அருப்புக்கோட்டையைச் சேர்ந்த அனிதா மேற்கொண்ட பல்வேறு மோசடிகள் தொடர்பாக நமது விகடன் டாட் காமில் ஏற்கனவே செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்நிலையில் அனிதா குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் பல வந்த வண்ணம் இருக்கின்றன.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், " பள்ளி பருவத்திலேயே அனிதாவுக்கு காதல் மலர்ந்துள்ளது. அருப்புக்கோட்டை பள்ளியில் அனிதா படிக்கும்போது அங்கு படித்த எழிலன் (பெயர் மாற்றம்) என்பவரை அவர் உயிருக்கு உயிராக காதலித்துள்ளார். எழிலனும் அனிதாவை விரும்பி உள்ளார். காதலின் வெளிப்பாடாக எழிலன் அனிதாவின் பெயரையும், அனிதா எழிலன் பெயரையும் நெஞ்சில் பச்சையாகக் குத்தியுள்ளனர். இதன்பிறகு இவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். இதையடுத்து கல்லூரியில் படிக்கும் போது குமாரை காதலித்து அனிதா திருமணம் செய்து கொண்டார்.

அனிதாவின் நெஞ்சில் இருந்த எழிலன் பெயர் குறித்து குமார் விசாரித்தபோது, அவர் அதற்கு ஒரு விளக்கம் அளித்துள்ளார். 'என்னுடைய வீட்டில் உள்ள வேலைக்காரர் ஒருவரின் மகன் பெயர் எழிலன். அவன் மீது எனக்கு அளவுக்கடந்த பாசம். திடீரென நோய்வாய்பட்டு எழிலன் இறந்து விட்டான். அவன் நினைவாக அந்தப் பெயரை பச்சை குத்தியுள்ளேன்' என்று தெரிவித்துள்ளார்" என்றனர்.
இது ஒருபுறம் இருக்க, அனிதா பலருக்கு காதல் தூதராகவும் செயல்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தைச் சேர்ந்த சேது, அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் படித்துள்ளார். அப்போது அதே பள்ளியில் படித்த மாணவி ஒருவரை காதலித்துள்ளார். சேதுவின் பக்கத்து வீட்டில் இருந்த அனிதா, அப்போது அவரது காதல் தூதராக செயல்பட்டுள்ளார். இந்தப்பணியை அனிதா திறம்பட செய்துள்ளார். இறுதியில் சேது அந்த மாணவியை கரம் பிடிக்க, அனிதா கடைசி வரை உதவியாக இருந்துள்ளார். சேதுவை அண்ணா என்று அன்போடு அழைக்கும் அனிதா, தன்னுடைய மோசடி வேலையை அவரிடமும் அரங்கேற்றி உள்ளார். இதுதொடர்பாக சேது, அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சேது கூறுகையில், " திருமணம் முடிந்த பிறகு செங்கல்பட்டில் தனியார் கம்பெனியில் பணியாற்றினேன். ஒரு நாள் அனிதா என் வீட்டுக்கு வந்தார். எம்என்சி கம்பெனியில் வேலை பார்ப்பதாக கூறிய அவர், 15 லட்சம் ரூபாயில் ஒரு புராஜெக்ட் இருப்பதாக என்னிடம் சொன்னார். இந்த புராஜெக்ட்டை முடித்துக் கொடுத்தால் 30 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று ஆசை காட்டினார். அவ்வளவு பணம் இல்லை என்று நான் கூறியதும், என்னுடைய மனைவியின் தாலிச்செயினை அடகு வைத்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தேன். அந்த செயினை தாம்பரத்தில் உள்ள வங்கியில் அனிதாவே அடகு வைத்தார். கொடுத்த பணத்தை அவர் எனக்கு தராமல் ஏமாற்றி விட்டார். இப்போதுதான் அவரைப்பற்றிய முழு தகவல்களும் எனக்கு தெரிந்துள்ளது. அண்ணா, என்று சொல்லியே என்னை ஏமாற்றி விட்டார்" என்றார்
அனிதாவைப் பற்றியும், அவர் நிகழ்த்திய மோசடி, காதல் லீலைகள் குறித்தும் புற்றீசல் போல தினமும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

No comments:
Post a Comment