Monetize Your Website or Blog

Thursday, 18 February 2016

'என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது' - கருணாநிதிக்கு, அழகிரி சாட்டையடி பதில்!

கட்சியைப் பற்றி கவலைப்படவும், தவறாக செல்லும் போது கேள்வி கேட்கவும் எனக்கு உரிமை உள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதிக்கு, அவரது மகன் மு.க.அழகிரி பதில் அளித்துள்ளார். 

திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து அழகிரி கூறிய கருத்துக்கு, அண்மையில் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் மு.க.அழகிரி தமது முகநூலில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அதில், " திமுக பற்றி கருத்து சொல்ல நீ யார் என, என்னை யாரும் கேட்க முடியாது. ஏனெனில், இந்த கட்சிக்காக மற்றவர்களை விட நான் கூடுதலாக உழைத்துள்ளேன். பலமுறை சிறை சென்றுள்ளேன். நான் தவறு செய்துள்ளேன் என்று சொன்னால், அது கட்சிக்காக நடந்த தவறாகவே இருக்கும்.

இப்படித்தான், கட்சி மீது நான் பற்றுதலோடும், விசுவாசத்தோடும் இருந்திருக்கிறேன். அதனால் கட்சியைப்பற்றி கவலைப்படவும், தவறாக செல்லும் போது கேள்வி கேட்கவும் எனக்கு உரிமை உள்ளது" என்று கூறியுள்ளார்.


No comments:

Post a Comment