Monetize Your Website or Blog

Saturday, 20 February 2016

காட் ஸ்பீட்: அறிவினால் வெல்லும் போர்க்களம்

குருக்‌ஷேத்ரா பல கல்லூரிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு அறிவு சவால்களை அள்ளி தருவதில் குறைவே இல்லை.  இந்திய விண்வெளி ஆராய்ச்ச்சி மையத்தில் இருந்து வந்திருந்த விஞ்ஞானி  டாக்டர் சேஷகிரி ராவ் மாணவர்களிடம் விண்வெளி அறிவியலில் உள்ள சமீபத்திய தொழில்நுட்பங்கள் குறித்து உரையாற்றினார்.

மாணவர்கள் பலரும் தற்போது தொழில் முனைவர்களாகவே விரும்புவதால் ஃப்ரெஷ் டெஸ்க் நிறுவனத்தை உருவாக்க்கிய  கிரிஷ் மாத்ருபூதத்தின் உரை  கண்டிப்பாக பயனுள்ளதாக  இருந்தது.
அதுமட்டுமல்லாது சர்க்யூட் செய்வது, கோடிங்,ரோபோக்களை கொண்டு சண்டயிடுவது என எதிர்காலத்திற்கே சென்று விட்ட உணர்வை தந்தது குருக்‌ஷேத்ரா.

அறிவியல் யுத்தத்தை மட்டும் மையப்படுத்தாமல் வர்ட் வார் எனப்படும் சொற்கள் போட்டியும் நடைபெற்றது. 3டி பிரிண்டர் செய்வது எப்படி, கேரிகேசர் ஓவியங்கள் வரைய, புகைப்பட கலை, கோடிங், ரூபிக்ஸ் க்யூப் என கற்பனை செய்ய முடியாத அளவிற்கு தலைப்புகளில் பயிற்சி வகுப்புகள் நடந்துள்ளது.

'காட் ஸ்பீட்'- குருக்‌ஷேத்ராவின் ஒரு முக்கிய நிகழ்வு மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு போட்டியும் கூட. கார்கள் பார்க்க தான் சிறியதாக இருக்கும். ஆனால், புயல் வேகத்தில் பறக்கும். நைட்ரஜன் எரிபொருளில் ஓடும் இந்த கார்களை வாங்கி  மாற்றியமைப்பவர்களும் உண்டும், சொந்தமாக வடிவமைப்பவர்களும் உண்டு. அவர்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள ரேசிங் டிராக்கில் தான் நடக்கும் பந்தயம். மாணவர்கள் 3-4 நபர்கள் கொண்ட குழுக்களாக பங்கேற்கின்றனர். ரிமோட் கண்ட்ரோல் கொண்டு அவர்கள் இயக்க மின்னல் வேகத்தில் பாய்கின்றனர் காட்ஸ்பீட் கார்கள்.

புத்தகங்களை தாண்டி மாணவர்கள் செல்ல தூண்டும் வெகு சில இடங்களிலேயே வாய்ப்பும் ஊக்கமும் அளிக்கப்படுகிறது. அப்படி ஒரு களம் தான் இந்த குருக்‌ஷேத்ரா- அறிவினால் வெல்லும் போர்க்களம்


No comments:

Post a Comment