Monetize Your Website or Blog

Saturday, 20 February 2016

பிரபாகரன் உயிரோடு உள்ளார் மீண்டும் ஈழப்போர் தொடங்கும்: பழ.நெடுமாறன் பரபரப்பு பேட்டி!

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றும் மீண்டும் ஈழப்போர் தொடங்கும் என்றும் தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். 

அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்திவரும் போராட்டக்காரர்களை சந்திக்க கோவை வந்திருந்த பழ.நெடுமாறன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறுகையில்,


டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவத் தலைவர் கன்ஹையா குமார் தேச விரோத சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது பாஜகவினர்  விசாரணை அதிகாரி, நீதிபதி, வக்கீல்கள் முன்பு அவரை தாக்கினர். உச்சநீதி மன்றம் மாணவர் கன்ஹையா குமாருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறிய நிலையில் அவரை தாக்கி இருப்பது பா.ஜனதாவின் பாசிச முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது.


தமிழக அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழக அரசு அவர்களின் பிரதிநிதிகளை அழைத்துப்  பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்குக்  கொண்டு வரவேண்டும். 

அத்திக்கடவு–அவினாசி திட்ட பிரசினையில் பவானி ஆற்றில் உற்பத்தியாகும் நீர் 30 டி.எம்.சி. வீணாகக்  கடலில் கலக்கிறது. இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் வறண்டு போய் விட்டன. நிலத்தடி நீரும் 1000 அடி வரை வறண்டு விட்டது. அவினாசி–அத்திக்கடவு திட்டதை நிறைவேற்றினால் 50 அடி அழத்தில் நீர் கிடைக்கும். 500 கிலோ வாட் மின்சாரமும் நமக்குக்  கிடைக்கும். காமராஜர் ஆட்சிகாலத்தில் ரூ.120 கோடியில் இந்தத்  திட்டம் தயாரிக்கப்பட்டது. அதன் பின்னர் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சிகள் மாறிமாறி ஆட்சி செய்தபோது இத்திட்டத்தைக்  கைவிட்டது. தற்போது இத்திட்டத்தை நிறைவேற்ற பல ஆயிரம் கோடி தேவைப்படும் என்று கூறுகிறார்கள். அவினாசி–அத்திக்கடவு திட்டத்தை எந்த அரசு வந்தாலும் குறிப்பிட்ட காலக்கெடுவில் நிறைவேற்ற வாக்குறுதி அளிக்க வேண்டும்.

கடந்த முறை இலங்கை தமிழர்களுக்கு இழைத்த துரோகத்தால் தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்தது. அதே நிலைமையைத் தான் இப்போதும் இந்த கட்சிகள் சந்திக்கும்.

பேட்டியொன்றில், வெளிநாடு வாழ் இலங்கை தமிழ் எழுத்தாளர் கூறும்போது இலங்கை அரசு பிரபாகரன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் இந்திய அரசு பிரபாகரன் இறந்து விட்டதாக இன்றும் அறிவிக்கவில்லை. இறந்து விட்டார் என்றால் இந்திய சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யவேண்டும். அதற்காக இந்திய அரசு அதனை மறைத்து வருகிறது என்று கூறியுள்ளார். 

பிரபாகரன் இறந்து விட்டதாக அறிவித்த அறிவிப்பு பொய்யாகும். பிரபாகரன் உயிருடன் உள்ளார். மீண்டும் ஈழப்போர் தொடங்கும்." என்று தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment