Monetize Your Website or Blog

Monday, 29 February 2016

பாகிஸ்தான் ரசிகருக்கு தோனி கொடுத்த இன்ப அதிர்ச்சி!

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி, பாகிஸ்தானை சேர்ந்த தன்னுடைய தீவிர ரசிகரான பசீருக்கு போட்டிக்கான டிக்கெட் வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
 
62 வயதான முகமது பசீர் தீவிர கிரிக்கெட் ரசிகர். பாகிஸ்தானை சேர்ந்தவராக இருந்தாலும் அவரது ஆதரவை தோனிக்கும் இந்திய அணிக்கு தொடர்ந்து வழங்கி வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா- பாகிஸ்தான் மோதியப் போட்டியை பார்க்க பசீருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. இதனையறிந்த தோனி அவருக்கு உதவியுள்ளார்.

இந்தநிலையில் 2015ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலும் அவர் தொடர்ந்து இந்திய அணிக்காகவும், தோனிக்காகவும் ஆதரவு அளித்து வந்தார். அவருக்கு பல எதிர்ப்பு வந்தாலும் அதை எல்லாம் அவர் கண்டு கொள்ளவில்லை.

இதனிடையே, ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் மோதியப் போட்டியைக் காண பசீருக்கு டிக்கெட் வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் தோனி. இது குறித்து முகமது பசீர் கூறுகையில், ”இந்திய அணித்தலைவர் தோனி எனக்கு நேற்று முன்தினம் நடந்த போட்டிக்கான டிக்கெட் வழங்கினார். அதேசமயம் நான் அப்ரிடியிடம் கேட்கவில்லை. அவரிடம் நான் பேசமாட்டேன். அப்ரிடிக்கு பாகிஸ்தானில் ரசிகர்கள் இருக்கலாம். ஆனால் இந்தியாவில் இருக்க வாய்ப்பு இல்லை. எங்களது அணியில் ஒற்றுமை என்பதே கிடையாது” என்று கூறியுள்ளார்.


No comments:

Post a Comment