Monetize Your Website or Blog

Monday, 22 February 2016

''எத்தனை முறை கேட்டாலும் அதுதான் என் பதில்''- தோனி காட்டம்

சியக் கோப்பைக்கான  டி20 தொடரில் பங்கேற்கும் டோனி தலைமையிலான இந்திய அணி வங்க தேசத்துக்கு சென்றுள்ளது. அதற்கு முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பில், கேப்டன் தோனி பேசினார். அப்போது தோனியின் ஓய்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதனால் சற்று கோபமடைந்த தோனி,
''ஒரு கடிதம் வாயிலாக என்னிடம் இந்த கேள்வியை கேளுங்கள், அல்லது எனது ஓய்வு குறித்து ஒரு பொது நல வழக்கு போடுங்கள். ஏற்கனவே ஓய்வு குறித்து பதில் அளித்து விட்டேன். மீண்டும் மீண்டும் அதற்கு நான் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை'' ஸ்என்று காட்டமாக பதில் அளித்தார்.

மேலும் டி20 போட்டிகளில்  டாஸில் வெற்றி பெறுவது அவசியம் என்றும் விளையாடும் லெவனை பொறுத்து களத்தில் உக்திகள் மாற்றி அமைக்கப்படும் என்றும் தோனி தனது பேட்டியின் போது தெரிவித்தார். 


No comments:

Post a Comment