Monetize Your Website or Blog

Tuesday, 23 February 2016

நள்ளிரவில் பூஜை நடத்திய பிரேமலதா... எதற்காக, யாருக்காக?

பௌர்ணமி தினத்தையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா நேற்றிரவு வந்திருந்தார். காஞ்சியில் நடைபெற்ற மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டும் என்று காமாட்சி அம்மன் கோயிலில் வேண்டிக்கொண்டார். மாநாடு நினைத்தது போலவே திருப்தியாக அமைந்ததால், வேண்டுதலை நிறைவேற்ற வந்திருந்தார் பிரேமலதா.
 
இரவு 9.15க்கு மணிக்கு பூஜைக்கு வந்த பிரேமலதா, மூன்று மணி நேரம் நடைபெற்ற நவாவரணபூஜை, சிறப்பு பூஜை, சிறப்பு தீப ஆராதனை போன்றவற்றை நடத்தினார். கோயிலின் உள்ளே பொதுமக்கள், பத்திரிகையாளர் என யாரும் அனுமதிக்கப்படவில்லை. மூன்று மணிநேரம் கழித்து நள்ளிரவு 12.15 க்கு வெளியே வந்தார் பிரேமலதா.
 
அப்போது, கோயிலில் அரசியல் பேச வேண்டாம் என்று பத்திரிகையாளர்களுக்கு அன்புகட்டளை போட்டவர், "காஞ்சிபுரத்தில் திருப்பு முனை மாநாடு வெற்றி பெறவேண்டும் என்று காமாட்சி அம்மனை வேண்டி இருந்தோம். வேண்டியது போலவே மிகப்பெரிய அளவில் வெற்றி மாநாடாக அமைந்திருக்கிறது. அதற்காக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு வந்திருக்கிறேன். மாநாடு மட்டும் திருப்புமுனை இல்லை. தமிழ்நாட்டு அரசியலிலும் நிச்சயமாக திருப்புமுனை 2016ல் உருவாகும். தேமுதிக எம்எல்ஏக்கள் பதவி விலகியது என்பது நான்கு வருடத்திற்கு முன்பே நடந்த கதை. அதற்கு இன்று மூடுவிழா நடைபெற்றது" என்கிறார்.


No comments:

Post a Comment