Monetize Your Website or Blog

Thursday, 4 February 2016

இரு கையாலும் ஸ்பின் வீசும் பந்துவீச்சாளர்: புலம்பும் வர்ணணையாளர்கள்! (வீடியோ)

ஒரு பந்துவீச்சாளர் பந்துவீச வருகிறார். இவர் ஒரு இடது கை சுழற்பந்து வீச்சாளர் என வர்ணணை சொல்லப்படுகிறது. வந்தவர் 4 பந்து இடது கையில வீசுகிறார். 5வது பந்தை வலது கையில் வீசினால் என்ன செய்வீர்கள். இப்படியும் ஒருத்தர் இலங்கை அணியில் விளையாடிக் கொண்டிருக்கிறார். இலங்கை அணியில் 19 வயதுக்குட்பட்ட அணியில் உள்ள கமிண்டு மெண்டிஸ்தான் இப்படி ஒரு காரியத்தை செய்து பேட்ஸ்மேன்களை கதி கலங்க வைக்கிறார்.
 

அதாவது வலது கை பேட்ஸ்மேன் என்றால் இடது கையாலும் இடது கை பேட்ஸ்மேன் என்றால் வலது கையாலும் பந்துவீசி கமிண்டு அசத்துகிறார். ஏன்யா இப்படினு கேட்டால்  ''கிரிக்கெட்டில் வலது கை பேட்ஸ்மேன் திடீரென்று இடது கை பேட்ஸ்மேனாக மாறி விளாசுவதில்லையா அதுபோல்தான் இதுவும்'' என்கிறார் கமிண்டு. 
 

பாகிஸ்தானுக்கு எதிராக அண்மையில் நடந்த போட்டியில் கமிண்டு இப்படி இரு கையாலும் பந்து வீசி அசத்தினார். அவர் எப்படியும் அசத்திட்டு போகட்டும் எங்களை ஏன்யா குழப்புறீங்கனு வர்ணணையாளர்கள் புலம்புகின்றனராம்!



No comments:

Post a Comment