Monetize Your Website or Blog

Saturday, 20 February 2016

பாகிஸ்தானில் ஜம்மு, சீனாவில் காஷ்மீர்: ட்விட்டர் பதிவால் சர்ச்சை!

பாகிஸ்தானின் ஒரு பகுதி ஜம்மு என்றும், சீனாவின் ஒரு பகுதி ஜம்மு-காஷ்மீர் என்றும் ட்விட்டர் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் இடங்கள் தொடர்பான சேவையில் பாகிஸ்தானின் ஒரு பகுதி ஜம்மு என்றும், சீனாவின் ஒரு பகுதி ஜம்மு-காஷ்மீர் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது அந்த வலைதளத்தில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
ட்விட்டரின் இந்த தவறுக்கு, அந்த வலைதளத்தை பயன்படுத்தும் ஏராளமானோர் பல்வேறுவிதமாக கருத்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும், ட்விட்டரின் இந்த செயல், இந்தியாவுக்கு எதிரான எண்ணத்துடன் வெளியிடப்பட்டு உள்ளதாக சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ட்விட்டரின் இந்த தவறு குறித்து, அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். அந்த நிறுவன ஊழியர்களோ, ''தவறு எங்கு நடந்துள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. விரைவில் சரி செய்யப்படும்'' எனக் கூறியுள்ளனர்.

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறுகையில், ''இந்த பிரச்னை குறித்த அந்த நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்படும்'' என்றார்.


No comments:

Post a Comment