Monetize Your Website or Blog

Thursday, 25 February 2016

இப்படி பண்றீங்களேம்மா... ஒரு 'ஐடியா' வாடிக்கையாளரின் குமுறல்!

Idea Recharge Rs.500 இலவசமாக வெல்ல call 53222 toll free- என்று எனது செல்போனுக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்தது. இதை பார்த்த எனக்கு 500 ரூபாய் இலவசமாக கிடைக்கிறதே என்ற ஆசையில் 53222 என்ற எண்ணில் தொடர்பு கொண்டேன். அப்போது, "நியூ சேலஞ்சுக்கு உங்களை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். ஹோண்டா சிட்டி வென்ற லக்கி வின்னராக நீங்களா மாறுங்க. சில கேள்விகளுக்கு பதில் அளித்து 500 ரூபாய்க்கான ரீசார்ஜ் போன்ற அட்டகாசமான பரிசுகளை வெல்லுங்க. ஒவ்வொரு கேள்விக்கும் 3 ரூபாய் வசூலிக்கப்படும். இப்போதிருந்து இரட்டிப்பு புள்ளிகளை பெறுங்கள், அதாவது சரியான பதிலுக்கு 20 புள்ளிகள் கிடைக்கும். உதவிக்கு பூஜ்ஜியத்தை அழுத்தவும். இதே உங்களுக்கான கேள்வி"...
 
இப்படி சில கேள்விகள் கேட்கப்படுகிறது. ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளிக்கும்போது 3 ரூபாய் பிடித்தம் செய்தார்கள். பின்னர் நீங்கள் 2ம் நிலைக்கு சென்று விட்டீர்கள். இனி ஒவ்வொரு கேள்விக்கும் 5 ரூபாய் பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. கேட்கப்படும் கேள்விகளுக்கு உடனடியாக பணமும் எடுக்கப்பட்டு விட்டது.

என் செல்போனில் இருந்ததோ 80 ரூபாய். 7 நிமிடங்களில் எண்பது ரூபாய் காணாமல் போனதுதான் மிச்சம். ஆத்திரத்தில், ஐடியா வாடிக்கையாளர் சேவை அலுவலரை தொடர்பு கொண்டேன். அவரிடம் என்னுடைய ஆதங்கத்தை கொட்டினேன். அவரோ, உங்கள் கஷ்டம் புரிது. எங்கள் தரப்பில் இருந்து 900 கேள்விகள் கேட்கப்படும். நீங்கள் பதில் அளித்தால் உங்களுக்கு பரிசு கிடைக்கும் என்றார். திரும்ப திரும்ப நான் கேட்டுக் கொண்டே இருந்தேன். உடனே, உங்களுடைய அழைப்பை எங்களுடைய உயரதிகாரிக்கு மாற்றம் செய்கிறேன் என்று கூறினார். சுமார் 5 நிமிடங்களுக்கு மேல் நான் காத்திருந்தும் உயரதிகாரியுடன் தொடர்பு கிடைக்கவில்லை. தொடர்பும் துண்டிக்கப்பட்டு விட்டது.
பின்னர், வாடிக்கையாளர் சேவை அலுவலர் சொன்ன, www.ideacellular.com என்ற இமெயில் முகவரிக்கு சென்ற பார்த்தால் இப்படிப்பட்ட தகவலே இல்லை. கடைசியில் நான் 80 ரூபாய் இழந்ததுதான் மிச்சம்.

நான் சொல்ல வருவது என்னவென்றால், இனி இப்படிப்பட்ட கவர்ச்சி எஸ்எம்எஸ், விளம்பரங்களை பார்த்து யாரும் ஏமாற வேண்டாம் என்பதே.


No comments:

Post a Comment