Monetize Your Website or Blog

Tuesday, 23 February 2016

மலையாள கரையோரத்தில் நடிகர் விக்ரமின் மதிப்பை உயர்த்திய வீடியோ!

ண்மையில் மலையாள திரையுலகினருக்கான 'ஏசியாநெட் ' பட விருதுவிழா நடைபெற்றது.
விழாவில் ப்ரித்விராஜ், மோகன்லால், நிவின்பாலி, மியா ஜார்ஜ், ஆஷா சரத் உள்ளிட்ட பல மலையாள திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக விக்ரம் மற்றும் த்ரிஷா கலந்துகொண்டு மலையாள நடிகர், நடிகைகளுக்கு விருதுகளையும் வழங்கினர். நிகழ்ச்சியின்  போது நடந்த சம்பவம் ஒன்று வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது.
                 
விழாவில்,   நிவின்பாலி உள்ளிட்ட  பல பிரபலங்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்தார் விக்ரம். அந்த நேரத்தில் விக்ரம் அருகில் வந்த கேரள ரசிகர் ஒருவர், விக்ரமை தழுவி தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். அப்போது நேரத்தில் அங்கு வந்த  வந்த பாதுகாவலர் ஒருவர்,   அந்த ரசிகரை அதட்டி இழுத்துச் சென்றார். இதனால் கோபமடைந்த  விக்ரம், பாதுகாவலரை விலகிச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார். 

பின்னர் அந்த ரசிகரை தன்னிடம் அழைத்து அவருக்கு கை கொடுத்து, செல்ஃபியும் எடுத்துக் கொண்டார். அப்போது அரங்கமே கைதட்டலில் அதிர்ந்தது. இந்த சம்பவத்தால் மலையாள ரசிகர்கள் மத்தியில் நடிகர் விக்ரமின் மதிப்பு மடங்கு பல மடங்கு  அதிகரித்து விட்டதாம்.


No comments:

Post a Comment