Monetize Your Website or Blog

Thursday, 25 February 2016

தேர்தல் ஆணையத்தின் மீம்ஸை காப்பியடித்ததா திமுக?

தேர்தல் ஆணையத்தின் விளம்பர  மீம்ஸை  காப்பியடித்து திமுக விளம்பரம் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டந்த இரு நாட்களாக திமுக தரப்பில் இருந்து ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. 5 வருஷத்துல அங்க பார்த்துக்கிறீங்களா? இங்க பாத்துருக்கீங்களா? னு அந்த விளம்பரம் கேட்கிறது. அந்த விளம்பரத்தால் திமுகவுக்கு பயன் இருக்கிறதோ இல்லையோ அனைத்து தரப்பினருமே அதே போன்று மீம்ஸ்களை வெளியிட்டு தங்களுக்கு வேண்டியவர்களை கவர முயல்கின்றனர்.
ஆனால் திமுக வெளியிட்ட இந்த விளம்பரமும் தேர்தல் ஆணையம் தரப்பில்  வெளியிடப்பட்ட மீம்சை காப்பியடித்து வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவினை இலக்காக கொண்டு தமிழக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது.
இதற்காக தமிழக தேர்தல்ஆணையம் #TN100percent   ஹேஷ்டேக் உருவாக்கி இளைய தலைமுறையினரை வாக்குச்சாவடிக்கு இழுக்கும் நோக்கத்தில் இயங்கி வருகிறது.   மீம்ஸ் மற்றும் வாசகங்கள் மூலம் கவன ஈர்ப்பு பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளது. 

எந்த வயதினர் வாக்களிக்க தகுதியானவர்கள்? வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? அதனை சரிபார்ப்பது எப்படி? வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா? என பல்வேறு கேள்விகள் தேர்தல் ஆணையத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

அப்படி அப்படி தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட  ஒரு  மீம்ஸ்தான் இங்கே படத்தில் இருப்பது. இதனை பார்த்துதான் திமுக அதே போல் விளம்பரத்தை தயாரித்து பத்திரிகைளில் வெளியிட்டதாக  சொல்லப்படுகிறது. சோ... இதுவும் சொந்த சரக்கு கிடையாதா? என்று திமுகவை தற்போது நெட்டிசன்கள்  கலாய்த்து வருகின்றனர். 


No comments:

Post a Comment