தமிழகத்தில் இனி ஜெயலலிதாவுக்கு இடமில்லை என்று ஆவேசமாக காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தி.மு.க.வின் உறுதி முழக்க பேரணியில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் ‘நமக்கு நாமே’ விடியல் மீட்பு பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தார். இந்த பயணத்தின் நிறைவையொட்டி உறுதி முழக்க பேரணி பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் ஆப்பூரில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ''அறிஞர் அண்ணா அவதரித்த பூமி. சீனப்பயணி யுவான்சுவாங் கால் பட்ட பூமி. புத்தர் கால் பட்ட பூமி. அத்தகைய பெருமைமிகு இந்த இடத்தில் நின்று அ.தி.மு.க. ஆட்சிக்கு முடிவுக்கு கட்டும் வகையில் இந்த உறுதி முழக்க பேரணியில் நான் நிற்கிறேன்.
வருகின்ற 24-ம் தேதி ஜெயலலிதாவுக்கு 68-வது பிறந்தநாள் வருகிறது. அவருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அது அரசியல் மரபு. ஆனால் பிறந்தநாளை குறிப்பிடும் வகையில் அரசு செலவில் 68 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவினை நடத்துவது எப்படி முறையாகும்? இது அரசாங்க பணம், மக்களின் வரிப்பணம். அரசு பணத்தில் முதலமைச்சருக்கு விழா நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
என் கண்ணுக்கு எட்டிய வரை எனக்கு எதிரிகள் யாரும் கிடையாது என்று ஜெயலலிதா கூறியுள்ளார். என் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தி.மு.க.வின் தொண்டர்கள் தான் தெரிகின்றனர். இந்த கூட்டம் எதை காட்டுகிறது தெரியுமா? தமிழகத்தில் இனி ஜெயலலிதாவுக்கு இடமில்லை என்பதைத்தான்.
சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முதல் நாளில், மாநாட்டை தொடங்கி வைத்து ஜெயலலிதா பேசும்போது, 'ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடு வந்தது' என்று குறிப்பிட்டார். அடுத்த நாள் மாநாடு முடிவில், 'இன்று ரூ.2.42 லட்சம் கோடி வந்துள்ளது' என்றார். ஒரே நாளில் இவ்வளவு தொகைக்கான முதலீடு கிடைத்ததை எப்படி சரியான புள்ளி விவரத்தோடு சொல்ல முடியும். தனது பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதியை குறிப்பிடும் வகையிலேயே இந்த தொகையையும் அவர் குறித்து அறிவித்திருக்கிறார்.
இந்த மாநாட்டின் மூலம் 4.75 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும், 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது என்றார். இதனை முழுமையாக ஒரு வெள்ளை அறிக்கையாக தாக்கல் செய்யும் தெம்பு ஜெயலலிதாவுக்கு இருக்கிறதா? இந்த மாநாட்டின் மூலம் எத்தனை தொழிற்சாலைகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது? எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது? என்பதை நீங்கள் சொல்லமுடியுமா? இதன் முழு ஆதாரம் என்னிடமும் உள்ளது. இதுகுறித்து என்னுடன் விவாதம் நடத்த நீங்கள் தயாரா? நான் ரெடி, நீங்க ரெடியா?
நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், தரமணி-மாமல்லபுரம் இடையே உயர்மட்ட சாலை அமைக்கும் திட்டம் உள்பட பல திட்டங்கள் அறிவிப்பாக மட்டுமே இருந்து வருகிறது. தொழில் வளர்ச்சி, விவசாயம் எனும் பல்வேறு துறைகளும் இந்த 5 வருட ஆட்சியில் 50 வருடம் பின்னோக்கி போய்விட்டது. இது அ.தி.மு.க. ஆட்சியின் அவலம் என்பதைவிட தமிழகத்துக்கு தேடித்தந்த அவமானம் என்றும், தமிழர்களுக்கு ஏற்பட்ட தலைக்குனிவு என்றே கூறுவேன்.
தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் எனது சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டேன். இந்த பயணத்தில் 11,100 கி.மீ. தூரம் சென்று, 4 லட்சத்து 5 ஆயிரம் மனுக்களை பெற்றிருக்கிறேன். இந்த பயணத்தை மாற்றுக்கட்சி தலைவர்கள் மனதார பாராட்டாவிட்டாலும், உள்ளத்தால் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எனது பயணம் பீதியடைய செய்துள்ளது. இந்த பயணத்தின்போது மாற்றம் எனும் நம்பிக்கையை நான் மட்டுமல்ல, நீங்களும் உணர்ந்து வருகிறீர்கள். 46 நாட்கள் இந்த பயணத்தில் ஈடுபட்டு, அ.தி.மு.க. ஆட்சியின் கொடுமைகளை, அக்கிரமங்களை மக்கள் மத்தியில் எடுத்து கூறியிருக்கிறேன்.
அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை சொன்னால் 36 நாட்கள் ஆகும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். நான் கூறுகிறேன், உங்கள் ஆட்சியின் வேதனைகளை சொல்ல வேண்டும் என்றால் பல வருடங்கள் ஆகும். இந்த பயணத்தில் வேலை வாய்ப்பு கேட்டும், மதுவிலக்கு கோரியும் பல தரப்பினர் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏன் தமிழகத்துக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது? கல்வியிலும், தொழில் வளர்ச்சியிலும் சிறந்த நிலையில் இருந்த தமிழகத்தில், இன்று கொலை-கொள்ளை அதிகம் பெருகிவிட்டது. பெண்கள் வெளியே நடமாட முடியவில்லை. அ.தி.மு.க. ஆட்சி தான் இந்த கொடுமைகளுக்கு காரணம். பொய்யான வாக்குறுதிகள் மூலம் தமிழக மக்களை ஜெயலலிதா வஞ்சித்துவிட்டார்.
அண்மையில் பெய்த கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பினை சந்தித்தது. இந்தளவு வெள்ளம் ஏன் வந்தது? முதலமைச்சர் ஜெயலலிதாவின் அலட்சியமே இதற்கு காரணம். மொத்தத்தில் அது செயற்கை பேரிடரே.
தலைவர் கருணாநிதி தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்புக்கான உண்மை காரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும். நிச்சயம் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும். திருமழிசையில் துணைக்கோள் நகரம் வரும் என்று வாக்குறுதி தந்தார்கள், ஆனால் வரவில்லை.
‘நோக்கியா’, ‘ஃபாக்ஸ்கான்’ ஆலைகள் மூடப்பட்டதால் ஏராளமானோர் வேலை இழந்து வீதிக்கு வந்துள்ளனர். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை உருவாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘அறிஞர் அண்ணா நூல் நிலையம்’ இந்த அரசால் சின்னாபின்னமாகி இருக்கும். உயர் நீதிமன்ற தடை விதித்த காரணத்தால் அந்த கட்டிடம் தப்பித்தது. 5 வருடமாக 110-விதியை பயன்படுத்தி 600-க்கும் மேற்பட்ட திட்டங்களை ஜெயலலிதா அறிவித்தார். அந்த அறிவிப்புகளில் 580 அறிவிப்புகள் கானல்நீர் தான்.
திட்டங்களை நிறைவேற்ற முடியாத ஆட்சியாக அ.தி.மு.க. ஆட்சி செயல்பட்டு வருகிறது. அனல் மின்சாரம், காற்றாலை மின்சாரம், சூரிய ஒளி மின்சாரம் என்பதன் மூலம் 21 ஆயிரத்து 140 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும் என்று ஜெயலலிதா கூறினார். ஆனால் ஒரு மெகாவாட் மின்சாரம் கூட உருவாக்க முடியாத ஆட்சியாக அ.தி.மு.க. அரசு செயல்படுகிறது. நான் கூறியது தவறு என்று நிரூபித்தால் அதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்க தயாராகவே உள்ளேன். போலீஸ் அதிகாரிகள் தற்கொலைகளுக்கான உண்மைகள் தி.மு.க. ஆட்சியில் வெளிவரத்தான் போகிறது. அதற்கு காலம் நெருங்கி வருகிறது" என்றார்.
அதன்பின் அவர் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் முன் பின்வரும் உறுதி முழக்கத்தை ஏற்றார்.
* இந்தியாவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவோம்.
* தொழில் முதலீட்டாளர்களை மதிப்போம்; மின்சாரம் தங்கு தடையின்றி வழங்குவோம்.
* இளைஞர்களை ஊக்குவித்து திறன் மேம்பாட்டு பயிற்சியை வழங்குவோம். வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்.
* தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஊழலை ஒழிக்க ‘லோக் அயுக்தா’ கொண்டுவரப்படும்.
* அரசியல் தலையீடு இல்லாமல் காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்படும்.
* அரசு அதிகாரிகள் உங்களை தேடி வருவார்கள். சேவை உரிமை சட்டத்தின் கீழ், நீங்கள் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. அதை வழங்க தவறினால் அபராதம் எனும் சூழ்நிலையை தருவோம்.
* தமிழகத்தை நிதி ஆதாரம் உள்ள மாநிலமாக மாற்றுவோம்.
* தொழில்துறையை முக்கியமானதாக ஆக்குவோம்.
* விவசாயிகளின் வாழ்க்கையை உயர்த்துவோம்..

No comments:
Post a Comment