Monetize Your Website or Blog

Tuesday, 23 February 2016

இரங்கலை மறந்து தலைவியை பாராட்டிய கவுன்சிலர்கள்!

ன்று (திங்கள்) காலை 11:00 மணிக்கு சேலம் மாநகராட்சி மாமன்றம் கூடியது. மேயர் வந்து அமர்ந்த உடன்  தி.மு.க., கொறடா தெய்வலிங்கம், ‘‘சேலத்தில் இருந்து, துப்புரவு பணிக்காக நீங்கள் கும்பகோணம் மஹாமகத்திற்கு அனுப்பிய 50 துப்புரவு பணியாளர்களில் முனியப்பன் என்பவர்  இறந்து விட்டார். அவருக்கு மாமன்றத்தின் சார்பாக ஒரு நிமிடம் இரங்கல் தெரிவிக்க வேண்டும்’’ என்றார். மேயரும் சம்மதித்தார்.
ஆனால் அதன் பிறகு  மேயர், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் அனைவரும் ஜெயலலிதாவின் பிறந்த நாள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் கூறி வந்ததால் தி.மு.க.,வினர் கடுப்பானார்கள்.
உடனே தெய்வலிங்கம்,  "இரங்கல் கடைப்பிடிப்பதாகச்  சொல்லி விட்டு ஜெயலலிதாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகிறார்கள்" என்று சொல்லி கூச்சலிட்டார்.
இதனால் மாமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது. மேயர் சவுண்டப்பன் தெய்வலிங்கத்தை வெளியேற்ற சொன்னார். உடனே அவரை குண்டுக்கட்டாக தூக்கி அவை பாதுகாப்பு ஊழியர்கள் வெளியே கொண்டு  வந்தார்கள். 

அப்போது அ.தி.மு.க., மண்டல தலைவர் மாதேஸ், கவுன்சிலர் சரவணன், சுவிட் பாக்ஸ் ஜெயக்குமார் ஆகியோர் தெய்வலிங்கத்தை நோக்கி  வர இரு தரப்புக்குள்  கைக்கலப்பு  நடந்தது. இதனால் அங்கு சற்று நேரம் களேபரம் நிலவி, பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. 


No comments:

Post a Comment