கடந்த குடியரசு தின உரையில், இந்தியாவில் 18,452 கிராமங்களுக்கு இன்றும் மின் இணைப்புகள் இல்லை என்றும், அனைத்து கிராமங்களுக்கும் 1,000 நாட்களுக்குள் அதாவது மே 2018-க்குள் மின் மயமாக்க போவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.
இந்த திட்டத்திற்கு Dayal Upadhyaya Gram Jyoti Yojana (DDUGJY) எனப் பெயரிடப்பட்டது. பாரதிய ஜனதாவின் முந்திய பாரதிய ஜன சங்கின் முக்கிய தலைவர் Deen Dayal-யின் பெயரால் தான் இது அழைக்கப்படுகிறது. இத்திட்டமானது ஏற்கனவே செயல்பட்டு வந்த Rajiv Gandhi Grameen Vidyutikaran Yojana திட்டதின் சிறு மாறுதல் தான்.

DDUGJY திட்டதிற்கு 43,033 கோடி வரை செலவாகும் என கணக்கிடப்பட்டு அதில் 33,453 கோடி ரூபாய் மத்திய அரசு தரும் என முடிவு செய்யப்பட்டது.
இந்த திட்டத்தில் மின் இணைப்பே இல்லாத கிராமங்களும், ஏற்கனவே மின்மயமாக்கப்பட்டு இப்பொழுது பராமரிப்பு இல்லாத கிராமங்களும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் சேர்த்து 1,20,947 கிராமங்களில் மின் இணைப்பே இல்லை என்றும், 3,52,855 கிராமங்களில் மின் சீரமைப்பு தேவைப்படுகிறது என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. ஆந்திரா, குஜராத், கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் தமிழ்நாட்டில் மட்டுமே எல்லா கிராமங்களும் மின் இணைப்புப் பெற்றுள்ளன.

இந்த திட்டத்தின் தொடர்ச்சியாக 253 கிராமங்களுக்கு கடந்த ஒரு வாரத்தில் மின் இணைப்புகள் வழங்கப்பட்டதுள்ளது. 2015-2016 ஆண்டுகளில் இதுவரை 5,279 கிராமங்களுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மீதியுள்ள 13,173 கிராமங்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் 9,228 கிராமங்கள் கட்டம் (Grid) மூலமாக மின் இணைப்பு வழங்கப்படவுள்ளது. 3,398 கிராமங்களுக்கு Off Grid மூலம் மின் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மீதியுள்ள 547 கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்குவது மாநில அரசின் கடமையாகும். அசாம் மாநிலத்தில் 1,257 கிராமங்கள், ஜார்க்கண்டில் 429 கிராமங்கள், மேகலையாவில் 250 கிராமங்கள், மத்திய பிரதேசத்தில் 148 கிராமங்கள் இந்த Off Grid மூலம் பயன் பெற உள்ளது.
பிப்ரவரி 8 முதல் 14-க்குள் 253 கிராமங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளது. இதில் 111 கிராமங்கள் ஒடிசாவிலும், 81 கிராமங்கள் அசாமிலும், 40 கிராமங்கள் ஜார்கண்டிலும் உள்ளன. பயன் பெற்ற மீதி 13 கிராமங்கள் ராஜஸ்தானிலும், நான்கு பிகாரிலும், மூன்று மத்திய பிரதேசத்திலும், ஒன்று உத்தர் பிரதேசதிலும் உள்ளது குறிப்பிடதத்தது.

DDUGJY-க்கு போடப்பட்டுள்ள திட்டதின் படி, 13 மாதங்களுக்குள் அதாவது நவம்பர் 2016-க்குள் 35 சதவித கிராமங்களில் வேலையை முடித்தாக வேண்டும்.
ஒரு வாரத்திலேயே 253 கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்க முடிந்த அரசால் ஏனோ இத்திட்டம் செயல்படட் துவங்கியதில் இருந்து 300க்கும் குறைவான கிராமங்களை தான் சென்றடைய முடிந்தது. இதற்கு நிதியும் ஓர் காரணமாக கூறப்படுகிறது. DDUGJY-ல் 90 சதவித நிதி மத்திய அரசும், மீதி 10 சதவித நிதியை மாநில அரசும் வழங்கும்.
நீண்ட காலமாக இருளில் மூழ்கி கிடந்த பல கிராமங்களுக்கு இனியாவது வெளிச்சம் கிடைக்கட்டும். மத்திய அரசு இப்பணியை துரிதமாக செய்யும் பட்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மே 2018 முன்பே இத்திட்டம் முடிய வாய்ப்புள்ளது.

No comments:
Post a Comment