்டபத்தில்,  668 பேரின் வலது கையில் முதல்வர் ஜெயலலிதாவின் உருவத்தை பச்சை குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், வளர்மதி, விஸ்வநாதன், ஆர்.வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்.
 
பெண்கள், ஆண்கள் என ஏராளமானோர் முதல்வர் ஜெயலலிதா படத்தை பச்சை குத்திக்கொண்டனர். இதில் ஒரு சிறுமிக்கு ஜெயலலிதா உருவம் பச்சை குத்தப்பட்டது. அப்போது, பச்சை குத்திக் கொண்ட அந்த சிறுமி வலி தாங்காமல் அழும் வீடியோ தற்பொழுது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர்கள் முன்னிலையிலேயே அந்த சிறுமிக்கு பச்சை குத்தப்பட்டுள்ளது தற்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
 
சிறுமிக்கு வலுக்கட்டாயமாக பச்சை குத்தப்பட்டதா என்ற சந்தேகத்தை மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர்.  இது தொடர்பாக வழக்கு ஒன்று ரெடியாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

  வீடியோவை காண:


மாவோயிஸ்ட்களின் ஸ்வீட் மாஸ்டர் அவதாரம்... சென்னை 'பகீர்'!

சென்னையை அடுத்த ஶ்ரீ பெரும்புதூர், தேரடி, திருவள்ளூர் சாலை... பிப்ரவரி 18-ம் தேதி இரவு. அந்த ஸ்வீட் கடையை மூடுகிற நேரம். அங்கு வந்து கொஞ்சம் தமிழும், நிறைய இந்தியுமாக "ஏதாவது ஒரு வேலை கொடுங்களேன்" என்று கேட்ட சுபேந்திர யாதவ்தான் கடந்த  22-ம் தேதி க்யூ பிரிவு போலீசாரிடம் சிக்கிய மாவோ என்கிறது போலீஸ் தரப்பு. இந்த இடைப்பட்ட ஐந்து நாளில் அதே ஹோட்டலின் ஸ்வீட் மாஸ்டராகவும் ஆகியிருந்தார் சுபேந்திரயாதவ்.
ஹரீஷ் பவன் என்ற பெயரில் இயங்கிவரும் அந்த ஓட்டலின் முதலாளி சேகர், சுபேந்திர யாதவுக்கு இரக்கம் காட்டியதின் விளைவு, க்யூ பிரிவு போலீசாரால் கடுமையாக எச்சரிக்கப்பட்டிருக்கிறார். (ஏதோ, சேகர் தப்பித்தார் என்றுதான் சொல்ல வேண்டும்).   

'சுபேந்திர யாதவ் வாய் திறந்தால்தான் இன்னும் எத்தனை ஸ்வீட் மாஸ்டர்கள் இப்படி சென்னைக்குள் நுழைந்துள்ளனர் என்பது தெரியவரும்' என்கின்றனர் போலீஸ் தரப்பில்.

"சென்னையைப் பொறுத்தவரை தரமாக ஸ்வீட் போடுகிற மாஸ்டர் கிடைப்பதே அரிதாக இருக்கிறது, அப்படியே கிடைத்தாலும், அவர்களுக்கான சம்பளம் சற்று அதிகம்தான். ஆனால், வட இந்தியாவில் இருந்து இங்கு பிழைப்புத் தேடி வருகிறவர்களுக்கு தங்க இடமும், உணவும் கொடுத்து சம்பளமாக 100 ரூபாய் கொடுத்தாலே போதும். இந்த நிலை இருப்பதால்தான் இப்படி எந்த விசாரிப்பும் இல்லாமல் வட இந்தியர்கள் சென்னையில் செட்டில் ஆகி விடுகின்றனர்" என்றும் குரல்கள் வரத்தான் செய்கிறது.

சென்னையில் புதிதாய் வீடு வாடகைக்குப் பிடித்து தங்கியிருப்போரும், வீட்டின் உரிமையாளரும் தங்கள் விபரத்தை உள்ளூர் காவல் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற ஒரு நிலையை 2014-ன் இறுதியில் போலீசார் கொண்டு வந்தனர். அதை எதிர்த்து ஆரம்ப நிலையிலேயே சிலர் கோர்ட்டுக்கும் சென்றனர். அப்படி அந்த திட்டத்தில்  நிறைய சிக்கல் ஏற்பட்டது.
வேலை நிமித்தமாக தங்கியிருந்த வட இந்திய நபர்களுக்கு அவர்களை வேலைக்கு அழைத்து வந்திருந்த முதலாளிகள் 'கியாரண்டி' கொடுத்தனர். திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வசித்தவர்களால் அப்படி எந்த கியாரண்டியையும் கொடுக்க முடியாமல் போனதும் இந்த திட்டம் தோற்றதற்கு ஒரு காரணம்.

அதேபோன்று நேரடியாக வந்து குடியிருப்புகளில் விசாரித்து விட்டுப் போனவர்கள், அந்த விசாரணையின் மூலம் சில 'பெரிய' மனிதர்களின் குடும்ப விவகாரத்தை கையில் வைத்துக் கொண்டு விளையாட தொடங்கியதும் இந்த திட்டம் தோற்றதின் முக்கியக் காரணம்.

"யார் சென்னைக்குள் இருந்தாலும் (வேறு மாநிலத்தவர்) அவர்கள் குடும்பம், பூர்வீகம், சான்று போன்றவைகளை வாங்கி கையில் வைத்துக் கொண்ட பின்னரே அவர்களை வேலையில் வைப்பதோ, அவர்களுக்கு வீடு வாடகை கொடுப்பதோ இருக்க வேண்டும்" என்பது இந்த திட்டத்தின் முக்கிய அம்சம்.  

வட இந்தியர்கள்,  'எட்டுமணி நேரம்தான் வேலை பார்ப்போம்' என்று சொல்வது இல்லை. குறைந்த கூலிக்கே நேரங்காலம் பார்க்காமல் வேலை பார்க்கிறார்கள் என்ற காரணத்தை மனதில் வைத்துக் கொண்டு பல வணிக நிறுவனங்கள், தங்கள் பொறுப்பில் இருக்கும் நபர்கள் குறித்த விபரங்களை போலீசுக்கு கொடுக்காமலே அமைதி காத்தனர்.
மெட்ரோ ரயில் திட்ட கட்டுமான பணியிலும் வட இந்தியர்களின் பங்களிப்பே  அதிகம். நடக்கிற கொலை, கொள்ளை சம்பவங்கள் பெரும்பாலானவற்றில் வேற்று மாநிலத்தவர்களின் கைவரிசை உள்ளதாக புகார்கள் எழுகின்றன. 'எங்களுக்கு  இந்த கொள்ளை சம்பவத்தில்  தொடர்பே இல்லை' என்ற ஒரு வாக்குமூலமும்... சென்னையில் வட நாட்டவர்களின் வரவு அதிகமாகிக் கொண்டே போன கால கட்டத்தில்தான் "பீரோ-புல்லிங்" கொள்ளையர்கள் அதிகமாகினர் என்ற எதிர்மறை கருத்துகளும் தமிழகத்தில் வலம் வந்தன. 

கடின உழைப்பாளிகளாக நான்கு சப்பாத்தி, கொஞ்சம் வெங்காயம், சில பச்சை மிளகாய்களை உண்டு விட்டே மணிக்கணக்கில் சளைக்காமல் வெயிலில் நின்று வேலை பார்த்த அவர்களின் கடின உழைப்பின் அடையாளங்களில் ஒன்றாகத்தான் சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் காட்சி தருகிறது. 

'எங்கோ, ஓரிருவர் அப்படியான வில்லங்க வழக்குகளை சந்தித்தவர்களாய் இருக்கலாம், எல்லோரும் அப்படியானவர்கள் அல்ல' என்ற ஆதரவுக் குரல்களும் தமிழர்கள் மத்தியில் கேட்க ஆரம்பித்தது. இப்படிப்பட்ட பஞ்சாயத்துகள் நடக்கின்ற வேளையில்தான் ஶ்ரீ பெரும்புதூரில் மாவோயிஸ்ட் சுபேந்திர யாதவ் சிக்கியுள்ளார். இவர்,  பீகார், ஹரியானா, சண்டிகர், ஒடிசா மாநிலங்களில் தன்னுடைய தொடர்புகளை வைத்திருந்தவர் என்பது மட்டுமே இப்போதைக்கு போலீசாருக்கு கிடைத்திருக்கும் உறுதியான தகவல். இதைத்தவிர விசாரிப்பில் முன்னேற்றம் வந்தால்தான் வேறேதும் தகவல் வெளியாகும்.
 
யாதவின் செல்போன் லைனில் வந்த சில அழைப்புகள் வடசென்னை கொடுங்கையூரிலும் தொட்டிருக்கிறது என்பதை போலீசார் சற்று சீரியசாகவே பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

இந்த விவகாரங்கள் ஒரு பக்கமிருக்க, மகாமகம் திருவிழாவின் முதல் நாள் அங்குள்ள போலீஸ் கன்ட்ரோல் ஏரியாவுக்கு அடுத்தடுத்து வந்த மிரட்டல் போன் கால்கள் குறித்த விசாரணையையும், விபரத்தையும் மிகவும் சைலண்ட் மோடில் வைத்துள்ளது போலீஸ்.

வில்லங்கம் இல்லாத "தகவல் சேர்ப்பு" மீண்டும் ஒரு ரவுண்ட் வராதவரை சுபேந்தர் யாதவ்கள் போன்றோர் மிட்டாய் கடைகளில் மாஸ்டராவதை தடுக்க முடியாது.


பாகிஸ்தான் ரசிகருக்கு தோனி கொடுத்த இன்ப அதிர்ச்சி!

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி, பாகிஸ்தானை சேர்ந்த தன்னுடைய தீவிர ரசிகரான பசீருக்கு போட்டிக்கான டிக்கெட் வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
 
62 வயதான முகமது பசீர் தீவிர கிரிக்கெட் ரசிகர். பாகிஸ்தானை சேர்ந்தவராக இருந்தாலும் அவரது ஆதரவை தோனிக்கும் இந்திய அணிக்கு தொடர்ந்து வழங்கி வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா- பாகிஸ்தான் மோதியப் போட்டியை பார்க்க பசீருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. இதனையறிந்த தோனி அவருக்கு உதவியுள்ளார்.

இந்தநிலையில் 2015ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலும் அவர் தொடர்ந்து இந்திய அணிக்காகவும், தோனிக்காகவும் ஆதரவு அளித்து வந்தார். அவருக்கு பல எதிர்ப்பு வந்தாலும் அதை எல்லாம் அவர் கண்டு கொள்ளவில்லை.

இதனிடையே, ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் மோதியப் போட்டியைக் காண பசீருக்கு டிக்கெட் வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் தோனி. இது குறித்து முகமது பசீர் கூறுகையில், ”இந்திய அணித்தலைவர் தோனி எனக்கு நேற்று முன்தினம் நடந்த போட்டிக்கான டிக்கெட் வழங்கினார். அதேசமயம் நான் அப்ரிடியிடம் கேட்கவில்லை. அவரிடம் நான் பேசமாட்டேன். அப்ரிடிக்கு பாகிஸ்தானில் ரசிகர்கள் இருக்கலாம். ஆனால் இந்தியாவில் இருக்க வாய்ப்பு இல்லை. எங்களது அணியில் ஒற்றுமை என்பதே கிடையாது” என்று கூறியுள்ளார்.


Friday, 26 February 2016

நம்பர் 1 ஃப்ளாய்ட் மேவெதர்

குத்துச்சண்டையில் லைட்வெயிட், ஃபெதர்வெயிட், ஹெவிவெயிட்... எனக் களத்தில் மோதும் வீரர்களின் எடைக்கு ஏற்ப பல பிரிவுகள் உண்டு. அதில் ஜூனியர் மிடில்வெயிட், சூப்பர் வெல்டர்வெயிட், வெல்டர்வெயிட் பிரிவுகளில் உலக சாம்பியன் ஃப்ளாய்ட் மேவெதர் (ஜூனியர்). அவரது வெயிட் சுமார் 68 கிலோ. ஆனால், அவரது ஹெட்வெயிட்  அளவிட இயலாதது. பணவெறி பிடித்தவர்; அவரது திமிர்ப்பேச்சுக்கு முன் யாரும் நிற்கவே முடியாது; பெண் பித்தர்; தன் கேர்ள் ஃப்ரெண்டுகளைக் கண்மூடித்தனமாக அடித்துத் துவைத்துவிட்டு அவ்வப்போது ஜெயிலுக்கு சென்றுவருவார்; விளம்பர விரும்பி; முகம் சுளிக்கவைக்கும் நடவடிக்கைகளின் ஏகபோக அதிபதி; எவ்வளவுக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதைவிட அதிக அளவு வெறுப்பாளர்களையும் சம்பாதித் திருப்பவர்... இப்படிப்பட்ட மேவெதரின் வாழ்க்கையில் இருந்தும் நாம் விரும்பிக் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் நிறையவே இருக்கின்றன. இரண்டு காரணங்கள். 
ஒன்று... 1996-ம் ஆண்டு அக்டோபரில் தொடங்கி 2015-ம் ஆண்டு ஏப்ரல் வரை இவரை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை. இரண்டு... உலகின் அதிகம் சம்பாதிக்கும் நம்பர் ஒன் விளையாட்டு வீரர், மேவெதர்.
'நான் மிக மிக மோசமான பின்னணியில் இருந்து வந்தவன். என் வாழ்வில் இருந்து நான் சொல்ல நினைப்பது... கடினமாக உழைத்தால், அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் நீங்களும் எதை வேண்டுமானாலும் அடைய முடியும்.’
1977-ம் ஆண்டு அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்திலுள்ள கிராண்ட் ராபிட்ஸ் நகரத்தில் 'பாக்ஸர்கள்’ நிரம்பியக் குடும்பத்தில் பிறந்தவர் மேவெதர். தந்தை மேவெதர் (சீனியர்), அவரது தம்பி ஜெஃப் மேவெதர், இன்னொரு நெருங்கிய உறவினரான ரோஜர் மேவெதர், மூவருமே நாடு அறிந்த பாக்ஸர்கள். ஆகவே மூன்றாவது வயதிலேயே ஜூனியர் மேவெதரின் பிஞ்சுக் கைகள் பாக்ஸிங் கிளவுஸ்களைப் போத்திக்கொண்டன. தொங்கவிடப்பட்டிருக்கும் பன்ச் பேகின் உயரம்கூட எட்டாத வயதில், பொடியன் மேவெதர் எம்பி எம்பிக் குத்த ஆரம்பித்தான்.
ஆனாலும் வளர்ந்த சூழ்நிலை சரி இல்லை. அம்மா போதைக்கு அடிமை. பள்ளிவிட்டு வீட்டுக்கு வந்தால் ஹெராயின் ஏற்ற உபயோகித்த சிரிஞ்சுகள் தரையில் சிதறிக்கிடக்கும். அப்பாவுக்கு, போதைப்பொருள் விற்பது உபதொழில். சரியான மின்வசதிகூட இல்லாத நெருக்கமான வீடு. குழந்தைகள் மேல் அதிகம் அக்கறை காட்டாத பெற்றோர். வீடு அல்ல, நரகம்!
'சிறுவயதில் வீட்டில் இரவில் கண்ணீருடன் படுத்தபடியே எனக்குள் நானே சொல்லிக்கொள்வேன். நான் ஒருபோதும் சிகரெட் பிடிக்க மாட்டேன்; மது அருந்த மாட்டேன். சிறுவனாக இருக்கும்போது மட்டும் அல்ல... வளர்ந்த பிறகும்; வாழ்க்கை முழுவதும்.’
மேவெதருக்கு ஒரே ஆறுதல் அவனது பாட்டி. 'வருங்காலத்தில் நல்ல வேலைக்குப் போக வேண்டும்’ என மேவெதர் சொன்னபோது, 'வேண்டாம், பாக்ஸிங்கில் கவனம் செலுத்து. வேறு எதையும் யோசித்துக்கூடப் பார்க்காதே’ என உறுதியாகச் சொன்னார் பாட்டி. சீனியர் மேவெதர், தன் மகனுக்கு பார்க், சினிமா... என எந்தச் சந்தோஷத்தையும் வழங்கவில்லை. அவருடனேயே ஜிம்முக்கும் பாக்ஸிங் பயிற்சிக்கும் மட்டும் அழைத்துச் சென்றார். ஆகவே, குத்துச்சண்டை ஆர்வம் ஜூனியரின் மனதில் குத்துக்காலிட்டு அமர்ந்தது.
பாக்ஸிங் பாரம்பர்யமுள்ள குடும்பம். மரபணுவிலேயே பாக்ஸிங் பிணைந்திருந்தது. வாய்ப்புகளும் அமைந்தன. ஆகவே, முன்னுக்கு வந்துவிட்டான் என மேவெதரின் வெற்றியை எளிமைப்படுத்துதல் தவறு. இயற்கையான திறமை என்பது உப்புபோல. விடாமுயற்சி, அபார உழைப்பு, தீவிர அர்ப்பணிப்பு இவற்றுடன் திறமை என்ற உப்பும் கலக்கும்போதுதான் சுவையான உணவு கிடைக்கிறது என்கிற தெளிவு மேவெதருக்கு சிறுவயதிலேயே இருந்தது.
இருந்தாலும் சில இரவுகள் பயமுறுத்தின. 'நான் நேற்றைய போட்டியில் தோற்றுவிட்டேன்’ என காலையில் கண்ணீருடன் எழுவான். பின்பே அது கனவு எனப் புரியும். மனதை ஏதோ ஒரு பயம் கவ்வும். அடுத்த சில நிமிடங்களில் மேவெதர் பயிற்சிசெய்யக் கிளம்பிவிடுவான். தினமும் மைல்கணக்கில் ஓட்டப் பயிற்சி; மற்ற நேரங்களில் ஜிம்; ஓயாது ஸ்கிப்பிங்; ஓய்வெடுக்கும்போதும் கைகள் காற்றைக் குத்திக்கொண்டிருக்கும்.
சீனியர் மேவெதர், போட்டியின்போது குத்து வாங்காமல் விலகுவது / தடுப்பது எப்படி என்ற நுட்பங்களை அறிந்த கில்லாடி. ரிங் என அழைக்கப்படும் களத்தில் எதிரியைவிட அதிவேகமாகச் செயல்படுவது எப்படி என அறிந்த வித்தகர். தந்தையின் வித்தைகள் மகன் மனதில் விதைகளாக விழுந்தன. 'இனிமேல் பாக்ஸிங் மட்டுமே. படிப்பு உதவப்போவது இல்லை. பாக்ஸிங்தான், எனக்குப் பணம் கொடுக்கப்போகிறது; என்னை உயரத்தில் வைக்கப்போகிறது’ என தன் பதின்வயதில் தீர்க்கமான முடிவெடுத்த ஜூனியர் மேவெதர், உயர்பள்ளிப் படிப்பை முடித்துக்கொண்டான். சிறுவயதிலேயே உலகத்தின் பணக்கார மனிதனாக வேண்டும் என்ற ஆசை மேவெதருக்குள் இருந்தது. அதை அடைய நீண்ட தூரம் செல்ல வேண்டும் என்ற புரிதலும் இருந்தது.
கோல்டன் கிளவுஸ் போட்டிகள் அமெரிக்காவில் தேசிய அளவில், பல நகரங்களில் நடக்கும் குத்துச்சண்டைப் போட்டிகள். மேவெதர் அவற்றில் கலந்துகொள்ள ஆரம்பித்தான்.
12 வயதிலேயே 18 வயது வீரருக்குரிய அனுபவத்துடன் களத்தில் அசத்தினான். அவனது வேகம் அசாத்தியமானதாகத் தோன்றியது. வயதில் மூத்த எதிரி வீரர்களும் மேவெதர் விட்ட பன்ச்களில் விதிர்விதிர்த்துப்போயினர். வெற்றிகள் அவனிடம் தஞ்சம் அடைந்தன. சோதனைகளுக்கும் பஞ்சம் இல்லை. 1993-ம் ஆண்டு போதைப்பொருள் கடத்திய வழக்கில் சிறைக்குப் போனார் சீனியர் மேவெதர். மகன், சோகங்களை எல்லாம் விழுங்கிக்கொண்டு போட்டிகளுக்குச் சென்றான். 'என் கையில் ஓரளவு பணம் சேர ஆரம்பித்த பின், நான் யாரையும் நம்பியிருக்கவில்லை. என்னை நம்பினேன். என்னை மட்டுமே!’
விளைவு, 1993, 1994, 1996 என மூன்று ஆண்டுகளும் வெவ்வெறு எடைப் பிரிவுகளில் கோல்டன் கிளவுஸ் சாம்பியன் மேவெதர். அமெச்சூர் வீரராக மேவெதர் களம் இறங்கியவை மொத்தம் 90 போட்டிகள். அதில் 86-ல் வெற்றி.  ’Pretty boy’ என்ற அடைமொழி மேவெதருடன் ஒட்டிக்கொண்டது.
1996-ம் ஆண்டு. அட்லாண்டா ஒலிம்பிக்ஸ். 19 வயது மேவெதர், 57 கிலோ எடைப் பிரிவில் நிச்சயம் தங்கம் வெல்வார் என அமெரிக்கா நம்பியது. கால் இறுதி வரை வெற்றிக் குத்தில் குழப்பம் இல்லை. அரை இறுதி (90-வது போட்டி). எதிரில் மோதியவர் பல்கேரியாவின் செராஃபிம் டொடுரோவ். கடும் மோதல். மேவெதரின் குத்துகள் நம்பிக்கையூட்டின. மூன்று சுற்றுகளின் முடிவில் ரிங்கில் ரெஃப்ரி வெற்றிபெற்றவரை அறிவிக்கும் சமயத்தில், மேவெதரின் கையை உயர்த்தினார். ஆனால், வெற்றியாளராக மைக்கில் அறிவிக்கப்பட்டதோ டொடுரோவின் பெயர். 109 என்ற புள்ளிக் கணக்கில் அவர் வென்றதாகச் சொல்லப்பட்டது. குழப்பம். சர்ச்சை. (போட்டியைக் காண :www.youtube.com/watch?v=yo3Ar538Sf4)  'நடுவர்கள் பாரபட்சமாக நடந்துகொண்டனர்; மேவெதர் விட்ட பன்ச்கள் சில, கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை’ என அமெரிக்க வீரர்கள் எதிர்ப்பைக் காட்டினர். சர்வதேச நடுவர் குழுவில் இருந்த அமெரிக்கர் ஒருவர் கண்டனம் தெரிவித்து, தன் பதவியை ராஜினாமா செய்தார். தங்கம் எதிர்பார்த்துச் சென்ற மேவெதர் வெண்கலத்தோடு வீடு திரும்ப நேரிட்டது. அதுதான் அவர் வாழ்க்கையின் மிக முக்கியத் திருப்பமும்கூட.
மேவெதருக்கும், யாரோ தன்னை பன்ச் பேகில் அடைத்து வைத்துவிடாமல் குத்திக்கொண்டே இருந்ததுபோல தோன்றியது. உண்மையில் இது தோல்வி அல்ல. ஆனால், உலகம் இதை என் தோல்வியாகத்தான் பார்க்கிறது. இனி, தோல்வி என்னைச் சீண்டக் கூடாது... ஒருபோதும்! வெற்றியாளனாக மட்டுமே நான் அறியப்பட வேண்டும். எப்போதும்! மேவெதர் தன் வாழ்வைப் புரட்டும் முடிவை அப்போது எடுத்தார். 'இனி நான் அமெச்சூர் பாக்ஸராக இருக்கப்போவது இல்லை. புரொஃபஷனல் பாக்ஸராக விளையாடப்போகிறேன்.’
இங்கு... சிறு குறிப்பு ஒன்று. புரொஃபஷனல் பாக்ஸிங்  என்பது நாட்டுக்காக விளையாடுவது அல்ல. தனிப்பட்ட முறையில் பணப் பரிசுக்காக விளையாடுவது. இதை நடத்த தனியே அமைப்புகள் (IBF, WBA, WBC, WBO, IBO, WPBF)  இருக்கின்றன. வீரர்களுக்கான ஒப்பந்தம், போட்டித்தொகையை நிர்ணயிப்பது, சாம்பியன்ஷிப் பெல்ட், பட்டங்கள், விளம்பரப்படுத்துதல், ஒளிபரப்பு உரிமை, பெட்டிங் என பல்வேறு அம்சங்கள்கொண்ட தனி உலகம். போட்டிகளுக்கான விதிகள் அமெச்சூர் பாக்ஸிங்கில் இருந்து மாறுபட்டவை. அதிகபட்சம்
12 சுற்றுகள். ஆரம்பச் சுற்றுகளிலேயே அடிதாங்க முடியாமல் ஒரு வீரர், கோழையாகக் கும்பிடு போட்டு விலகலாம். விழும் 'பன்ச்’கள் அபாயகரமானவை. தாடை எலும்பு நொறுங்குவது முதல் சிற்சில சமயங்களில் 'பாடை’ கட்டப்படுவது வரை அரங்கேறலாம். ஏனென்றால், புரொஃபஷனல் பாக்ஸிங்கில் 'ஹெட் கியர்’ எனும் தலைக்கவசம் அணிதல் கூடாது.
'குத்துகள் வாங்குபவன்தான் அதைப் பற்றி யோசிக்க வேண்டும். நான் எதிரிக்குக்  குத்துகளை வாரி வழங்கப் பிறந்தவன்’ என்றபடி சீறிக் கிளம்பினார் மேவெதர். புரொஃபஷனல் பாக்‌ஸராகக் களம் இறங்கிய முதல் போட்டியிலேயே மெக்ஸிகோவின் அறிமுக வீரரான ரோபர்டோவை துவம்சம் செய்தார். இரண்டாவது சுற்றிலேயே நாக்அவுட். 1998-ம் ஆண்டு வரை மேவெதர் மொத்தம் 19 போட்டிகளில் கலந்துகொண்டார். அனைத்திலும் வெற்றி. பண ருசி கண்ட பூனை மீண்டும் மீண்டும் ஆக்ரோஷத்துடன் களம் இறங்கியது.
மேவெதருக்கான ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே சென்றனர். கூடவே, அவரை வெறுப்பவர்களும். 'நீங்கள் என்னை விரும்புகிறீர்களா, வெறுக்கிறீர்களா என்பது விஷயமே அல்ல. எப்படியும் என் போட்டியைப் பார்க்கத்தான்போகிறீர்கள்’ என்றபடி ரிங்கில் சுற்றிச் சுழன்றார் மேவெதர். அவர் களம் இறங்கும் நாட்களில் அமெரிக்கர்களும், பிற தேச பாக்ஸிங் ரசிகர்களும் மற்ற வேலைகள் அனைத்தையும் மறந்தனர். 'பாக்ஸிங்கின் மிகச் சிறந்த வீரராக, தன்னிகரற்றவராக மேவெதர் நிலைத்துநிற்கப்போகிறார்’ எனப் போட்டி வர்ணனையாளர்கள் கொண்டாடினார்கள். அவர் காட்டில் டாலர் மழை. உலக சாம்பியன்ஷிப் பட்டங்கள்... உயரிய விருதுகள். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் மேவெதரா!
அதற்குப் பிறகு மேவெதர் வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் மட்டுமே கலந்துகொள்ள ஆரம்பித்தார். ஆனால், அந்தப் போட்டிகளுக்காக வருடம் முழுவதும் தன்னைத் தீவிரமாகத் தயார்படுத்திக்கொண்டார். போட்டிக்கு முன்பு எதிரியின் பழைய போட்டி வீடியோக்களைப் பார்த்து அதற்கு ஏற்ப வியூகம் அமைக்கும் வழக்கம் மேவெதருக்குக் கிடையாது. ரிங்கில் இறங்கிவிட்டால், எதிரி என்ன நினைக்கிறான் என உணர்ந்துகொண்டு அதற்கு ஏற்ப அதிவேகமாகச் செயல்படுதல், எதிரி தான் திட்டமிட்டதைச் செயல்படுத்தும் முன்னரே, தன் சாதுர்யத் தாக்குதலால் அவனை நிலைகுலைய வைத்தல், எதிரி தாக்கவரும்போது தன் இடது தோளை உயர்த்தி, ஒரு குத்துகூட வாங்காமல் தன் லாகவமான அசைவுகளால், கால்களின் நகர்வுகளால் தப்பித்து, எதிர்பாராத கோணத்தில் எதிரிக்கு ஏராளமான குத்துகளை வழங்கி அவனை மனதால், உடலால் பலவீனப்படுத்துதல் போன்றவை மேவெதரின் கள வெற்றிச் சூத்திரங்கள். 'எப்போது நான் ரிங்கில் இறங்கினாலும், என் திறமை அனைத்தையும் அங்கே களம் இறக்குவேன்!’
2007-ம் ஆண்டு மே மாதம். ஆறு எடைப் பிரிவுகளில் உலக சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்காவின் ஆஸ்கர் டி லா ஹோயா என்ற ஜாம்பவானுடன் மேவெதர் மோத ஏற்பாடுகள் நடந்தன. 'தோற்கடிக்கவே முடியாத மேவெதர், முதன்முதலில் மூக்கு உடைபடப்போகிறார்!’ என்றும் செய்திகள் கிளம்பின. ஹெச்.பி.ஓ சேனல் போட்டிக்கான முன்னோட்ட நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி பரபரப்பை ஏற்றியது. உலக வரலாற்றில் அதுவரை இல்லாத அளவில் ஒரு பாக்ஸிங் நிகழ்ச்சியின் தொலைக்காட்சி வருமானம் மட்டும் 120 மில்லியன் டாலர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆஸ்கர் ஜெயித்தால் 58 மில்லியன் டாலர்; மேவெதர் ஜெயித்தால் 25 மில்லியன் டாலர் எனப் பரிசு ஒப்பந்தம் போடப்பட்டது.
போட்டியின் ஆரம்பச் சுற்றுகளில் ஆஸ்கரின் கை ஓங்குவதுபோல தெரிந்தது என்றாலும் போகப் போக மேவெதரின் 'பன்ச்’கள் பேசின. 12 சுற்றுகளின் முடிவில் புள்ளிகளின் அடிப்படையில் மேவெதர் வென்றார். (போட்டியைக் காண:www.youtube.com/watch?v=1KhBzF6UX_0)  'என் மீதி வாழ்க்கையை இதே தோல்வியுடன் வாழ்ந்து தீர்க்க வேண்டும்’ என்றார் நொந்துகொண்டார் ஆஸ்கர். 'இந்த யுகத்தின் மிகச் சிறந்த போட்டியில் நான் வென்றுவிட்டேன்’ என மகிழ்ந்த மேவெதர், அடுத்த வெற்றிக்குப் பின் 2007-ம் ஆண்டு இறுதியில், 'பாக்ஸிங்கில் நான் சாதிக்க இனி எதுவுமே இல்லை’ என அசால்ட்டாகத் தன் ஓய்வை அறிவித்தார். பொழுதுபோக்காக டி.வி ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டார். ரெஸ்லிங் களத்தையும் கொஞ்சம் எட்டிப் பார்த்தார்.
களமாடிய கால்களும் கிளவுஸ் அணிந்த கைகளும் சும்மா இருக்குமா?! மேவெதர் 2009-ம் ஆண்டு மே மாதம் மீண்டும் ரிங்கில் களம் இறங்கினார். 21 மாத ஓய்வு அவரது உத்வேகத்தைக் கொஞ்சம்கூட குறைக்கவில்லை. தீவிர முயற்சி...  தீராத பயிற்சி அதே அதிரடி வேகத்தைத் தக்கவைத்திருந்தன. 'தகுதியான எதிரிகள் நிச்சயம் தேவை. அவர்களே எனக்கு மேலும் மேலும் உத்வேகம் கொடுக்கிறார்கள். என் பயிற்சியைத் தீவிரமாக்குகிறார்கள்’ என அடுத்தடுத்த போட்டி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
மேவெதரின் செகண்ட் இன்னிங்ஸில் எதிரிகள் எதிரில் எமனைக் கண்டார்கள். காக்கக் காக்க மனோதிடம் காக்க, நோக்க நோக்க நொடியில் நோக்க, தாக்கத் தாக்க தடையறத் தாக்க, பார்க்கப் பார்க்க எதிரியின் கண்பயம் பார்க்க, மெக்ஸிகோவின் ஜூவானும், அமெரிக்க விக்டரும், மார்தட்டி வந்த அர்ஜென்டினா மார்கோஸும், ராபர்ட்டும் ஷானும் இன்னும் பலரும், மேவெதர் பெயர் சொன்னால் இடிவிழுந்ததுபோல ஓடினார்கள்.
2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை மேவெதர் விளையாடிய புரொஃபஷனல் போட்டிகள் 47. ஒன்றில்கூட தோல்வி இல்லை. அதில் 26 நாக்-அவுட் வெற்றிகள். ஃபோர்ப்ஸ்  பத்திரிகை வெளியிட்டுள்ள சென்ற ஆண்டுக்கான உலகின் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர் வரிசையில் முதல் இடத்தில் அமர்ந்திருக்கிறார், விஷீஸீமீஹ் மேவெதர். ஆம், அவர் தன் பெயரை அப்படித்தான் மாற்றிக்கொண்டுள்ளார். ஃபோர்ப்ஸ் சொல்லியிருக்கும் அவரது சொத்து மதிப்பு 105 மில்லியன் டாலர். லாஸ் வேகாஸில் 22 ஆயிரம் சதுர அடியில் ஒரு மாளிகை, பிரைவேட் ஜெட், எண்ணற்ற காஸ்ட்லி சொகுசு கார்கள், ஒரு நாளின் நிமிடங்களின் எண்ணிக்கையைவிட அதிகமான வாட்ச் கலெக்‌ஷன். டாம்பீகத்தின் நவீன ஐகானாகத் திகழும் மேவெதர் சொல்லும் வார்த்தைகள், 'நான் சம்பாதித்த அனைத்துமே முறையானவை. வெறுமனே உழைத்துக்கொண்டிருந்தால் பைத்தியம் பிடித்துவிடும். உழைக்காமல் அனுபவிப்பவர்களும் காணாமல்போய்விடுவர். நான் உழைக்கிறேன்; சம்பாதிக்கிறேன்; அனுபவிக்கிறேன்!’
சில பல கேர்ள் ஃப்ரெண்டுகள். யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆனால், அவர்கள் மூலமாக நான்கு குழந்தைகள் உண்டு. எந்தத் தோழியுடனும் மேவெதர் அதிக காலம் சேர்ந்து இருந்தது இல்லை. காதல் கசந்து, காமம் கரைந்து ஏதுமற்ற ஒரு பொழுதில் மேவெதரின் மனத்தில் வன்முறை கரைபுரண்டோடும். ரிங் மாற்றிக்கொள்ளாத தோழிகளிடம் பாக்ஸிங் 'ரிங்’கில் காட்டும் வீரத்தைப் பிரயோகிப்பார். வழக்கு. விசாரணை. சிறை தண்டனை. கடைசியாக 2012-ம் ஆண்டு ஜெயிலுக்குச் சென்று வந்த மேவெதர் சொன்ன வார்த்தைகள்... 'பாக்ஸிங் எளிதானது. வாழ்க்கை கடினமானது’!
உலக அளவில் பாக்ஸிங்கில் 'தோற்கடிக்கப்பட முடியாதவன்’ என்ற பெருமை, இன்று வரை மேவெதருக்கு மட்டுமே நிலைத்திருக்கிறது. உலகின் ஆகச்சிறந்த பாக்ஸராக நிமிர்ந்து நிற்கிறார்.
எதுவும் நிலையற்றதல்லவா?! நாளை ஏதாவது ஒரு போட்டியில் மேவெதரின் வெற்றி வானிலை மாறக்கூடும் அல்லவா?! அதற்கு அவர் சொல்லும் பதில்... 'என் வெற்றிகளுக்குக் காரணம் நான் மிகக் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்கிறேன். என்னை ஒருவன் வெல்ல நினைத்தால், அவன் என்னைவிட மிக மிகக் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அப்படி யாரும் இங்கு இல்லை!’

வேகம்... வேகம்... வேகம்!
* குழந்தைகளுடன் பொழுதுபோக்குவதும் டேபிள் டென்னிஸ் விளையாடுவதும் மேவெதருக்குப் பிடித்த விஷயங்கள்.
* ராப் பாடகரான 50 சென்ட், மேவெதரின் நெருங்கிய நண்பர். மேவெதரின் புகழ் பரப்பும் புராஜெக்ட்களைச் செய்துவருகிறார்.
* மற்ற பல பிரபலங்களைப்போல மேவெதர் தன் உடலில் எந்த டாட்டூக்களும் வரைந்துகொள்ளவில்லை. 'என் உடல் இயல்பான அழகுடன் இருப்பதையே விரும்புகிறேன்’ என்பார்.
*  ஆறு துண்டு இறைச்சி, பாஸ்தா, நிறையக் காய்கறிகள், உருளைக்கிழங்கு, சிக்கன்... தீவிரப் பயிற்சிக்குப் பிறகு மேவெதரின் வழக்கமான உணவு இது. அதிலும் ஆர்கானிக் காய்கறிகள் மற்றும் இயற்கையான புல், தழைகளை உண்டு வளர்ந்த கால்நடைகளின் இறைச்சி மட்டுமே!
* ஸ்கிப்பிங், பன்ச் பேகை குத்தும் பயிற்சி, ஸிட்அப்ஸ், புல்அப்ஸ்... எதிலும் எப்போதும் மேவெதர் வேகம்தான். இந்த அவரது பயிற்சியைக் கண்டு  மலைத்துப்போன எதிரிகளே ஏராளம். (மேவெதரின் பயிற்சி வீடியோ:www.youtube.com/watch?v=SOqbYk8phRA )

தந்தை Vs மகன்
மேவெதர் சீனியருக்கும் - மேவெதர் ஜூனியருக்குமான முட்டல் மோதல்கள் எப்போதுமேபரபரப்பானவை. தந்தையும் மகனும் எப்போது ஒட்டிக்கொள்வார்கள், எப்போது வெட்டிக்கொள்வார்கள் என்பது தெரியாது. 'மேவெதர் ஜூனியரை இந்த நிலைமைக்குக் கொண்டுவந்தது நான் அளித்த பயிற்சிகளே’ என தந்தை சொல்வதும், 'நான் சுயமாகவே வளர்ந்தேன்’ என மகன் மறுப்பதும் வாடிக்கை. மேவெதர் சீனியர், ரோஜர் மேவெதர் மற்றும் சிலர், மேவெதர் ஜூனியரின் பயிற்சியாளர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால், மேவெதர் பயிற்சியாளர்களிடம் எப்போதும் அறிவுரையை எதிர்பார்ப்பது இல்லை!

 மேவெதர் தி கிரேட்!
'முகமது அலியைவிட, சுகர் ரே ராபின்ஸனைவிட நீங்க சிறந்த பாக்ஸரா?’ என்ற கேள்வி மேவெதரிடம் கேட்கப்பட்டபோது, 'இல்லையா என்ன? முகமது அலி, ராபின்சன் ஆகிய லெஜெண்ட் வீரர்களை நான் மிகவும் மதிக்கிறேன். அவர்கள் காலத்தில் அவர்கள் நிறைய விளையாடி, நிறைய வெற்றிகளைப் பெற்றிருக்கலாம். ஆனால், இன்றைய காலம், களம் வேறு. முகமது அலியும் ராபின்சனும் என்னைவிடச் சிறந்தவர்கள் என யாரும் என்னை மூளைச்சலவை செய்துவிட முடியாது. நானே சிறந்தவன்; வேறு யாரும் கிடையாது’ - இது ஃப்ளாய்ட் மேவெதரின் பதில்.


நாங்கள் விண்ணைத்தாண்டி வருவாயா காலத்தில் பிறந்தவர்கள்...

ங்கள் முந்தைய தலைமுறைக்கு எப்பவுமே ஒரு செருக்கு இருக்கும்... அவர்கள் இளையராஜா காலத்தில் காதலித்தவர்கள் என்று... இளையராஜா பாடலை வாழ்வுடன் ஒப்பிட்டு காதலில் திளைத்தவர்கள் அவர்கள்... பல கிலோமீட்டர் சைக்களில் பின் தொடர்ந்து, பல வாரம் ஒரு புன்னைகயை மட்டும் சிந்தி, ஒரு கடைக்கண் பார்வைக்காக, பல வாரங்கள் பங்க் கடைகளில் காத்திருந்து, காதலை சொல்லியவர்கள் அவர்கள்.... நீங்களெல்லாம் என்ன காதலிக்கிறீங்க என்று எங்களை எகத்தாளம் பேசியவர்கள் அவர்கள்.



நாங்கள் பெருமையாக சொல்லி கொள்வோம். ஆம். நாங்கள் VTV காலத்தில் பிறந்தவர்கள் என்று. அதுவும் அந்த படத்துடன் வரிக்கு வரி ஒப்பிட்டு பார்த்து கொள்ள நிஜ கதை கொண்டவர்கள் பேறு பெற்றவர்கள்... அப்படி எத்தனை பேருக்கு வாய்த்தது என்று தெரியவில்லை... ஆனால், சோட்டுவுக்கு அமைந்தது. அவனை நான் சந்தித்தது, 2011 ஆம் ஆண்டு பொங்கலன்று... நண்பனின் நண்பனாக எனக்கு அறிமுகமாகி, எனது நெருங்கிய வட்டத்தில் இடம் பெற்றவன். 

பொங்கலன்று அவனை சந்தித்த போது வீட்டில் இருந்த தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தான். அப்போது ஆண்ட்ராய்ட் ஃபோன் இல்லாத காலம், அவனுக்கு ஒரு கால் வந்தது... தண்ணீர் பாய்ச்சி கொண்டே பேசியவனின் கண்கள் கலங்குகிறது.... ஏதேச்சையாக நான் அதை பார்த்துவிட்டேன். ஆனால், அவர்களின் உரையாடலும், அதாவது எதிர் திசையில் பேசியவரின் குரலும் சேர்த்து எனக்கு தெளிவாக கேட்கிறது... பிறர் பேசுவதை ஒட்டு கேட்பது பண்பில்லை என்றாலும், அவனது கண்களில் வழிந்த நீர், அவர்களின் உரையாடலை கேட்க தூண்டியது. 

அவன் பேசிக்கொண்டிருந்தது, அவன் காதலியின் அம்மாவுடன்... அவன் காதலிக்கு வேறொருவருடன் கல்யாணம் நிச்சயமாகிவிட்டது... ஜனவரி 30 ஆம் தேதி திருமணம். 

அவர்கள் உரையாடல் இது தான்,

‘சோட்டு.. உங்க லவ் எனக்கு நல்லா தெரியும்.. புரிஞ்சுக்கவும் முடியுது... நீ சினிமாவுல இருக்கிறேன்னு அவர் ஒத்துக்க மாட்டேன்கிறாரு... உனக்கே தெரியும்லப்பா... சினிமா ஹராம்னு...... நான் என்ன செய்ய முடியும்...?’

‘சரி... ஆண்ட்டி...’

‘நாங்க பார்த்து இருக்கிற பையனும் ரொம்ப நல்லப் பையன்... துபாய்ல வேலைப் பார்க்கிறான்... கைநிறைய சம்பளம்... அது மட்டும் இல்லை... அவன் நல்ல உயரம்...’

(கண்ணீர் அவனையும் அறியாமல் வழிந்தோடுகிறது... குரல் உடைகிறது)

‘அவளும் ஒத்துக்கிட்டா....’


(உடைந்த குரலில்) சரி... ஆண்ட்டி.... பிராமிஸா என்னால எந்த பிரச்சனையும் வராது... நீங்க எதை பத்தியும் கவலைப்படாம கல்யாண வேலையைப்பாருங்க... 

கண்ணீரை துடைத்துக் கொண்டு... அவன் சோகத்தை மறைத்து... மெல்லிய புன்னைகையை முகத்தில் தவழவிட்டு... என்னிடம் பேச முயல்கிறான்.... 

அவனை மேலும் தர்மசங்கடத்தில் வைக்க விரும்பவில்லை... ஜீ... நான் வேணும்னா போயிட்டு அப்பறம் வரட்டுமா.... 

இல்லை ஜீ... இருங்க....



சில நிமிடங்கள் படர்ந்த அமைதியை, ஒரு தேனீயின் ரீங்கார ஓசை உடைக்கிறது....

அவனே பேச்சை துவங்கினான்.... “ஜீ... எங்கையாவது வெளியில போகலாமா... உங்களுக்கு வேலை எதுவும் இல்லையே....?”

இல்லை ஜீ.... வாங்க போகலாம்....

தஞ்சையின் ஏகாந்த பகுதியான, ஆற்றை ஒட்டி இருக்கும் செல்லம்பட்டி சாலையில் வண்டியை செலுத்தினேன்... ஏறத்தாழ 15 கி.மீ போயிருப்போம்... சோட்டு... எதுவுமே பேசவில்லை... 

பொங்கல் என்பதால் ஊரே விழா கோலம் பூண்டிருந்தது.... ஒரு டீக்கடை கூட இல்லை... 

‘ஜீ... வண்டிய ஏதாவது மர நிழலில் நிறுத்துங்க...’ சோட்டுவே நிலவிய பேரமைதியை கலைத்தான்... 

அஞ்சு வருச லவ் ஜீ... ஸ்கூலேர்ந்தே ஒண்ணாப்படிக்கிறோம்... அவ என்னோட ஹைட்டு... என்னோட ஒரு வயசும் கூட... அப்பெல்லாம் லவ்வெல்லாம் இல்லை ஆனா அவளை ரொம்ப பிடிக்கும்... நான் சேர போற காலேஜ்ல அவ சேருவான்னு தெரியாது ஜீ... ஃப்ரீ ஹேர்ல, முதல் நாள் அவளை காலேஜ்ல பார்க்கும் போது... அய்யோ... அப்பவே விழுந்துட்டேன்....

சோட்டு என்னிடமிருந்து எந்த பதிலையும் எதிர்பார்க்கவில்லை.... நானும் குறுக்கிடவும் விரும்பவில்லை... ஆற்றைப்பார்த்து கொண்டே பேச்சை தொடர்ந்தான்... 

வீட்டு பின்னாடியே காலேஜ்... இருந்தாலும் நாலு கி.மீ சுத்திட்டு அவ வீட்டு வழியா போவேன்.... பல நாள் நான் வர்றதுக்கு முன்னாடியே காலேஜ் பஸ்ல போயிருப்பா... அவளால தான் ஜீ, நான் சீக்கிரம் காலையில எழுந்திரிக்கவே பழகினேன்... 

எப்ப... அவ என்னை லவ் பண்ண ஆரம்பிச்சான்னு தெரியல... அவளுக்கும் என்னை ரொம்ப பிடிச்சது... அவ ஹைட்டு ஜீ... பசங்க எல்லாரும் பயங்கரமா கலாய்ப்பாங்க... இருந்தாலும் அவ என்னை விட்டுக்கொடுக்க மாட்டா.... அவளுக்கு ஆரம்பத்துல நான் அவளோட ஒரு வயசு கம்மின்னு தெரியாது... ஒரு நாள் என் லைசன்ஸ்ல பார்த்துட்டா.... ஆனா, அவ என்கிட்ட எதுவுமே கேட்கல ஜீ... நானே குற்ற உணர்ச்சில சொல்லிட்டேன்... அவ பயங்கர மெச்சூர்ட் ஜீ... 

அவ என்கிட்ட கேட்டது, ஒண்ணே ஒண்ணு தான் ஜீ... சோட்டு... இந்த விஸ்காம், சினிமா, பத்திரிக்கை எல்லாம் வேணாம்... நீ ஃபாரீன் போயிடு... என்னையும் கூப்பிட்டுக்க... நான் சொல்லிருக்கணும்.... அவளை பிடிக்கிற அளவுக்கு, சினிமாவையும், மீடியாவையும் பிடிக்கும்னு ஆனா, நான் அவளுக்கு False Hope கொடுத்துட்டேன்...

எல்லாம் நல்லா போயிட்டு இருந்துச்சு...என் சினிமா முயற்சி... அவ PG கோர்ஸ்ன்னு... தீடீர்னு ஒரு நாள் ஃபோன் பண்ணினா.... சோட்டு.. வீட்ல மாப்பிள்ளை பார்க்குறாங்க... சீக்கிரம் உங்க வீட்ல சொல்லி, எங்க வீட்ல பேச சொல்லு.... 

எப்படி ஜீ வீட்டுல சொல்றது.... நிரந்தர வேலை இல்லை.... கொஞ்சம் வெய்ட் பண்ணு... எப்படியாவது சமாளின்னேன்... வேற என்ன சொல்ல முடியும் ...?

அவளும் சமாளிச்சா.... கிட்டதட்ட ஒரு வருஷம் சமாளிச்சா... பாவம் அவளும் என்ன பண்ணுவா...

ஒரு நாள் மெசேஜ் வந்துச்சு,

“ இது முடிஞ்சு போச்சு சோட்டு.. இல்ல sureஆ சொல்றேன் இது முடிஞ்சு போச்சு... நான் உன் கிட்ட முன்னாடியே சொன்னேன் ஆனா நீ அதை பெரிய விஷயமாவே எடுத்துக்கல... Leave me chottu...Its over... i won't disturb u hereafter..." 


இதான் ஜீ... அவகிட்ட இருந்து கடைசியா வந்த மெசேஜ்... பல தடவை முயற்சி பண்ணினேன்.. அவ நம்பர் switched off... 

அப்புறம் இன்னைக்கு தான் அவங்க அம்மா பேசுறாங்க....

அந்த உரையாடலில் முதன்முதலாக... நான் பேசினேன்.... “ஏன் ஜீ... உங்களை அவங்க ஏமாத்தி இருக்காங்க... கொஞ்சம் கூட கோபமே வரலையா... வாங்க ஜீ... ஏதாவது பண்ணி கல்யாணத்தை நிறுத்திடலாம்...”

வேணாம் ஜீ.... அவளை லவ் பண்ணிணேன்... லவ் பண்ணுறேன்... பண்ணுவேன்... எனக்கு VTV படம் ரொம்ப பிடிக்கும்... நான் கார்த்தியாகவே இருந்துடறேனே....

இப்படியாக தான் அந்த காதல் முற்றுப்பெற்றது... 

சோட்டு ஒரு வேளை, தன்னை VTV படத்துடன் பொருத்தி பார்க்கவில்லை என்றால்... இவன் போய் பிரச்சனை பண்ணி இருப்பான்... அவளும், கல்யாணம் நடந்து விழுப்புரத்தில் செட்டில் ஆகி இருக்க மாட்டாள்... ஆனால், இவன் அவளை இப்போது நேசிக்கும் அளவுக்கு நேசிப்பானா என்று நிச்சயாமாக தெரியவில்லை.... 

அவளை அதே அளவிற்கு காதலிக்கிறான்... விரசமில்லாத காதல்... அவளும் காதலிக்க வேண்டும் என்று காதலை வணிகமாக்காத காதல்... 

ஆம். அவன் VTV காலத்தில் பிறந்தவன்.


கிட்டில்: உதயமாகிறது குழந்தைகளின் கூகுள்!

ந்த விளம்பரத்தை நம்மில் பலர் பார்த்திருக்கக் கூடும். பிறந்தவுடன் ஒரு குழந்தை மீண்டும் தாயின் கருவறையில் புகுந்து, தன்னைப் படைத்த கடவுளிடமே சென்று, ”இந்த வீட்டில் பிறக்க எனக்கு விருப்பமில்லை; ஏனென்றால் இந்த வீட்டில் இணையதள வசதியே இல்லை” என்று முறையிடும்.

காலம் போகிற போக்கில், இது பெரும் வியப்பிற்குரிய காரியமல்ல என்றுதான் சொல்ல வேண்டும். இணைய வசதி என்பது குழந்தைகளைப் பொறுத்த மட்டில் இன்று, அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறது. இணையமானது,  பிள்ளைகளுக்கு எந்த அளவிற்கு அறிவையும், ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறதோ அதே அளவிற்குப் பெற்றோருக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது என்று சொன்னால் அது மிகையல்ல.
பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சை விதைக்கும் விதம் இணையத்தில் பரவிக் கிடக்கும் விஷத்திற்கு எல்லையே இல்லை எனலாம். குழந்தைகள் தாமாகத் தேடிச் செல்லாவிடினும், தேடல் முடிவுகளில் பத்தோடு பதினொன்றாக இத்தகைய உரலிகள் தோன்றிவிட்டால் அந்தக் குழந்தையின் மனநிலை என்னவாகும் என்பதே பெற்றோரின் பெரும் பயம். இந்த பயத்தை நீக்குவதற்காகவே, கூகுள் நிறுவனம் வெளியிட்டிருக்கின்ற தேடுபொறிதான், “கிட்டில்”(kiddle).

குழந்தைகளுக்கான கூகுள் என்று கூறப்படும் இந்த தேடுதளம்; தேடுகிற மூலச்சொற்களின் தேடல் முடிவுகளை, குழந்தைகளுக்கு ஏற்றவாறு வடிகட்டி அனுப்புகிறது. மேலும் ஆபாசமானச் சொற்களோ, வன்முறையானச் சொற்களோ, இந்தத் தளத்தில் தேடப்பட்டால், ‘உங்கள் தேடல் தவறான சொற்களைக் கொண்டுள்ளது, தயவு செய்து மீண்டும் முயற்சிக்கவும்’ என்று பதிலளிக்கிறது இந்த இணையதளம்.


மேலும் குழந்தைகளின் கல்விக்குத் துணை புரியும் நோக்கில், தேடல் முடிவுகள் வடிவமைக்கப்படுள்ளன. எடுத்துக்காட்டாக, ’ஃபேஸ்புக்’ என்று தேடினால் அந்த இணையதளத்தின் உரலியை முதலில் காட்டாமல், ‘ஃபேஸ்புக்’ குறித்த நடப்புச் செய்திகளையோ, அதில் பிரபலமாகியுள்ள சாதனை மாணவர்களையோ, அது குறித்த ஊடகத் தகவல்களையோ, முதன்மைப் படுத்துகிறது இந்தத் தேடுபொறி.

குழந்தைகளை ஈர்க்கும் விதமாக விண்வெளி அமைப்பு, ஏலியன் அனிமேஷன் எனக் கலக்குகிறது ’கிட்டில்’. மேலும் 24 மணி நேரத்திற்கு ஒரு முறை தன் தேடுதல் பதிவுகளை அழித்து விடுகிறது இந்தத் தேடுதளம்.  இனி பெற்றோர்களுக்கு, ’கூகுள்’ என்ற சொல்லைக் கேட்கும்போதெல்லாம் ‘கிட்டில்’ என்றே ஒலிக்கும்.