Monetize Your Website or Blog

Tuesday, 23 February 2016

'இந்தியா செத்துக் கொண்டிருக்கும் போது வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது?'

ற்போது டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நடந்து வரும் நிகழ்வுகள் தனக்கு கடும் வேதனையை அளிப்பதாக மலையாள நடிகர் மோகன்லால் கருத்து வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது பிளாக்கில்,  'இந்தியா செத்துக் கொண்டிருக்கும்போது நாம் வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது? ' என்று அவர் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார். அதன் தமிழ் சாராம்சம் இங்கே...
''சியாச்சினில் நடந்த பனிச்சரிவில் 10 இந்திய ராணுவத்தினர் மரணமடைந்தனர். அதில்,  தனது 4 மாத குழந்தையை கூட பார்க்க முடியாத நிலையில் மரணமடைந்த சுதீசும் ஒருவர். மகளை பார்க்கக் கூட விடுமுறை எடுக்க முடியாமலேயே சுதீஷ் இறப்பை தழுவியுள்ளார். அதே வேளையில் நேரு பல்கலையில் பேச்சுரிமை, தேசப்பற்று என்ற பெயரில் நடக்கும் போராட்டங்களையும் என்னால் பார்க்க முடிகிறது. 

நாட்டுக்காக கடும் குளிர் நிறைந்த பிரதேசத்தில் பணியாற்றி இறப்பை சந்தித்திருக்கும் தருவாயில் இப்போது தேசப்பற்றுக்கு நாம் பொருள் தேடிக் கொண்டிருக்கிறோம். இது நாட்டுக்காக உயிரிழந்தவர்களை நிச்சயம் அவமதிக்கும் செயல். இப்படி போராட்டம் நடத்துபவர்கள் பாதுகாப்பாக இருக்கவும்,  பல்கலை சென்று படிக்கவும் எல்லையோரத்தில் போராடும் இவர்கள்தான் காரணம் என்பதை மறந்து விட்டனர்.

நாம் வீட்டில் வசதியாக உட்கார்ந்து கொண்டு டி.வி. பார்ப்பதற்கும் அவர்கள்தான் காரணம். தேசப்பற்றுக்கு பொருள் தேடுபவர்கள்தான் ராணுவத்தினரையும் விமர்சிக்கின்றனர். தங்கள் குடும்பத்தினரை கூட பார்க்க முடியாமல் அவர்கள் உங்களை காக்கின்றனர். அதற்காக பாதுகாப்பு படையினருக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேசத்துக்கு எதிராக பேசுபவர்கள் பற்றியும் தனது கருத்தை நடிகர் மோகன்லால் வெளியிட்டுள்ளார்.
அதில், ''பெற்றோர் சிறுவயது முதலே குழந்தைகளை தேசப்பற்றுடன் வளர்க்க கற்றுக் கொள்ள வேண்டும். தேசத்தின் அருமை பெருமைகளை கூறி கூறி வளர்க்க வேண்டும். சுதந்திரத்தின் உண்மையான அர்த்தத்தை அவர்கள் மனதில் விதைக்க வேண்டும் ''என மோகன்லால் கூறியுள்ளார்.

நடிகர் மோகன்லால் இந்திய ராணுத்தால் கவுரவ லெப்னிடன்ட் கர்னலாக நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.  


No comments:

Post a Comment