திமுகவில் மறுபடியும் இணைவீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த மு.க.அழகிரி, நான் கூறுவதைத்தான் எழுதுவீங்களா? நீங்களே எதையாவது எழுதுறீங்க என்று செய்தியாளர்களிடம் கோபத்துடன் கூறிவிட்டு சென்றுவிட்டார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம், திமுகவில் மீண்டும் அழகிரி இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகிறதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த ஸ்டாலின், "அது வதந்தியாகத்தானே உள்ளது. அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது. இதுபற்றி நான் கருத்துக் கூற வேண்டிய அவசியம் இல்லை" எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு வந்த மு.க.அழகிரியிடம், நீங்கள் திமுகவில் மறுபடியும் இணைவீர்களா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த அழகிரி, "நான் கூறுவதைத்தான் எழுதுவீங்களா? நீங்களே எதையாவது எழுதுறீங்க..." என்று கோபத்துடன் கூறிவிட்டு காரில் ஏறி சென்றுவிட்டார்.

No comments:
Post a Comment