மிக மிக வேகமாக தொழில்நுட்பத்திலும், பொருளாதாரத்திலும், சுய முன்னேற்றத்திலும்வளர்ந்து வருகிறோம் நாம். இந்த ஓட்டத்தில் நம்முடைய அடையாளங்களை கொஞ்சம்கொஞ்சமாக இழந்துகொண்டே வருகிறோம். இப்படி விரைவான வாழ்க்கையில் நாம்விட்டுவிட்டு வந்ததில் ஒன்று கோழி வளர்ப்பது என்னும் ஒரு அருமையான வாழ்க்கை!
நாய் ('டாக்'னுதான் சொல்லணுமாமே!) வளர்ப்பதுபோல கோழியை வளர்க்க முடியாது.ஏனென்றால், கோழியை முதலில் 'வளர்க்க' முடியாது. அது உங்களிடம் இருக்கும், உங்கள்வீட்டு செடி, கொடிகளைப் போல அவையும் சத்தமில்லாமல் வளரும். கோழி வளர்த்தால்,நாய், பூனை, பாம்பு, கீரிப்பிள்ளை என ஒரு பலவித விலங்குகளும் வேட்டைக்குஎட்டிபார்ப்பார்கள். இவர்களிடம் இருந்து நம் கோழிக்குடும்பத்தைக் காப்பாற்றுவதே பெரியவேலையாக இருக்கும். அந்த அனுபவங்களை நினைத்துப்பார்த்தால், இயற்கையுடன் ஒன்றிஇருந்ததைப் போல இருக்கிறது.
கோழிகளின் மொழியைப் புரிந்துகொள்வது மகா சிரமம். அவற்றின் அன்பைப் பெறுவதுபேரதிர்ஷ்டம். உங்களிடம் நேரடியாக பேச இயலாத ஒரு ஜீவனின் அன்பைப்பெற்றுவிட்டாலே நீங்கள் கடவுள்தான்.
அதுசரி, கோழி எப்படி அன்பை செலுத்தும்?! முதலில் கோழி-சேவல் ஒரு குடும்பம் என ஒருசூழலுக்குள் நுழைவோம். காலை முதலில் குடும்பத்தலைவர் சேவலார்தான் கூவி நம்மைஎழுப்புவார் என நினைத்தால் அது தவறு. பெரும்பாலும் மேடம் கோழி முதலில் எழுந்துசத்தமில்லாமல், வீட்டைச் சுற்றி மண்ணைக் கொத்திக்கொண்டு திரிவார். ஆனால், சேவல்லேட்டாக எழுந்தாலும், லேட்டஸ்டாக ஒரு 'கூவலை'ப் போட்டுவிட்டு, நல்ல பெயரைவாங்கிச் சென்று விடுவார். காலை ஏழு மணிபோல, நம் கோழிக் குடும்பத்தைப்பார்க்கவேண்டுமே! சேவல் 'கெத்தாக' முன்னே செல்ல, மனைவியார் கோழி பின்னேமண்ணைக் கொத்திக் கொண்டே செல்வார் (சில சமயம் துணைவியாரும் உண்டு!)

வழக்கமாக தீனி போடும் இடத்துக்கு பொறுமையாக வருவார்கள். கோழிகள் தீனியைஆர்வத்துடன் கொத்தி கொத்தி சாப்பிடும். நம் கையில் இருப்பதைக்கூட, உரிமையாககொத்தி திங்கும். ஆனால், தலைவர் சேவல் இருக்கிறாரே! யப்பா! 'உன்னை நம்பி எல்லாம்நான் இல்லை' என்பதுபோல தள்ளி நிற்பார். நாம் தீனியை போட்டுவிட்டு அந்தப் பக்கம்சென்றதும், நைஸாக சாப்பிட்டுவிட்டு சென்றுவிடுவார். அவ்வளவுதான், இனி மாலை வரைசேவல் எங்கிருக்கிறது என்று கண்டேபிடிக்க முடியாது. கோழிகள் நம் வீட்டைச்சுற்றிக்கொண்டுதான் இருக்கும்.
கூண்டோ, கூடையோ செட்டில் ஆக மாலை நேரத்தில் சரியாக ஆஜராகிவிடுவார்கள்.கொஞ்சம் தீனியைப் போட்டுவிட்டு, மூடிவிட்டால் பெரும்பாலும் பிரச்னை செய்யாமல்உள்ளே போய் அமர்ந்து கொள்வார்கள். கொஞ்ச நாள் கழித்து பார்த்தால், கூடைக்குள் ஒருமுட்டை இருக்கும். கோழி கொஞ்சம் சோம்பலாக திரியும். பிறகு, ஒரு மண் சட்டி தயார்செய்து வைத்துவிட்டால், கோழி தானாகவே அதில் முட்டைபோட ஆரம்பித்துவிடும்.லேசான பிரவுன் கலரில் இருக்கும் நம் வீட்டு கோழி போட்ட முட்டையை மட்டும் ஏனோதொடக்கூட மனசு வராது. கோழி அடைகாக்கும்போது, அது கோபமாக இருக்கிறதா?சாதாரணமான மனநிலையில் இருக்கிறதா? என்று கண்டுபிடிப்பதும் சிரமம். கோழிஅடைகாக்கும்போது அதன் முன்னால் ஆள்காட்டி விரலை நீட்டிப் பாருங்களேன். 'ஹிப்னாடிஸம்' செய்வதுபோல நம் கைவிரலை ஆட்டுவதற்கேற்ப, அதன் தலை மட்டும்ஆடும். தீடீரென்று மின்னல் வேகத்தில் ஒரு கொத்து கொத்தும் பாருங்கள். விரலில் ரத்தமேவந்துவிடும். ஆனால், கோபத்தில் கொத்துகிறதா? மற்ற நேரங்களில் கொத்துவதைப்போலவிளையாடுகிறதா என்று கண்டேபிடிக்க முடியாது.

முதல் குஞ்சு பொரித்தவுடன், வீடே குதூகலமாகிவிடும். இனிதான் உங்களிடம் அதிகம்உரிமை எடுத்துக்கொண்டு கோழிகள் பழக ஆரம்பிக்கும். பெரும்பாலும் வீட்டுக்குள் கோழிகள்வராது என்றாலும், குஞ்சுகள் பிறந்தவுடன், சர்வசாதாரணமாக வீட்டுக்குள் சுற்றிவருவார்கள். எங்கள் வீட்டு கோழி குடும்பம், விடியற்காலை எழுந்து, 'கீ..கீ.கீச்' சத்தங்களுடன்வீட்டுக்குள் வருவார்கள். நான் தரையில் படுத்திருந்தால், உரிமையுடன் கோழிக்குஞ்சுகள் என் மேலே ஏறி எழுப்பும். கட்டிலில் இருந்தால், கீழே வந்து கத்தித்தீர்ப்பார்கள். நாய்போலபேர் வைத்து கோழிக்குஞ்சுகளைப் பழக்க முடியாது என்றாலும், அவர்களுடன் நெருங்கிப்பழகிவிடலாம். சில குறிப்பிட்ட குஞ்சுகள் மட்டும் 'ஹைப்பர் ஆக்டிவ்வாக' இருக்கும்.ஏதேனும் ஆபத்தை 'அம்மா' கோழி உணர்ந்தால், குஞ்சுகளை தன் சிறகுகளுக்குள்மறைத்துக்கொள்ளும். அப்போது இந்த 'ஹைப்பர் ஆக்டிவ்' பிள்ளைகள் மட்டும் சிறகுகளில்இருந்து எட்டிப்பார்பார்கள். (இந்த தருணத்தை யாராவது புகைப்படம் எடுப்பார்கள் எனஆவலாக இருக்கிறேன்! பேரழகான காட்சி இது!)
என்னதான் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தாலும், கழுகு, கீரிப்பிள்ளை, பூனைகள்போன்றவற்றில் இருந்து நம் கோழிக்குஞ்சுகளைப் பாதுகாப்பது சிரமம்தான். ஒன்றிரண்டுகுஞ்சுகள் அவற்றிற்கு இரையாகியே தீரும். இது இயற்கைதான். ஆனால், நமக்கும், அம்மாகோழிக்கும் பேரிழப்பாக இருக்கும். மாலை நேரம் நெருங்கியதும், விளையாட்டு மூடுக்குவந்துவிடுவார்கள் நம் கோழிக்குஞ்சுகள். சகஜமாக மேலே ஏறும், தலையில் ஏறும்,உடையை கொத்தி கிழிக்கும். கால் நக இடுக்குகளில் எதையோ தேடும்... என்ன அருமையானவாழ்க்கைங்க அது!

கூண்டிற்குள் அடைக்கும் நேரம் வந்ததும், பெரும்பாலான குஞ்சுகள் தாய் சொல்லைக் கேட்டுஅமைதியாக உள்ளே சென்று அமர்ந்துகொள்ளும். ஹைப்பர் ஆக்டிவ் பிள்ளைகளை மட்டும்,நாம் கெஞ்சிக்கூத்தாடி செட்டில் செய்ய வேண்டியிருக்கும். ஆனால், ஒன்றுகவனித்திருக்கிறீர்களா? ஆபத்து சமயத்தைத்தவிர, சேவல்கள் தன்னுடைய குஞ்சுகளின்வளர்ப்பில் அக்கறை காட்டாததுபோலவே சுற்றும். என்ன உளவியல் இது?
என் சிறுவயதில் நிறைய முறை கோழி வளர்த்திருக்கிறேன். அந்த வயதில் கோழிகளைவிளையாட்டு பொம்மைபோலத்தான் கையாண்டிருக்கிறேன். இப்போது திரும்பிப்பார்க்கும்போது அவற்றினுடன் ஏதோ ஒருவித உறவு இருந்ததை உணர முடிகிறது. எனக்கும்,அவர்களுக்கும் ஏதோ ஒருவித பேரன்பினாலான நெருக்கமும், தொடர்பும் இருந்திருக்கிறது.இப்போது நான் நினைத்தால் எனக்கு அந்த பழைய உலகம் கிடைக்குமா? வருங்காலத்தில் நம்சந்ததியினருக்கு இந்த பாக்கியம் கிடைக்குமா? உங்களுக்கு கிடைக்குமா?
இன்று அந்த வீடு இருக்கிறது! கோழிக்கூண்டு இருக்கிறது! கோழிகள் இல்லை!

No comments:
Post a Comment