Monetize Your Website or Blog

Thursday, 18 February 2016

ஹைதராபாத்தில் காய்க்கப்போகும் ஆப்பிள்!

லகின் மிகப்பெரிய செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், தனது ‘மேப் டெவெலப்மென்ட்’ பிரிவை ஹைதராபாத்தில் நிறுவ உள்ளது. தனது ‘மேப்’ பிரிவு மொத்தத்தையுமே இந்தியாவிற்கு இடம்மாற்ற ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் உலக தொழில்நுட்ப அரங்கில் இந்தியாவின் மதிப்பு வெகுவாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செல்போன் தயாரிப்பின் காட்ஃபாதரான ஆப்பிள் நிறுவனத்தில் செல்போன், டேப்லட், கம்ப்யூட்டர், மேப்ஸ் என்று பல பிரிவுகள் உண்டு. உலகின் ஒவ்வொரு மூலை முடுக்கையும், சந்து பொந்துகளையும் துல்லியமாகக் காட்டும் ஆப்பிள் மேப் பிரிவு,  தற்போது அமெரிக்காவில் செயல்பட்டு வருகிறது. பயணத்தின் போது பாதைகள் செல்லவும், எந்த இடத்தையும் துல்லியமாகக் காட்டவும் உதவும் ஆப்பிள் மேப், கூகுள் மேப்பைப் போலவே பிரசித்தி பெற்றது.

இப்பிரிவு தற்போது முற்றிலுமாக ஆந்திர தலைநகர் ஹைதராபாத்திற்குள் குடியேறப்போகிறது. ஹைதராபாத்திலுள்ள ‘வேவ் ராக்’ தகவல் தொழில்நுட்ப மையத்தில்,  சுமார் 2லட்சத்து 50 ஆயிரம் சதுரடியில் இப்பிரிவு அமையப்போகிறது. இந்திய மதிப்பில் சுமார் 170 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இந்நிறுவனத்தில்,  ஆப்பிள் மேப்சின் 150 பணியாளர்கள் வேலை செய்யவுள்ளனர். இப்பிரிவின் மூலம் குறைந்தபட்சம் 4,500 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

“தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியாதான் மிகச்சிறந்த திறமைசாலிகளையும், உலகத்தரம் வாய்ந்த வல்லுநர்களையும் கொண்டுள்ளது. அதை எதிர்பார்த்துதான் ஆப்பிள் நிறுவனம் இத்தகைய முடிவை எடுத்துள்ளது” என்கிறார் தொழில்நுட்ப வல்லுநர் ஆனந்த் சுப்ரமணியம்.
“இந்தியாவில் மட்டுமல்ல, இப்பிரிவை அமைக்க ஆப்பிள் நிறுவனம்  உலகின் பல்வேறு நகரங்களை ஆராய்ந்தது. தகவல் தொழில்நுட்பத் துறையில் வேகமாக முன்னேறி வருவதாலும், சிறந்த வல்லுநர்களைக் கொண்டுள்ளதாலுமே ஹைதராபாத்தை தேர்வு செய்துள்ளனர். ஆப்பிள் நிறுவனத்தின் முன்னணி நிறுவனர்கள் வந்து பார்வையிட்ட பின்னர்,  அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்” என்று தெலங்கானாவின் தகவல் தொழில்நுட்பத்துறை செயலர் ஜெயேஷ் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.


இந்தியாவின் திறமைசாலிகள் பலரும் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட, இங்கே இருக்கும் திறமைசாலிகளை பயன்படுத்திக்கொள்ள,  இத்தகையதொரு மிகப்பெரிய முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது ஆப்பிள் நிறுவனம். சிறிது காலம் முன்னர் மைக்ரோ சாஃப்ட் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெல்லாவும், தங்கள் நிறுவனத்தின் பிரிவை ஹைதராபாத்தில் அமைப்பது பற்றி  பேசியிருந்தார்.
புதிதாய் மலர்ந்துள்ள தெலங்கானா மாநிலத்திற்கும் இவை மிகப்பெரிய வளர்ச்சியாய் இருக்கும். மாநிலத்திற்கு மட்டுமல்லாது, ஒரு தொழில்நுட்பப் புரட்சிக்கு  உதவிகரமாய் இருக்கும். ஹைதராபாத்தில் காய்க்கும் இந்த ஆப்பிள்,  நம் தேசத்திற்கு நிச்சயம் தங்க ஆப்பிளாகவே இருக்கும்.


No comments:

Post a Comment