Monetize Your Website or Blog

Tuesday, 23 February 2016

காய்கறி போட்டேன்... கவலையை விட்டேன்! - திராட்சை தோட்டக்காரர்

திராட்சை தோட்டக்காரர் கோயம்புத்தூர் அருகேயுள்ள பல்லடத்தை அடுத்த கேத்தனூர் கிராமம்மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏக பிரபலம்கேத்தனூரைச் சேர்ந்த விவசாயிபழனிச்சாமிக்குதான் இப்படி ஒரு பெயர்திராட்சை என்பது பெயரில் இருந்தாலும் அவர் விளைவிப்பதுஎன்னவோ முழுக்க முழுக்க காய்கறிகள்தான்திருப்பூர் மார்க்கெட்டில் இந்த பழனிச்சாமியின்காய்களுக்கு மவுசே தனி... அந்த அளவுக்கு காய்கறி விவசாயத்தில் புகழ்பெற்றிருக்கிறார்.

அதென்ன திராட்சை தோட்டக்காரர்..., காய்கறி சாகுபடியில் அப்படி என்ன வித்தைகளைக்காட்டுகிறார்...? அவரிடமே கேட்போம்.

பட்டிக்காட்டு மண்வாசத்தோடு பட்டணத்து நாகரிகத்தை குழைத்துப் பூசி கட்டப்பட்டிருக்கும்பழனிச்சாமியின் வீட்டு வாசலில் கப்பல் போல் இரண்டு கார்கள் அடைத்துக் கொண்டு நிற்கின் றன.வீட்டுக்குள் நுழைந்தால் பெரிய டி.வி., கம்ப்யூட்டர் என எங்கு திரும்பினா லும் பட்டணத்து வாசம்தான்.தும்பை பூ நிறத்தில் வெள்ளை வேட்டி-சட்டை சகிதமாக நம்மை வரவேற்று உபசரித்தார்பிறகு, ‘‘வாங்கபேசிக்கிட்டே தோட்டத் துக்கு போவோம்’’ என்று காரை கிளப்பியவர்தோட்டத்தில் போய் நிறுத்தினார்.

'‘அதென்ன... பேர்ல 'திராட்சைத் தோட்டக் காரர்!'னு ஒண்ணு ஒட்டிக்கிட்டிருக்குஆனாதோட்டத்துலபேருக்கு கூட திராட் சையைக் காணோம்?'’ என்று நாம் கேள்வியைப் போட்டோம்.

''
அது 30 வருஷத்துக்கு முன்ன ஒட்டிக்கிட்ட பேருகோயம்புத்தூர் பகுதியில நான்தான் அப்ப பெரியஅளவுல திராட்சை சாகுபடி செஞ்சேன்நல்லா வருமானம் வந்துகிட்டு இருந்ததுதிடீர்னு புதுசுபுதுசாநோய்கள்கட்டுப்படியாகாத விலைனு சில சிக்கல்கள் அப்ப ஏற்பட்டுச்சிவேற ஏதாவது பயிருக்கு நாமமாறிட்டா என்னனு யோசிச்சேன்... கடைசியா காய்கறியில போய் நின் னேன்அதுவே எனக்குநிரந்தரமாகிப்போச்சி'’ என்றவர்சாகுபடி விஷயங்களுக்குள் புகுந்தார்.




‘‘திராட்சை பயிர் செஞ்சப்ப போட்ட பந்தல் கம்பியும்கல்லும் இப்ப காய்கறி சாகுபடிக்கு உதவுது.தமிழ்நாட்டுல புதுசா ஒரு காய்கறி ரகம் வருதுனா அந்தச் செடியை என் தோட்டத்துல பார்க்கலாம்.வருடம் முழுக்க ஏதாவது ஒரு காய்கறி விளைஞ்சிகிட்டே இருக்கும்.

குட்டை வரிப்புடலங்காய் ஒரு ஏக்கர்ல போட்டிருக்கேன்விளைச்சல் முடியுற தருவாயில இருக்கு.இந்தப் புடல சாகுபடியில நிறைய சவுகரியம் இருக்குவிதைக்காக யாருகிட்டேயும் போய் நிக்கவேண்டியதில்லபாரம்பரியமான விதைகளே போதும். 'என்னடா நாட்டு விதையை விதைச்சா...விளைச்சல் அதிகம் கிடைக்குமா?'னு பயப்படவேணாம்பந்தல் கொள்ளாம காய் புடிக்குதுனா பார்த்துக்கோங்க.

அடுத்தாப்ல பூச்சிநோய் இதெல்லாம் பெரிசா தாக்குறதில்லஅதனால ரசாயன மருந்துக்கும்வேலையில்லசெடி வளர்ந்து வரும்போது பத்து நாளுக்கு ஒரு முறை ‘பஞ்ச கவ்யா’ (இயற்கை பூச்சிவிரட்டிதெளிப் பேன்அதனாலயே நம்ம காய்கறிக்கு மார்க் கெட்டுல தனி விலை'' என்று சந்தோஷம்பொங்கச் சொன்னவர்விளைந்து தொங்கும் புடலங்காய்களை கையில் எடுத்துக்காண் பித்துவிட்டுதொடர்ந்தார்.

''இயற்கை விவசாயம்தான் எனக்கு புடிக்கும்ஆனாஇப்போதைக்கு முழுக்க முழுக்கநடைமுறைப்படுத்துறதுல சில சிரமங்கள் இருக்குரசாயன பூச்சி மருந்துங்கள முழுக்க விட்டுட்டேன்.ஆனாரசாயன உரத்தை முழுக்க விடமுடியலகொஞ்சமா அதையும் சேர்த்துதான் போடுறேன்.சீக்கிரமே இதை விட்டுடுவேன்அதுக்குப் பிறகு ‘இயற்கை விவசாயினு தாராளமா சொல்லலாம்.

புடலங்காயைப் பொறுத்தவரை 45-50-ம் நாள் காய் வரத் தொடங்கும்ஒரு நாள் விட்டுஒரு நாள்னு 100நாள் வரைக்கும் காய்களை பறிக்கலாம்ஒரு பருவத்துல மொத்தமா 25 டன் வரைக்கும் காய்கள்கிடைக்கும்செலவெல்லாம் போகமீதி 65,000 ரூபாய் லாபம் நிக்கும்'' என்றபடியே அலைபேசியைஎடுத்துதிருப்பூர் மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை நிலவரம் எப்படி என்று விசாரித்துவிட்டு,நம்மிடம் பேச்சைத் தொடர்ந்தார்.

''என் தோட்டத்துல வருஷத்துக்கு மூணு முறை பயிர் செய்றேன்ஆனாஒரு முறைதான் உழவு ஓட்டு றேன்புடலை சீசன் அஞ்சு மாசம்அது முடிஞ்ச பிறகுஅதே பார்ல கொஞ்சம் தள்ளிபாகற்காய் விதை களைப் போட்டுவேன்அது அஞ்சு மாசத்துக்கு ஓடும்கிட்டத்தட்ட 25 டன் காய் கிடைக்கும்செலவெல் லாம்   போக ஒரு லட்ச ரூபாய் வரை லாபம் கிடைக்கும்அது முடிஞ்ச பிறகு கொடியை அறுத்து விட்டுடுவேன்பந்தல் மேல கொடி காஞ்சிநிலம் பூரா நிழலா இருக்கும்அதுல கொத்து மல்லியை போட்டுடுவேன்சித்திரை மாதம் அக்னி நட்சத்திர வெயில் அடிக்கற நேரம் அதுஎங்கயுமே கொத்துமல்லி வளராதுஆனாநம்ம தோட்டத்துல அந்தப் பந்தலுக்கு அடியில ஜோரா வளரும்காய்கறிக்கு போட்ட உரத்துலயே   வளந்து,40ம் நாள் விளைஞ்சு வந்துடும்கொத்துமல்லியைப் பொறுத்தவரை விதைநிலத்தைக் கொத்தினது இது ரெண்டும்தான் பெரிய செலவுஎல்லாம் போக 40 ஆயிரம் ரூபாய் சொளையா கிடைக்கும்ஆக மொத்தம் ஒரு வருஷத்துல காய்கறி சாகுபடியில என்னோட வருமானம் 2 லட்சத்தி 5 ஆயிரம் ரூபா.  இதுக்கு  காரணம்... என்னோட திட்டமிடலும் என்னோட வேலையாட்களோட உழைப்பும்தான்.  இத்தனைக்கும் என்னோட தோட்டத்துல ஒரு நாளைக்கு 15 நிமிஷம்தான் தண்ணி பாய்ச்ச முடியும்.  அந்த அளவுக்கு  தண்ணியில்லாத பூமி இதுஇந்த நிலையிலயும் என்னை வாழ வைக்கிற காய்கறிகள்தான்   என்னோட காவல் தெய்வங்கள்'' என்று சாகுபடி வரலாற்றை முடித்த பழனிச்சாமி,

''என்னைப் பொறுத்தவரை காய்கறி பயிரை நம்பினாஅது கைவிடாதுங்கறது உறுதியான விஷயம்இதைப் படிக்கறவங்களும் முயற்சி பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க'' என்று சொன்னார்


                                             

இவரின் முகவரிகே.வி.பழனிச்சாமிதிராட்சை தோட்டக்காரர் வீடுகேத்தனூர்திருப்பூர் தாலுகாகோவை-641 671. தொலைபேசி: 04252-279220, 279241 அலைபேசி: 98430 59241.

முதல் உழவு ஓட்டும்போது ஏக்கருக்கு சூப்பர் பாஸ்பேட் நூறு கிலோடி..பி. 75 கிலோமாட்டுச் சாணம்நாலு லோடுஇரண்டாவது உழவு செய்யும்போது பார் அமைக்க வேண்டும்பார்களுக்கு இடையேஅகலம் 12 அடிசெடிகளுக்கு இடைவெளி 5 அடிஒரு குழியில் 4 விதைகள் போடவேண்டும்ஏக்கருக்கு400 கிராம் விதை தேவைப்படும்வளர்ந்து நிற்கும் செடிகளில் நல்ல செடிகளாக மூன்றை மட்டும்விட்டுவிட்டு மற்றதை எடுத்துவிடலாம்.

நடவு செய்த 15-வது நாள் ஜிப்ராலிக் ஆசிட் 1 கிராம் எடுத்து தண்ணியில கலந்து தெளிக்கவேண்டும். 20-ம் நாள் டி..பி. 30 கிலோ, 17:17:17 காம்ப்ளக்ஸ் 30 கிலோபொட்டாஷ் 25 கிலோ ஊறவைத்துஊற்றவேண்டும்கடலைப் புண்ணாக்கு கரைசலையும் கலந்து செடி பக்கத்தில் ஊற்றவேண்டும்.
கொடி வகை காய்கறிகளை தாக்கும் ‘பழ ’ ரொம்ப மோசமானது

பூ மேல இந்த  உட்கார்ந்தால் காய் சொத்தை யாகி சிறுத்துவிடும்இதைக் கட்டுப்படுத்த ரசாயனபூச்சிக் கொல்லி மூவா யிரம் ரூபாய்க்கு தெளிக்க வேண்டும்ஆனால், 600 ரூபாய் செலவிலேயேவிரட்டி விடலாம்பெரிய ரகசியம் ஒன்றும் இல்லை. 'இனக் கவர்ச்சிப் பொறி’ எனும் வெளிநாட்டுசமாச்சாரம் இந்த விஷயத்தில் கைகொடுக்கிறதுபூகாயாக மாறும் சமயத்திலோ... அல்லது செடி நடவுசெய்த 40- ம் நாளோ இந்தப் பொறியை தோட்டத்தில் வைத்துவிட வேண்டும்

அறுவடை வரைக்கும் எடுக்கக் கூடாது.
அடுத்து தொல்லை தருபவை சாறுண்ணிபச்சைப் பூச்சி போன்ற துண்டுதுக்கடா பூச்சிகள்தான்.இவற்றை அழிக்க ரசாயான மருந்து தேவையில்லை. 'சீன எனர்ஜி பல்புஎன்ற ஒன்று விற்கப்படுகிறது.அதை வாங்கி ஒரு ஏக்கர் நிலத்தில் 5 இடத்தில் கட்டிட வேண்டும்இந்த பல்பு மூலமாக 80 %தாய்பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியும்.
 திருப்பூர் மார்க்கெட்டில் உள்ள பாலு என்பவர்தான் பழனிச்சாமியின் காய்கறிகளை வாங்கி வியாபாரம்செய் கிறார்அவரிடம் பேசியபோது, ‘‘அவரு அஞ்சு வருஷமா பழக்கம்அவரைக் காய்பீர்க்கன்காய்,பீட்ரூட்சுரைக் காய்பாகற்காய்னு விதவிதமான காய்கறி கொண்டு கிட்டு வருவாருபொதுவா...பாகற்காய் 20 கிலோ பை 100 ரூபாய்க்கு விற்குதுனா... பழனிச்சாமி தோட்டத்து காய் மட்டும் 120ரூபாய்க்குப் போகும்அதை வாங்கறதுக்கு போட்டியும் போடுவாங்கஅந்த அளவுக்கு காய் தரமாஇருக்கும்'' என்று சான்றிதழ் கொடுத்தார்.


No comments:

Post a Comment