கடந்த தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக களமிறங்கி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டது காமெடி கிங் வடிவேலு. சும்மா இருந்த வடிவேலுவை திமுகவில் தீவிரமாக இயங்கி வந்த அழகிரி பிரசார பீரங்கியாக மாற்றி உள்ளே நுழைத்தார். விஜயகாந்த்துக்கும் வடிவேலுவுக்கும் உச்சக்கட்ட மோதல் இருந்த சமயம் அது. அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்து அந்த தேர்தலில் போட்டியிட்டது.

தமிழ் படங்களில் வடிவேலுவும் உச்சக்கட்ட காமெடி கிங்காக வலம் வந்த சமயமும் அதுதான். தமிழகம் முழுவதும் வடிவேலு பிரசாரம் மேற்கொள்ள, சென்ற இடமெல்லாம் வடிவேலு பேச்சைக் கேட்க, ஆயிரக்கணக்கில் கூட்டம் கூடியது. தனது பேச்சில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை ஒரு பிடி பிடித்தார் வடிவேலு. தனிநபர் தாக்குதலில் இருந்து அத்தனை அநாகரீகங்களும் பிரசார மேடையில் அரங்கேறின. வடிவேலுவுக்கு கூடிய கூட்டத்தை பார்த்து, அதிமுகவும் அரண்டு போனது. வெற்றி திமுகவுக்குதான் என பேச்சும் பரவியது.
வடிவேலுவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக தரப்பு வடிவேலுவின் பகையாளியான சிங்கமுத்துவை களமிறக்கியது. சிங்க முத்து, 'ரெமி மார்ட்டின்' வரை பேசி வடிவேலுவை தெருவுக்கு இழுத்து விட்டார். ஆனால் அந்த தேர்தலை பொறுத்த வரை, மக்கள் ஒரு விஷயத்தை நிரூபித்தனர். ‘‘யார் பேசினாலும் நாங்கள் கேட்போம் சிரிப்போம் போய்கிட்டே இருப்போம். ஆனால் ஓட்டளிப்பது எங்கள் விருப்பப்படிதான் ‘‘ என்பதை நிருபித்தனர். அந்த தேர்தலில் அதிமுக தேமுதிக கூட்டணி அமோகமாக வெற்றி பெற்றது.
நடிகர் வடிவேலு பெட்டிப்பாம்பாக வீட்டுக்குள் அடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதுமட்டுமல்ல அவருக்கு சினிமா வாய்ப்புகளும் கூட அறவே இல்லாத நிலை ஏற்பட்டது. பல பிரச்னைகளையும் சந்திக்க வேண்டி நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். அதற்கு பின் இன்று வரை வடிவேலுவால் ஒரு நல்ல காமெடி படமோ அல்லது நல்ல ஒரு காமெடி கேரக்டரோ அமையவில்லை. கடைசியாக அவர் நடித்த 'எலி ' படம் கூட புலி பாய்ச்சல் காட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டு பலியானதுது£ன் மிச்சம். சோ... அந்த தேர்தலில் ஒரு நல்ல காமெடி நடிகரை இழந்தது தமிழ் சினிமா.
கடந்த 2009 தேர்தலில் ஒரு நல்ல காமெடியனை இழந்தது போல இந்த தேர்தலில் மற்றொரு காமெடியனை இழக்கும் நிலைக்கு தமிழ் சினிமா தள்ளப்படுமோ?. இந்த முறை திமுக காய் நகர்த்தலுக்கு சிக்கியவர் நம்ம இமான் அண்ணாச்சி. இவர் கடந்த இரு நாட்களுக்கு முன்தான், திமுக வில் ஐக்கியமாக்கியிருக்கிறார்.

சின்னத் திரையில் இருந்து பெரியத் திரைக்கு வந்தவர். தனது நெல்லைத் தமிழால் தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தவர். மக்கள் டி.வியில் ''சொல்லுங்கண்ணே சொல்லுங்க முதல் 'குட்டி சுட்டீஸ்' வரை டி.வி. நிகழ்ச்சிகள் நடத்தி தமிழக மக்களின் வீட்டுக்குள் புகுந்தவர். தற்போது பல தமிழ் படங்களிலும் காமெடி ரோல்களில் தலை காட்ட ஆரம்பித்துள்ளார்.கோலி சோடா, பூஜை போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
கடந்த தேர்தலில் வடிவேலுவை பயன்படுத்தியது போல இந்த தேர்தலில் இமான் அண்ணாச்சியை திமுக பயன்படுத்தும். இமான் அண்ணாச்சியும் வாய் திறந்து மாயமாகிவிடக் கூடாது என்பதே நமது ஆசை.

No comments:
Post a Comment