வெப்என்கேஜ் என்ற எண்டர்ப்ரைஸ் ஸ்டார்ட்அப்பின் சீஇஓவான அவ்லேஷ் சிங் இரண்டு ட்வீட்களை தட்டியிருக்கிறார். அதன் சாரம் ,’2016ன் கடைசியில் எங்கள் வருமானம் 10 மில்லியன் டாலர்களை எட்டியிருக்கும். பெரிதாக கவனம் ஈர்க்கவில்லையே தவிர அது கவனச்சிதறல் ஆகாது. நாங்கள் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம்’.
முதலில் எண்டர்ப்ரைஸ் ஸ்டார்ட் அப் என்றால் என்ன?
இவர்களின் சேவைகளும் தயாரிப்புகளும் பெரிய நிறுவனங்களுக்கானது. இவர்களுடைய வேலை தங்கள் ஐடியாக்களின் மூலம் பெரிய நிறுவனங்களின் வேலையை எளிதாக்குவது. எடுத்துக்காட்டாக, எட்ஜ் நெட்வொர்க்ஸ் என்னும் ஹெச்.ஆர் அனலிட்டிக்ஸ் நிறுவனம் தொழில்நுட்ப ஜாம்பவான்களான
விப்ரோவிற்கும் ஹெச்சிஎல்லுக்கும் சேவையாற்றுகின்றன. விப்ரோ, ஹெச்சிஎல்லுக்கு ஒருவர் அனுப்பும் சிவிக்கள்(CV) எட்ஜ் நெட்வொர்க்ஸால் அலசப்பட்டு அவர் எந்த வேலைக்கு தகுதியானவர் என ஆராய்ந்து பின்னரே விப்ரோவிற்கோ ஹெச்சிஎல்லுக்கோ அனுப்பப்படும். இவ்வாறு பெரிய வளர்ச்சியில் இருக்கும் எண்டர்ப்ரைஸ் ஸ்டார்ட்டப்கள்: எண்டர்ப்ரைஸ் செக்யூரிட்டி சர்வீஸ் அளிக்கும் த்ருவா, விளம்பர தொழிநுட்ப சேவைகள் வழங்கும் அடாடின், நிதிநிலை சேவைகள் வழங்கும் எகோ (eko) போன்றவை.கடந்த இரண்டு வருடமாக எண்டர்ப்ரைஸ் ஸ்டார்ட்டப்கள் கடந்து வந்த ட்ராஸ்ஃபர்மேஷன் என்பது அபாரமானது. இவர்கள் ஸ்லீப்பர் செல்களைப் போன்று எந்த ஹைப்பும் இல்லாமல் அவர்களுடைய தொழில்நுட்பம், ஸ்ட்ராட்டஜி, உலக அளவில் தங்களுடைய சேவைகளை கொண்டு செல்லுதல் போன்றவற்றில் தீவிர கவனம் செலுத்தி வந்துள்ளனர். த்ருவா என்ற எண்டர்ப்ரைஸ் செக்யூரிட்டி சர்வீஸ் ஸ்டார்ட்டப் இன்னும் இரண்டு ஆண்டுகளில் தன் முதல் பப்ளிக் ஆஃபரை வெளியிடும் சாத்தியக்கூறுகள் தெரிகின்றன. இது குறித்து அதன் சிஇஓ ஜஸ்ப்ரீத் சிங் கூறும்போது, “2011ல் பெரும்பாலான மக்கள் கன்ஸ்யூமர் செக்டாரில் தான் முதலீடு செய்தார்கள். 2012ல் முதல் முறையாக ஃபேஸ்புக் தன் பப்ளிக் ஆஃபரை வெளியிட்ட போது அது வெற்றிபெறுமா என்பது பெரும் சந்தேகமாகவே இருந்தது. ஆனால் வெற்றி பெற்றது. அதே போல தான் இப்பவும் நடக்கப் போகிறது. இப்போது எண்டர்ப்ரைஸ் மாடல்கள் எல்லாரையும் ஈர்க்கும் வண்ணம் வளர்ந்து வருகின்றன. கடந்த ஆண்டுகளில் முதலீட்டாளர்களில் பெரும்பாலானோர் மெட்ரோவைச் சார்ந்த வணிகங்களில் முதலீடு செய்வதிலிருந்து விலகி எண்டர்ப்ரைஸ் தொழில்நுட்பங்களிலும் சிறு நகர கஸ்டமர் சேவைகளிலும் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர்” என்றார்.

கடந்த மாதம், ஸ்டான்ஃபோர்ட் மற்றும் ட்யூக் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மூன்று நாள் பயிலரங்கு ஒன்றை நடத்தியுள்ளார்கள். மைசூரில் உள்ள இன்ஃபோசிஸ் வளாகத்தில் நடந்த அந்த பயிலரங்கில் தொழில் முனைவோர்கள் 200 பேருக்கு எண்டர்ப்ரைஸ் தொழில்நுட்ப சேவைகளை வழங்குவது மட்டுமல்லாது அந்த வகைமையில் எவ்வாறு தலைமை வகிப்பது என்றும் பயிற்றுவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய பல எண்டர்ப்ரைஸ் மென்பொருள்கள் பயன்படுத்துவோரின் கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை. வலைதளங்கள் வாயிலாகவே பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது சுலபமாக இருப்பதாலும் இவை வேகமாக வளர்வதற்கு ஒரு காரணம்.
ஆன்லைனில் மட்டுமல்ல ஆஃப்லைனிலும் இந்த எண்டர்ப்ரைஸ் மென்பொருள்கள் சக்கைபோடு போடுகின்றன. சில மாதங்களுக்கு முன், டெல்லியைச் சார்ந்த அப்ளிகேட் என்ற நிறுவனம் ’ட்ரேட் ஜினி’ என்னும் மொபைல் அப்ளிகேஷனை வெளியிட்டது. 4500த்திற்கும் அதிகமான ஆஃப்லைன் விற்பனையாளர்களையும் 130 ஆன்லைன் விற்பனையாளர்களையும் இணைத்து ஒரு விநியோக அலைவரிசையையே உருவாக்கி பெரிய அளவில் பேசப்பட்டது.
”இருந்தாலும் இவர்களுக்கும் ஆகப்பெரும் சவால்கள் காத்துக் கொண்டிருக்கின்றன; பத்தில் ஒரு நிறுவனமே குறுகிய காலத்தில் அபார வளர்ச்சி பெறுகின்றன” என்கிறார் பல எண்டர்ப்ரைஸ் மென்பொருள் நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கும் நிறுவனமான நார்வெஸ்ட் வென்ச்சரை சார்ந்த குமார்.
”உங்கள் வேலையை நிதானமாக உங்கள் மார்க்கெட்டோடு இயைந்து செய்யுங்கள்; நிச்சயமாக அவை பலனளிக்கும்” என்று த்ருவாவைச் சேர்ந்த சிங் சொல்லுவது குமாருக்கான பதில்!

No comments:
Post a Comment