இந்த விளம்பரத்தை நம்மில் பலர் பார்த்திருக்கக் கூடும். பிறந்தவுடன் ஒரு குழந்தை மீண்டும் தாயின் கருவறையில் புகுந்து, தன்னைப் படைத்த கடவுளிடமே சென்று, ”இந்த வீட்டில் பிறக்க எனக்கு விருப்பமில்லை; ஏனென்றால் இந்த வீட்டில் இணையதள வசதியே இல்லை” என்று முறையிடும்.
காலம் போகிற போக்கில், இது பெரும் வியப்பிற்குரிய காரியமல்ல என்றுதான் சொல்ல வேண்டும். இணைய வசதி என்பது குழந்தைகளைப் பொறுத்த மட்டில் இன்று, அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறது. இணையமானது, பிள்ளைகளுக்கு எந்த அளவிற்கு அறிவையும், ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறதோ அதே அளவிற்குப் பெற்றோருக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது என்று சொன்னால் அது மிகையல்ல.

பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சை விதைக்கும் விதம் இணையத்தில் பரவிக் கிடக்கும் விஷத்திற்கு எல்லையே இல்லை எனலாம். குழந்தைகள் தாமாகத் தேடிச் செல்லாவிடினும், தேடல் முடிவுகளில் பத்தோடு பதினொன்றாக இத்தகைய உரலிகள் தோன்றிவிட்டால் அந்தக் குழந்தையின் மனநிலை என்னவாகும் என்பதே பெற்றோரின் பெரும் பயம். இந்த பயத்தை நீக்குவதற்காகவே, கூகுள் நிறுவனம் வெளியிட்டிருக்கின்ற தேடுபொறிதான், “கிட்டில்”(kiddle).
குழந்தைகளுக்கான கூகுள் என்று கூறப்படும் இந்த தேடுதளம்; தேடுகிற மூலச்சொற்களின் தேடல் முடிவுகளை, குழந்தைகளுக்கு ஏற்றவாறு வடிகட்டி அனுப்புகிறது. மேலும் ஆபாசமானச் சொற்களோ, வன்முறையானச் சொற்களோ, இந்தத் தளத்தில் தேடப்பட்டால், ‘உங்கள் தேடல் தவறான சொற்களைக் கொண்டுள்ளது, தயவு செய்து மீண்டும் முயற்சிக்கவும்’ என்று பதிலளிக்கிறது இந்த இணையதளம்.

மேலும் குழந்தைகளின் கல்விக்குத் துணை புரியும் நோக்கில், தேடல் முடிவுகள் வடிவமைக்கப்படுள்ளன. எடுத்துக்காட்டாக, ’ஃபேஸ்புக்’ என்று தேடினால் அந்த இணையதளத்தின் உரலியை முதலில் காட்டாமல், ‘ஃபேஸ்புக்’ குறித்த நடப்புச் செய்திகளையோ, அதில் பிரபலமாகியுள்ள சாதனை மாணவர்களையோ, அது குறித்த ஊடகத் தகவல்களையோ, முதன்மைப் படுத்துகிறது இந்தத் தேடுபொறி.
குழந்தைகளை ஈர்க்கும் விதமாக விண்வெளி அமைப்பு, ஏலியன் அனிமேஷன் எனக் கலக்குகிறது ’கிட்டில்’. மேலும் 24 மணி நேரத்திற்கு ஒரு முறை தன் தேடுதல் பதிவுகளை அழித்து விடுகிறது இந்தத் தேடுதளம். இனி பெற்றோர்களுக்கு, ’கூகுள்’ என்ற சொல்லைக் கேட்கும்போதெல்லாம் ‘கிட்டில்’ என்றே ஒலிக்கும்.

No comments:
Post a Comment