காஞ்சிபுரத்தில் இன்று (20-ம் தேதி) மாலை தே.மு.தி.க.வின் 'தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு' நடைபெறவிருக்கிறது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டமன்றத்திற்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேபோல், கூட்டணி அமைப்பதிலும், அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நல கூட்டணி என ஏற்கனவே தேர்தல் கூட்டணி அமைத்துள்ளது. அந்த கூட்டணி தே.மு.தி.க.வுக்கும், தமிழ் மாநில காங்கிரசுக்கும் ஏற்கனவே அழைப்பு விடுத்திருக்கின்றன.
அதேபோல், தி.மு.க.வும், காங்கிரசும் சமீபத்தில் கூட்டணியை உறுதி செய்தன. மேலும், தி.மு.க.வும் விஜயகாந்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதேபோல், பா.ஜ.க.வும் விஜயகாந்துக்கு கூட்டணீக்கு வருமாறு அழைப்பு விடுத்ததோடு மட்டுமின்றி தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது.
அனைத்து கட்சிகளும் விஜயகாந்த்துக்கு கூட்டணி அழைப்பு விடுத்தாலும், இதுவரை விஜயகாந்த் கூட்டணி குறித்து எதுவும் அறிவிக்காமல் மவுனம் காத்து வருகிறார்.
இதற்கிடையே, தி.மு.க.வுடன் விஜயகாந்த் கூட்டணி அமைப்பார் என்று பேச்சு கிளம்பியது. ஆனால், காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி அமைத்ததால், விஜயகாந்த் கோபம் அடைந்துள்ளார். எனவே, அவர் தி.மு.க.வுக்கு போக மாட்டார் என்றும், தே.மு.தி.க. தலைமையில் தேர்தல் கூட்டணி என்றும், பா.ஜ.க.வுடன் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டிவிட்டது என்றும் பல்வேறு விதமான பேச்சுகள் எழுந்தன.
மேலும், விஜயகாந்த் எந்த காரியத்தை செய்தாலும், தனது குல தெய்வ கோயிலுக்கு சென்று வழிபட்ட பின்னரே செய்வார். அதன்படி கடந்த 15-ம் தேதி அவரது குல தெய்வமான மதுரையில் உள்ள காங்கேயநத்தம் பகுதியில் அமைந்துள்ள 'வீர சின்னம்மாள்' கோயிலுக்கு தனது மனைவி பிரேமலதாவுடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.
அதற்கு மறுநாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலுக்கும் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் சென்று, மாநாட்டுக்கான அழைப்பிதழை வைத்து சுமார் ஒரு மணி நேரம் சிறப்பு பூஜை செய்தார்.
இந்நிலையில், இன்று (20-ம் தேதி) மாலை காஞ்சிபுரத்தில் தே.மு.தி.க.வின் 'தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு' நடைபெறுகிறது. இந்த மாநாட்டின்போது, கட்சி தொண்டர்களின் விருப்பத்தை அறிந்து, கூட்டணி குறித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment