Monetize Your Website or Blog

Thursday, 25 February 2016

குண்டுவெடிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய்தத் விடுதலை!

 மும்பை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய்தத் இன்று(வியாழன்) விடுதலை செய்யப்பட்டார். 

மும்பையில் கடந்த 1993 ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 257 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஏராளமானோர் படு காயம் அடைந்தனர்.
இந்த சம்பவ விசாரணையில்  சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக ஹிந்தி நடிகர் சஞ்சய்தத் கைது செய்யப்பட்டார். 
அவருக்கு மும்பை தடா நீதிமன்றம்  6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. பின்னர் கடந்த 2013 ம் ஆண்டு அவரது சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் 5 ஆண்டுகளாக குறைத்து உத்தரவிட்டு இருந்தந்து.

நடிகர் சஞ்சய் தத் ஏற்கெனவே ஒன்றரை ஆண்டு  தண்டனையை அனுபவித்து விட்டதால், எஞ்சிய மூன்றரை ஆண்டுகள் சிறை வாசத்துக்காக சரண் அடைந்தார். இதைத் தொடர்ந்து அவர் புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வந்தார். இந்நிலையில் அவரை விடுதலை செய்ய முடிவு செய்த மஹாராஷ்டிர அரசு இன்று காலை விடுதலை செய்தது.

நல்ஒழுக்கம் மற்றும் சிறையில் வழங்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்தது ஆகியவற்றை கருத்தில் கொண்டு மன்னிப்பு அடிப்படையில் 8 மாதங்களுக்கு முன்கூட்டியே அவரை விடுவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment