Monetize Your Website or Blog

Monday, 29 February 2016

அதுக்கு ஆர்வம் காட்டாத இளசுகள்: ஜப்பானில் குறையுது மக்கள் தொகை!

ஜப்பானின் மக்கள் தொகை, முதல்முறையாக குறைந்துள்ளதாக அந்நாட்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஜப்பானில் மக்கள் தொகை கணக்கெடுப்பு சமீபத்தில் நடத்தப்பட்டது. அதில், கடந்த 5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 10 லட்சம் மக்கள் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. மக்கள் தொகை குறைவிற்கு காரணம் ஜப்பானில் வீழ்ந்து வரும் பிறப்பு வீதமும் அந்நாட்டுக்குள் குடியேறுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளமையும் இதற்கு காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

2050-ம் ஆண்டில், ஜப்பானிய பிரஜைகளில் கிட்டத்தட்ட 40 வீதமானவர்கள் 65 வயதை தாண்டியிருப்பார்கள் அல்லது அதனைவிட வயது முதிர்ந்தவர்களாக இருப்பார்கள் என்றும், இதன் காரணமாக முதியோர்களை பராமரிக்கும் தொகை பெருமளவில் அதிகரிக்கும் என்றும் அந்நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
ஜப்பானில் முதன் முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பு 1920-ம் ஆண்டு எடுக்கப்பட்டது. அதன்பின் முதல்முறையாக தற்போது ஜப்பானில் மக்கள் தொகை வெகுவாக குறைந்துள்ளதாக அந்த ஆய்வு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது. தற்போதைய ஜப்பானின் மக்கள் தொகை 127,110,047 என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதற்கு காரணம், 16 முதல் 19 வயதுள்ள ஆண்களும், பெண்களும் குழந்தை பெற்றுக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டவில்லை என்ற அதிர்ச்சி தகவல், இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


No comments:

Post a Comment