Monetize Your Website or Blog

Monday, 22 February 2016

சட்டசபை தேர்தல்: திமுகவினரிடம் நேர்காணல்- ஃபேஸ்புக்கில் கருணாநிதி நேரடி ஒளிபரப்பு!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் அக்கட்சித் தலைவர் கருணாநிதி இன்று நேர்காணல் நடத்தினார். இதனை தனது ஃபேஸ்புக்கில் நேரடியாக அவர் ஒளிபரப்பு செய்தார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இதற்கான ஆயுத்த பணிகளில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ளது. அனைத்து கட்சிகள் சார்பில் தொண்டர்களிடம் இருந்து விருப்பமனு வாங்குதல் நிறைவு பெற்றுள்ள நிலையில், தி.மு.க. இன்று (பிப்.22) முதல் வேட்பாளர் நேர்காணலை நடத்தி வருகிறது.
 
சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு நேர்காணல் தொடங்கியது. விருப்பமனு செய்த தொண்டர்களிடம் தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் நேர்காணல் நடத்தி வருகின்றனர். இந்த நேர்காணலை கருணாநிதி தனது ஃபேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்து வருகிறார்.

நேர்காணலுக்கு வரும் தொண்டர்களிடம் போட்டியிட விரும்பும் தொகுதியின் நிலவரம், வெற்றி வாய்ப்பு குறித்தும் அவர்கள் கருத்து கேட்டு வருகின்றனர். முதல் நாளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்கள் காலையிலும், மாலையில் விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் பங்கேற்க உள்ளது.

தே.மு.தி.க. நேர்காணல்


இதேபோல், தே.மு.தி.க.வும் விருப்பமனு செய்த தொண்டர்களிடம் இருந்து இன்று முதல் நேர்காணல் நடத்த உள்ளது. இதற்காக கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கட்சியின் தலைவர் விஜயகாந்த், இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் கட்சியின் மாநில நிர்வாகிகள் நேர்காணலில் கலந்து கொள்ள உள்ளனர்.

முதலில் திருவள்ளூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் இன்று காலை 9 மணிக்கு கட்சி தலைவர் விஜயகாந்த் முன்னிலையில், சென்னை கோயம்பேட்டிலுள்ள தலைமை கழகத்தில் நடைபெற்று வருகிறது.

நேர்காணலுக்கு வருபவர்கள் கட்சி உறுப்பினர் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, கல்வி சான்றிதழ், தனித்தொகுதிக்கு தேவையான சாதி சான்றிதழ் ஆகியவற்றின் அசல் சான்றிதழ்களை கண்டிப்பான உத்தரவு போடப்பட்டுள்ளது.

ஒரே நாளில் தி.மு.க.வும், தே.மு.தி.க.வும் நேர்காணல் நடத்துவது அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. 


No comments:

Post a Comment